வகை  |  odb

உண்மையான செய்தித் தொடர்பு

என்னுடைய வட லண்டன் சுற்றுப்புறங்களில் நான் நடந்து செல்லும்பொழுது, போலிஷ், ஜப்பானிஷ், ஹிந்தி, குரோயேஷியன், இத்தாலியன் என்பது போன்ற பல மொழிகளில் மக்கள் தனித்தனியே உரையாடுவதைக் கேட்க முடியும். இப்படிப்பட்ட வேற்றுமை எனக்கு பரலோகத்தை ருசிப்பது போன்ற ஓர் உணர்வை உண்டாக்கும். ஆனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியாது. ஓர் ரஷ்ய உணவுவிடுதி, அல்லது போலிஷ் சந்தைக்குள் நான் நுழையும்பொழுது வேறு வேறு விதமான பேச்சு வழக்குகளையும், சத்தங்களையும் கேட்க முடியும். அப்பொழுது பெந்தெகொஸ்தே நாளன்று சீடர்கள் என்ன பேசினார்கள்…

எளியோரின் தேவன்

ஒரு சிலருடைய வாழ்க்கையில் தேவன் அவர்களுக்குச் செய்த அற்புதங்களைப்பற்றிய சாட்சிகளைக் கேட்கும்பொழுது, அது நமக்கு ஓர் சவாலை ஏற்படுத்தும். ஜெபத்திற்குக் கிடைக்கும் பதில்களைப்பற்றி நாம் கேட்டு, மகிழ்ச்சியுறும் பொழுது, சமீப காலத்தில் ஏன் தேவன் நமக்கு அற்புதங்கள் செய்யவில்லை என்று எண்ணத் தோன்றும்.

ஆபிரகாமுக்கு அதிசயிக்கும் விதங்களில் தன்னை வெளிப்படுத்தினது போல நமக்கும் செய்தால் தேவனுக்கு உண்மையுள்ள ஊழியக்காரர்களாக இருக்க அதிகமாக ஊக்குவிக்கப்படுவோம் என்று நாம் எண்ணுவது சரியே. ஆனால் தேவன் ஆபிரகாமுக்கு 12–14 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தம்மை வெளிப்படுத்தினார். ஆபிரகாமின் பெரும்பான்மையான பயணம்…

நான் சொல்வதை மறுபடியும் திரும்பச் சொல்

ரெபேக்கா ஓர் மாநாட்டின் மேடையில் ஒலிபெருக்கி முன் நின்று பேசியபொழுது, அவள் பேசியது அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. அவள் பேசிய வார்த்தைகளையே அவள் திரும்பக் கேட்டபொழுது சற்று சிரமமாக இருந்தது. இந்தத் தவறான ஒலி அமைப்பு முறையை அவள் சீர்செய்து, அந்த எதிரொலியை கவனிக்காமல் விட்டுவிட முயற்சித்தாள்.

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும், திரும்பவும் நாமே கேட்க நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்! “நான் உன்னை நேசிக்கிறேன்,” அல்லது “நான் செய்தது தவறு” அல்லது “உமக்கு நன்றி, தேவனே” அல்லது…

அழுகையும் சிரிப்பும்

கடந்த ஆண்டு நடந்த புத்துணர்வு முகாமில், நீண்ட நாட்களாக பார்க்காத என் சிநேகிதிகள் சிலரைச் சந்தித்தேன். நாங்கள் மறுபடியுமாக ஒன்றாகச் சேர்ந்ததைக் குறித்து சிரித்து மகிழ்ந்தேன். ஆனால் அவர்கள் நட்பை நீண்ட நாட்கள் இழந்ததினால் அழவும் செய்தேன்.

இறுதி நாளில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கர்த்தருடைய பந்தியை ஆசரித்தோம். அதிக சிரிப்பும், கண்ணீரும்! எனக்கு நித்திய ஜீவனையும், என் சிநேகிதிகளோடு இருக்க இந்த அருமையான நாட்களைத் தந்த தேவ கிருபையை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். என்னைப் பாவத்திலிருந்து விடுவிக்க இயேசு கொடுத்த விலைக்கிரயத்தை எண்ணி…

பாதுகாப்பு வலை

மத்தேயு 5–7ல் காணப்படும் மலைப்பிரசங்கம் யாரும் செயல்படுத்த முடியாத மனிதனின் நடத்தையை அளவிடும் ஓர் அளவுகோல் என அநேக ஆண்டுகளாக நான் கருதினேன். எப்படி நான் அதன் உண்மையான அர்த்தத்தைக் காணத் தவறினேன்? நம்மை சோர்வுக்குள்ளாக்க அல்ல, ஆனால் தேவன் எப்படிப்பட்டவர் என்று கூறவே இயேசு இவ்வசனங்களைப் பிரசங்கித்தார்.

நாம் நம் சத்துருக்களை ஏன் நேசிக்க வேண்டும்? ஏனென்றால் நமது இரக்கமுள்ள பிதா தமது சூரியனை நல்லோர் மேலும், பொல்லாதோர் மேலும் உதிக்கச் செய்கிறார். பரலோகத்தில் ஏன் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும்? ஏனென்றால்,…

நமது புதிய நாமம்

அவள் தன்னைத்தானே “கவலைப்படுபவள்” என்று அழைத்துக்கொண்டாள், ஆனால் அவள் குழந்தை ஓர் விபத்தில் காயப்பட்ட பொழுது அந்தப் பெயரிலிருந்து தன்னை எவ்வாறு விடுவித்துக் கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டாள். அவள் பிள்ளை சுகமடைந்து வரும்பொழுது, ஒவ்வொரு வாரமும் சிநேகிதருடன் பேசவும், ஜெபிக்கவும் கூடிவந்து தேவனிடமிருந்து உதவியையும், சுகத்தையும் வேண்டி நின்றாள். பல மாதங்களாக இவ்வாறு தன் பயத்தையும், தேவைகளையும் தேவனிடத்தில் வைத்தபொழுது, தான் ஓர் “கவலைப்படுபவளாக” இருந்த நிலையிலிருந்து “ஜெபவீராங்கனையாக”மாறுவதை உணர்ந்தாள். இந்த தேவையற்ற தலைவலி போன்ற போராட்டத்தால் தேவனோடு அவளுக்குள்ள ஐக்கியம் மிகவும் ஆழமாகியது.…

உண்மையில் எது முக்கியம்

இரண்டுபேர் தங்கள் வியாபார நிமித்தமாகப் பயணம் செய்து வந்ததின் பலனைப்பற்றி மறு ஆய்வு செய்தார்கள். “இந்தப் பயணத்தின்மூலம் ஏற்பட்ட புதிய உறவுகளின்மூலம் புதிய வாணிபத் தொடர்புகள் ஏற்பட்டதால் அது பயனுள்ளதாகவே இருந்தது” என்று தான் நம்புவதாக ஒருவர் கூறினார். “உறவுகள் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் நாம் நம் பொருட்களை விற்பனை செய்வதுதான் மிக முக்கியமானது” என்று அடுத்தவர் கூறினார். இதிலிருந்து அவர்கள் வேறுபட்டக் கருத்துக்களை உடையவர்களாயிருந்தார்கள் என்று தெளிவாகத் தெரிந்தது.

வாணிபத்திலோ, குடும்பத்திலோ அல்லது திருச்சபையிலோ, பிறர் எவ்விதத்தில் நமக்கு பயனுள்ளவர்களாக இருப்பார்கள் என்று…

அதிக நன்மையாயிருக்கும்

ஓர் சிறுவனின் வீட்டிற்கு வெளியே அபாயச் சங்கு ஒலித்தது. பழக்கமில்லாத அந்த சத்தத்தைக் கேட்ட அவன் அது என்ன சத்தம் என்று தன் தாயிடம் கேட்டான். ஆபத்தான ஓர் புயல் வருவதை மக்களுக்கு அறிவித்து மக்களை எச்சரிக்கையாய் இருப்பதற்காக ஊதப்படுகிறது என்று அவனுக்கு அவன் தாய் விவரித்தாள். மக்கள் ஓடி ஒளிந்துகொள்ளாவிட்டால் அந்தப் புயலின் தாக்கத்தால் மடிந்து போவார்கள் என்றாள். “அம்மா அது என்ன மிக மோசமான காரியமா? நாம் மரித்துப்போனால் இயேசுவை சந்திப்போமல்லவா?” என்று கேட்டான்.

சிறு பிள்ளைகள் மரித்துப்போவது என்றால் என்ன…

இதை பிரசித்தம் பண்ணு!

என் வாழ்க்கையில் 1975ம் ஆண்டு மிக முக்கியமான ஓர் காரியம் நடந்தது. நான் என் சிநேகிதன் பிரான்சிசை சந்தித்து என் தனிப்பட்ட பல காரியங்களைப் பகிர்ந்து கொண்டு, எனக்கு நடந்ததைக் கூற விரும்பினேன். அவன் தன் வீட்டிலிருந்து அவசர அவசரமாக வெளியே கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். ஆனால் நான் அவனை சற்று தாமதித்துப்போகக் கூறினேன். அவன் என்னிடம் பேச ஆரம்பித்ததிலிருந்து நான் ஏதோ முக்கியமான காரியத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்பதை உணர்ந்து கொண்டு,“என்ன காரியம்”? என்று கேட்டான். நான் மிகவும் அமைதலாக…