என் வாழ்க்கையில் 1975ம் ஆண்டு மிக முக்கியமான ஓர் காரியம் நடந்தது. நான் என் சிநேகிதன் பிரான்சிசை சந்தித்து என் தனிப்பட்ட பல காரியங்களைப் பகிர்ந்து கொண்டு, எனக்கு நடந்ததைக் கூற விரும்பினேன். அவன் தன் வீட்டிலிருந்து அவசர அவசரமாக வெளியே கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். ஆனால் நான் அவனை சற்று தாமதித்துப்போகக் கூறினேன். அவன் என்னிடம் பேச ஆரம்பித்ததிலிருந்து நான் ஏதோ முக்கியமான காரியத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்பதை உணர்ந்து கொண்டு,“என்ன காரியம்”? என்று கேட்டான். நான் மிகவும் அமைதலாக “நேற்று என்னை முற்றிலும் இயேசுவுக்கு அர்ப்பணித்துவிட்டேன்” என்று கூறினேன்.

பிரான்சிசும் என்னைப் பார்த்து,“நானும் இன்று வரை இதே காரியத்தைச் செய்ய வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்” என்று பெருமூச்சுடன் கூறினான். அவன் நடந்தது என்ன என்று பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டான். நானும் நேற்றைய தினம் ஒருவர் நற்செய்தியைக் கூறி விவரித்ததையும், நான் எவ்விதம் இயேசுவை என் உள்ளத்தில் வாரும் என்று ஜெபித்ததையும் பற்றிக் கூறினேன். அவன் கண்ணீர் விட்டது இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. அவனும் ஜெபித்து பாவமன்னிப்பைப் பெற்று இயேசுவை ஏற்றுக்கொண்டான். நானும் அவனும் நிதானமாக, இயேசுவுடன் எங்களுக்கு ஏற்பட்ட புதிய உறவைப்பற்றி பேசினோம்,  பேசினோம், பேசிக்கொண்டே இருந்தோம்.

அசுத்தாவி பிடித்திருந்த மனிதனை இயேசு குணமாக்கிய பின்பு,“நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப் போய், கர்த்தர் உனக்கு இறங்கி உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவி” என்று சொன்னார் (மாற். 5:19). அவன் ஓர் வல்லமை மிக்க பிரசங்கம் செய்யத் தேவை இல்லை. தனக்கு நிகழ்ந்த காரியத்தை அவன் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் மனம் திரும்பிய அனுபவம் எப்படிப்பட்டதாயிருந்தாலும் பரவாயில்லை, அந்த மனிதன் செய்த காரியத்தை நாமும் செய்ய வேண்டும்” (அவன்) போய் இயேசு தனக்கு செய்த எல்லாவற்றையும்… பிரசித்தம் பண்ணத்தொடங்கினான் (வச.20).