அவர் அறிந்திருக்கிறார்
இரவில் அயர்ந்த நித்திரை செய்வதற்கு சில சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஒருநாள் மாலை நான் அவள் படுக்கை அறையை விட்டு வெளிவந்த பொழுது, என் மகள் அப்படிப்பட்ட காரணம் ஒன்றை என்னிடம் “நான் இருட்டைப் பார்த்து பயப்படுகிறேன்” என்று கூறினாள். அவளுடைய பயத்தைப் போக்க முயற்சி செய்துவிட்டு, விடிவிளக்கை எரியவிட்டு, அந்த வெளிச்சத்தில் பயங்கர ஜந்துக்கள் ஒன்றும் இல்லை என்பதை அவள் அறிந்து கொள்ள விட்டு வந்தேன்.
சில வாரங்கள் கழித்து வியாபார விஷயமாக என் கணவன்…
நகராமல் நட
“மார்க்டைம் மார்ச்” என்ற இராணுவ உத்தரவின் அர்த்தம் என்னவெனில் முன்நோக்கிச் செல்லாமல் நிற்கும் இடத்திலேயே நட என்பதாகும். இது எந்த வித முன்னேற்றமுமின்றி அடுத்து முன்னேறிச் செல்வதற்கான கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஓர் செயல் ஆகும்.
அன்றாட வாழ்க்கையிலும் முன்னேறிச் செல்லாத நிலைப்பாடு, எந்தவித நோக்கமும், வேலையும் செய்யாமல், ஆனால் அதே சமயத்தில் காத்திருக்கும் நிலையை “மார்க்டைம்” என்ற பதம் குறிப்பிடுகிறது. இது ஓர் தேக்கமுற்ற வாழ்க்கைச் சூழ்நிலை போன்று காணப்படுகிறது.
இதற்கு எதிர்மாறாக வேதத்தில் நாம் வாசிக்கும் ‘காத்திரு’ என்ற பதம் ஆவலோடு…
தவறாக இடத்தில் நம்பிக்கை
வெவ்வேறு பறவை இனங்கள் வாழ்ந்த அடர்ந்த காடுகள் நிறைந்த “கானா நாட்டிலுள்ள” ஒரு கிராமத்தில் நான் வாழ்ந்து வந்ததால் சிறு பிராயத்திலிருந்தே பறவைகளை உற்றுநோக்கி நேசிப்பது எனக்கு விருப்பமாக இருந்தது. அதை என் பழக்கமாக்கிக் கொண்டேன். இப்பொழுது நான் வாழும் புறநகர் பகுதியில் சில காகங்களின் செயல்களை சமீபத்தில் கவனித்த எனக்கு ஓர் ஆவலை உண்டாக்கியது. அவை ஓய்வெடுத்துக் கொள்வதற்காக இலைகள் இல்லாத ஓர் மொட்டை மரத்தை நோக்கிப் பறந்தன. அவை உறுதியான கிளைகளில் அமர்வதற்குப் பதிலாக, அவற்றின் எடையைத் தாங்காமல் வளைந்து ஒடிந்துவிடும்…
தாராளமாகக் கொடுக்கும் கரம்
1891ம் ஆண்டு பிட்டி மேசன் அடையாளம் கண்டுகொள்ள முடியாத கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாள். அடிமையாகப் பிறந்த ஓர் பெண்ணிற்கு இவ்வாறு நடப்பது ஓர் அசாதாரணமான காரியம் அல்ல. ஆனால் பிட்டியைப் போல பல சிறந்த சாதனைகளைப் புரிந்த பெண்ணிற்கு இவ்வாறு நடந்தது சற்று சிந்திக்க வேண்டிய ஒரு காரியமே. 1856ம் ஆண்டு நீதிமன்றத்தில் போராடி தனக்கு சுதந்தரத்தை வெற்றிகரமாகப் பெற்றபின், வியாபாரத்தில் சிறந்த தீர்மானங்களை எடுக்கும் திறமையுடன் சிறந்த செவிலியாகப் பணிபுரியும் திறமையும் சேர்ந்ததால் நன்கு உழைத்து செல்வத்தைத் திரட்டினாள். தங்கள் நாட்டை விட்டு,…
பரிசும் அதைக் கொடுத்தவரும்
அது வெறும் சாவிகோர்க்கும் சங்கிலிதான். அது ஐந்து சிறு மரத்துண்டுகளை ஒரு
ஷூ கட்டும் கயிற்றினால் இணைத்த ஓர் கொத்து. என் மகள் 7 வயதாக இருக்கும்பொழுது பல ஆண்டுகளுக்கு முன் அதை எனக்குக் கொடுத்தாள். இன்று அந்தக்கயிறு பழசாகி நைந்து போய், மரத்துண்டுகள் உடைந்துபோய் பழமையாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவை “அப்பா நான் உங்களை நேசிக்கிறேன்” என்ற செய்தியைக் கொடுத்து என்னை வசீகரித்துள்ளதால் அந்த செய்தி பழமையாவதே இல்லை.
ஓர் பரிசு எப்பேர்ப்பட்ட பரிசு என்பதில் அல்ல, அது யாரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது…
எதிர்பாராதது
தென் அமெரிக்காவில் கோடைகால நடுமதிய வெப்பத்தில், பயணித்துக் கொண்டிருந்த என் மனைவியும், நானும் ஐஸ்கிரீம் சாப்பிட ஓர் இடத்தில் நின்றோம். பணம் செலுத்தும் இடத்திற்கு பின்னால் உள்ள சுவற்றில் “முற்றிலும் பனி ஊர்தி கிடையாது” என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தோம். இது நாங்கள் எதிர்பாராத ஒன்றாக இருந்ததால் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது.
சில சமயங்களில் எதிர்பாராத சொற்கள் மிகவும் வலிமை மிக்கவைகளாகக் காணப்படும். “தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தம் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் காப்பான்” (மத். 10:39) என்று இயேசு…
துக்கத்திலிருந்து களிப்பு
நான் பணிபுரிந்த நிருவனத்தில் பத்தாண்டுகளுக்கு முன் என்னைப் பணியிலிருந்து நீக்கி “நாங்கள் உங்களைப் பணியிலிருந்து நீக்குகிறோம்” என்று கூறியபொழுது என் தலை சுற்றியது. பதிப்பாசிரியராக பணிபுரிந்த எனக்கு அவ்வேளையில் மனம் சுக்குநூறாகஉடைந்தது. நான் சுயமாகச் செய்து கொண்டிருந்த பணியும் நிறைவடையப் போகிறது என்று சமீபத்தில் கேள்விப்பட்டேன். ஆனால், இம்முறை அச்செய்தி என்னை நிலைகுலையச் செய்யவில்லை. ஏனென்றால் என் துக்கத்தை சந்தோஷமாக மாற்ற தேவன் உண்மையுள்ளவர் என்பதைப் பல ஆண்டுகளாக அனுபவித்திருந்தேன். ஆகையால் நான் முன்போல் அதிகமாய் அசைக்கப்படவில்லை.
வேதனையும், ஏமாற்றங்களும் நிறைந்த விழுந்துபோன இவ்வுலகத்தில்…
ஏதேனும் ஒன்றை நான் அறிந்து கொள்ள வேண்டுமா?
ஓர் இசைக்கச்சேரியின் போது, பாடகரும், பாடல் இயற்றுபவருமான டேவிட் வில்காக்ஸிடம் பார்வையாளர்களிடமிருந்து வந்த ‘அவர் எவ்வாறு பாடல்களை இயற்றுகிறார்’ என்ற கேள்விக்குப் பதிலளித்தார். பாடல் இயற்றுவதில் மூன்று காரியங்கள் அடங்கியுள்ளது. ஓர் அமைதலான அறை, ஓர் வெற்றுப்பக்கம், நான் ஏதேனும் ஒர் காரியத்தை அறிந்து கொள்ள வேண்டியதிருக்கிறதா? என்ற ஓர் கேள்வி என்று பதிலுரைத்தார். இயேசு கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம், நமது அன்றாட வாழ்க்கையில் தேவனுடைய திட்டத்தை அறிந்துகொள்ள அவர் கூறிய பதில் மிகவும் அதிசயிக்கத்தக்க அணுகுமுறையாக எனக்குப்பட்டது.
இயேசு மக்களிடையே செய்த ஊழியங்கள்…
இலகுவான பாதையா?
வாழ்க்கைப் பாதை எப்பொழுதும் கடினமானதே. தேவன் எப்பொழுதும் இலகுவான பாதையிலே நடத்துவார் என்று நாம் எதிர்பார்த்தோமானால், நாம் பயணிக்கும் பாதை கடினமாகும் பொழுது தேவனிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக்கொள்வோம்.
நீங்கள் எப்பொழுதாவது அவ்வாறு செய்ய நினைத்திருந்தீர்களானால், இஸ்ரவேல் மக்களை நினைத்துக் கொள்ளுங்கள். பல நூறு ஆண்டுகளாக எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு பயணம் செய்தபொழுது, தேவன் எளிதான நேர்வழியில் அவர்களை நடத்தவில்லை. “பெலிஸ்தரின் தேசவழியாய் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தவில்லை” (யாத். 13:17). அதற்கு மாறாக…