இடிபாடுகளின் மறுசீரமைபட்பு
1876ம் ஆண்டில், மத்திய இந்தியானாவில், நிலக்கரிக்காக துளையிடுபவர்கள் நரகத்தின் வாசலைக் கண்டுபிடித்ததாக நினைத்தனர். வரலாற்றாசிரியர் ஜான் பார்லோ மார்ட்டின், அறுநூறு அடியின் கீழே, அற்புhதமான சத்தங்கள் மத்தியில் தீப்பொறிகள் எழும்பின என்று தெரிவிக்கிறார். அவர்கள் பிசாசின் குகையின் கூரையை உடைத்திருப்பதாக நினைத்து, பயந்து, வேகமாக தோண்டிய துளையை மூடிவிட்டு தங்கள் வீட்டிற்கு விரைந்தனர்.
சுரங்கத் தொழிளாலர்கள், நிச்சயாமாகத் தவராகப் புரிந்துக்கொண்டனர் - சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மறுபடியும் துளையிட்டு, இயற்கை எரிவாயுவினால் பணக்காரர்களாக இருப்பார்கள். அவர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டாலும், நான் அவர்களைக் குறித்து சற்று பொறாமைப்படுகிறேன். இந்தச் சுரங்கத் தொழிளாலர்கள், என் சொந்த வாழ்க்கையில் அடிக்கடி நான் காணாமலிருந்த, ஆன்மீக உலகத்தின் விழிப்புணர்வோடு இருந்தனர். இயற்கைக்கு அப்பாற்பட்ட மற்றும் இயற்கையும் ஒன்றிணைவது அறிதாக இருக்கிறது என்று நான் வாழ்வது சுலபமானதாக இருந்தாலும், 'மாம்சத்தோடும், இரத்தத்தோடும் அல்ல... வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நமக்கு போராட்டம் உண்டு" எபேசியர் 6:12 என்பதை மறந்துவிட முடியாது.
நம் உலகில் தீமை வெற்றியடைவதைக் காணும்போது, நாம் அதை விட்டுவிடவோ அல்லது சொந்த பலத்தில் போராடவோ முயற்சிக்கக்கூடாது. ஆனால் நாம் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை (வச. 13-18) தரித்துக்கொண்டு எதிர்த்து நிற்க வேண்டும். வேதத்தை வாசிப்பதும், ஊக்கப்படுவதற்காக மற்ற விசுவாகிளை தொடர்ந்து சந்திப்பதும், மற்றவர்களின் நன்மைகளை மனதில் கொள்வதும், நாம் பிசாசினுடைய திட்டங்களுக்கு எதிர்த்து நிற்க உதவி செய்யும் (வச. 11). பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு எதையும் எதிர்கொண்டு உறுதியாக நிற்க முடியும் (வச. 13).
தங்க தழும்புகள்
நெதர்லாந்து நாட்டில் ஆடைகளை வடிவமைக்கும் ஒரு குழுவினர் துணிகளை ‘மிளிர வைக்கும் கூட்டு வேலை’ என்று ஒரு பணிமனை நடத்தினர். இது உடைந்த ஒரு பீங்கான், தங்கம் வைத்து சரி செய்யப்படும் ஜப்பானிய நுட்பமான கிண்ட்சுகி முறையை தழுவியது. இந்த முறையில் சரி செய்யப்பட்ட இடத்தை மறைப்பதை விட அதை வெளிப்படுத்துவது பிரதானம். அதில் பங்கு பெறுகிறவர்கள் அவர்களுக்கு விருப்பமான ஆனால் கிழிந்த ஆடைகளை கொண்டு வந்து தங்கத்தை வைத்து சரி செய்ய அழைக்கப்படுவார்கள். அப்படி செய்யும்போது அந்த இடம் தங்க தழும்பாக மிளிரும்.
இந்த வழியில் கிழிந்த இடங்கள் முன்னிலைப் படுத்தப்படுகிறது. ஒருவேளை இதுதான் “தன்னுடைய பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்” என்று பவுல் சொன்னதோ? மிக உயர்ந்த வெளிப்பாடுகள் அவருக்கு கிடைத்தபோதிலும் அவை களைப் பற்றி அவர் தன்னை உயர்த்தவில்லை
(2 கொரி. 12: 7) அவை அதனால் பெருமையோ அகந்தையோ அடையாதபடிக்கு “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்கிறார். (2 கொரி. 12:7)
அவர் சொன்னது என்னவென்று யாருக்கும் தெரியாது: மன அழுத்தமோ, மலேரியாவோ, துன்புறுத்தப்படுதலோ, வேறு ஏதோ. என்னவென்றாலும் அதை எடுத்துவிட ஆண்டவனை வேண்டிக் கொண்டார். ஆனால் இறைவன்
"என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் (வச. 9) என்று சொல்லிவிட்டார்.
விரிசல்களும், கிழிஞ்தவைகளும் ஆடை வடிவமைப்பு செய்கிறவர்களால் எப்படி அழகாக மாற்றப்படுகிறதோ அவ்விதமே நாம் வாழ்க்கையிலும் வலிமையற்ற உடைந்த பகுதிகள் இறைவனுடைய மகிமையும் வல்லமையும் வெளிப்பட மாறலாம். அவர் நம்மை ஒன்றாகக் கூட்டி, நம்மை மாற்றி, நம்முடைய பலவீனத்தை மிக அழகாக வடிவமைக்கிறார்.
அன்பில் வேரூன்றி
“அவ்வளவுத்தான் எடுக்கும்” மேகி சொன்னாள். அவள் பூச்செடியிலிருந்து ஒரு தண்டை வெட்டி, அதன் நுனியை தேனில் நனைத்து ஒரு உரம் நிரப்பப்பட்ட தொட்டியில் சொறுகினாள். இந்தப் பூக்களை பரப்பவும், ஒரு ஆரோக்கியமான செடியிலிருந்து பல செடிகளை எவ்வாறு உருவாக்குவது என்றும் எனக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தாள். அதனால் நான் மற்றவர்களோடு பூக்களை பகிர்ந்து கொள்ள முடியும். தேன் இளம் வேர்களை திடப்படுத்தும் என்று அவள் கூறினாள்.
அவள் வேலையை கவனித்துக்கொண்டிருந்த நான் ஆவிக்குரிய வேர்களை நிலைநாட்ட நமக்கு எந்த காரியங்கள் உதவும் என்று யோசித்தேன். நாம் முதிர்ச்சியடைந்த வலுமையான மற்றும் விசுவாசத்தில் செழித்து வளருகிற ஜனமாய் இருக்க எது உதவுகிறது? வாடிவிடுவதிலிருந்தோ அல்லது வளருவதிலிருந்தோ நம்மை தடுப்பது எது? எபேசியருக்கு “அன்பில் வேரூன்றி நிலைப்பெற்றவர்களாகி” (எபே. 3:17) என்று பவுல் எழுதுகிறார். இந்த அன்பு, நமக்கு பரிசுத்த ஆவியானவரை அளித்து நம்மை பலப்படுத்தும் தேவனிடத்திலிருந்து வருகிறது. கிறிஸ்து நம் இருதயத்தில் வாசம் செய்கிறார். நாம் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்துக் கொள்ளும்போது, (வச. 18), நாம் முழுமையாக தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிரப்பப்படுவதால், தேவனின் பிரசன்னத்தினால் ஏற்படும் செழிப்பான அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். (வச. 19).
ஆவிக்குரிய காரியங்களில் வளருவதற்கு தேவை - தேவனின் அன்பில் வேரூன்றுவதும், நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற (வ 20) தேவனுக்கு நாம் பிரியமானவர்கள் என்ற சத்தியத்தை தியானிப்பதுமே. நம் விசுவாசத்திற்கு என்ன ஒரு வியக்கத்தக்க அஸ்திபாரம்!
சந்ததியினருக்கு கடத்தப்படும் அன்பு
என்னுடைய மகள், நான்சி டிரூவின் துப்பறியும் கதைகள் மீது அதிக ஆவல் கொண்டிருந்தாள். கடந்த மூன்று வாரங்களில், அவள், ஸ்லூயத் என்ற பெண்ணை பற்றிவரும், கிட்டத்தட்ட 12 புத்தகங்களை வாசித்தாள். அவளுடைய துப்பறியும் கதைகள் மீது அதிக ஆவல் கொண்டாள். நானும் குழந்தையாக இருந்த போது இத்தகைய புத்தகங்களின் மீது ஆவல் கொண்டிருந்தேன். 1960 களில் என்னுடைய அம்மா வாசித்த, நீல அட்டைகொண்ட இந்த புத்தங்கள், அவளுடைய அலமாரியில் இன்னமும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பாசம் சந்ததிகளுக்கும் கடந்து வருவது, வேறென்ன காரியங்களை நான் கடந்து வரச் செய்கின்றேன் என்பதைச் சிந்திக்கச் செய்தது. தீமோத்தேயுவுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதும் போது பவுல், அவனுடைய பாட்டி மற்றும் தாயாரின் “மாயமற்ற விசுவாசத்தைப்” பற்றி நினைக்கின்றார். இந்த மர்மக் கதைகளின் மீது அவளுக்கு இருக்கின்ற ஆவலோடு, அவளுடைய பாட்டியும் தாத்தாவும் கொண்டிருந்த விசுவாசத்தையும் ஊழியத்தையும் பற்றிக் கொண்டு, ஜெபத்திலும் “கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப் பற்றிய வாக்குத் தத்தத்தினையும்” (1 தீமோ.1:1) பற்றிக் கொள்வாள்.
பாட்டியும் தாத்தாவும் இல்லாதவர்களும் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையோடு இருப்பதையும் காணமுடிகின்றது. தீமோத்தேயுவின் தந்தையைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பவுல் அவனை “பிரியமுள்ள குமாரன்” (வ.2) என்று குறிப்பிடுகின்றார். விசுவாசத்தைக் கொடுப்பதற்கு குடும்பம் இல்லாதவர்களுக்கு, பெற்றோரும் பாட்டிகளும் தாத்தாக்களுமாக இருந்து, அவர்களைப் பரிசுத்தமாக வாழ அழைக்கும் (வ.9) நபர்களையும் ஆலயத்தில் காண்கின்றோம். தேவன் நமக்கு ஈவாக கொடுத்துள்ள பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை (வ.7) நாம் அணைத்துக் கொள்வோம். உண்மையில் நாம் ஓர் அழகிய பாரம்பரியத்தைப் பெற்றுள்ளோம்.
உங்கள் கண்ணீரை தேவனிடம் எடுத்துச் செல்
கடந்த கோடை காலத்தில், டேல்குவா என்று அழைக்கப் பட்ட திமிங்கலம் குட்டி போட்டது. ஆயினும் அது ஆபத்து நிறைந்த விலங்குகளின் மத்தியிலிருந்தது. அந்த புதிய ஜீவன் எதிர்கால நம்பிக்கையோடிருந்தது. ஆனால் அந்த குட்டி சில நிமிடங்கள் தான் உயிர் வாழ்ந்தது. அந்த திமிங்கலத்தின் கவலை நிறைந்த காட்சிகளை உலகெங்கும் உள்ள மக்கள் பார்த்தனர். டேல்குவா மரித்துப் போன தனது குட்டியின் உடலை, பசிபிக் கடலின் குளிர்ந்த நீரில் பதினேழு நாட்கள் தள்ளிக் கொண்டே சென்று, கடைசியில் கைவிட்டது.
சில வேலைகளில், இயேசுவின் விசுவாசிகளும் தங்கள் கவலைகளோடு என்ன செய்வதென்று தெரியாமல் திணரலாம். நம்முடைய துயரம் நம்பிக்கையற்றதாக காட்சியளித்து, நம்மை பயப்படுத்தலாம். துயரத்தோடு தேவனிடத்தில் கதறும் அநேகரைப் பற்றி வேதாகமத்தில் காண்கின்றோம். உண்மையான பதிலைப் பெற்றுக் கொள்வதில் புலம்பலும், நம்பிக்கையும் ஆகிய இரண்டுமே முக்கிய பங்காற்றுகின்றன.
புலம்பல் என்ற புத்தகத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன, அவை, தங்களின் தேசத்தை இழந்த மக்களின் துயரத்தை வெளிப்படுத்துகின்றன. அவர்கள் பகைவர்களால் வேட்டையாடப் பட்டு, சாவின் விளிம்பில் இருக்கின்றனர் (3:52-54). அவர்கள் தேவனை நோக்கி அழுது கூப்பிட்டு, தங்களுக்கு நியாயம் செய்யும் படி கேட்கின்றனர் (வ.64). அவர்கள் நம்பிக்கையிழந்ததால் தேவனை நோக்கிக் கதறவில்லை, தேவன் அவர்களின் கூப்பிடுதலைக் கேட்கின்றார் என்ற நம்பிக்கையில் கதறுகின்றனர், அவர்கள் கூப்பிடும் போது தேவன் அவர்களின் அருகில் வருகின்றார் (வ.57).
இந்த உலகத்தில் அல்லது உன்னுடைய வாழ்வில் உடைந்து போன காரியங்களுக்காகப் புலம்புவதில் எந்த தவறும் இல்லை.தேவன் எப்பொழுதும் கவனிக்கின்றார், பரலோகத்திலிருந்து தேவன் உங்களைப் பார்க்கிறார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.
ஆமையோடு சேர்ந்து காத்திருப்போம்
வர்ணம் பூசப்பட்ட அந்த ஆமை, ஒவ்வொரு முறையும் குளிர் காலம் வருவதை அறிந்ததும், தான் வசிக்கும் குளத்தின் அடிப்பக்கத்திற்குச் சென்று, சகதி நிரம்பிய பகுதியில் தன்னைப் புதைத்துக் கொள்ளும். தன்னுடைய உடல் முழுவதையும் ஓட்டிற்குள் அடக்கி, அமைதியாகிவிடும், அதனுடைய இருதயத் துடிப்பு குறைந்து, ஏறத்தாள நின்றுவிடும் நிலையை அடையும். அதன் உடல் வெப்பநிலையும் குறை ந்து, உறைதலுக்கு சற்று மேலே நிற்கும். அது மூச்சு எடுப்பதையும் நிறுத்திக்கொண்டு, காத்திருக்கும். ஆறு மாதங்கள், தன்னை புதைத்துக் கொண்டிருக்கும் நாட்களில், அதன் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு அதன் இரத்தத்தோடு கலக்கும், எனவே அதன் உருவமும் மெதுவாக குலைய ஆரம்பிக்கும்.
குளத்தின் நீர் உருக ஆரம்பித்ததும், அது மிதந்து மேலே வந்து, மீண்டும் சுவாசிக்க ஆரம்பிக்கும். அதன் ஓடு, சூரிய கதிர் வீச்சின் வெப்பத்தை உணர ஆரம்பித்ததும், அதன் எலும்புகள் மீண்டும் புதிப்பிக்கப்படும்.
சங்கீதக்காரன் தரும், தேவனுக்குக் காத்திருத்தல் என்பதற்கான விளக்கத்தை நான் வாசிக்கும் போது, இந்த வர்ணம் பூசப்பட்ட ஆமையின் கதை என் நினைவில் வந்தது. ஓர் “உளையான சேறு” நிரம்பிய “பயங்கரமான குழியில்” இருக்கின்ற சங்கீதக்காரனின் கூப்பிடுதலை தேவன் கேட்கின்றார் (சங். 40:2). தேவன் அவரை வெளியே தூக்கி எடுத்து, அவனுடைய கால்கள் உறுதியாக நிற்கும் படி, ஒரு இடத்தையும் காட்டினார். எனவே, அவன், ”தேவரீர் என் துணையும், என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்” என்று பாடுகின்றான் (வ.17).
ஒருவேளை நீயும், ஏதோ ஒரு காரியத்தின் மாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கலாம், உன்னுடைய வேலையில் ஒரு புதிய திருப்பம், முறி ந்த உறவைப் புதிப்பித்தல், ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட தேவையான மனவலிமை அல்லது ஒரு மோசமான சூழலிலிருந்து விடுதலை போன்று ஏதோ ஒன்றிற்காக காத்துக் கொண்டிருக்கலாம். அந்த வண்ணம் பூசப்பட்ட ஆமையும், சங்கீதக்காரனும், நாம் தேவன் பேரில் நம்பிக்கையோடிருக்குமாறு நினைவு படுத்துகின்றனர். தேவன் கேட்கின்றார், அவர் நம்மை விடுவிப்பார்.
இருதயத்தில் எழுதப் பட்டுள்ளது
நான் பேராசிரியராகப் பணியாற்றுவதால், என்னுடைய மாணவர்கள், சிபாரிசு கடிதம் பெறுவதற்கு அடிக்கடி என்னிடம் வருவர். தலைமைத்துவ நிலைகளுக்கு, வெளி நாட்டில் கல்வி பயில, பட்டப் படிப்பிற்குச் செல்ல அல்லது வேலைக்குச் செல்ல என பல்வேறு காரணங்களுக்காக வருவதுண்டு. ஒவ்வொரு கடிதத்திலும், நான் எனது மாணவர்களின் குணத்தையும், அவர்களுடைய கல்வித் தகுதியையும் பாராட்டி எழுத எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
பழங்காலத்தில், கிறிஸ்தவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பிரயாணம் செய்யும் போது, தங்களுடைய ஆலயத்திலிருந்து ஒரு பாராட்டு கடிதத்தைப் பெற்றுச் செல்வர். இத்தகைய கடிதம், அந்த சகோதரனோ அல்லது சகோதரியோ நல்ல வரவேற்பை பெறுவதற்கு உறுதியளிக்கும்.
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபையில் பேசுவதற்குச் சென்ற போது, அவனுக்கு இத்தகைய ஒரு பாராட்டு கடிதம் தேவையில்லாதிருந்தது, ஏனெனில், அவர்கள் அவனை அறிந்திருந்தனர். பவுல் சுவிசேஷத்தை உண்மையான மனதோடு பிரசங்கித்ததாகவும், தன்னுடைய ஆதாயத்திற்காக அல்ல என்றும் அந்த சபைக்கு எழுதப்பட்ட இரண்டாம் கடிதத்தில் எழுதுகின்றார் (2 கொரி. 2:17). தன்னைக் குறித்து இப்படி எழுதும் போது, அவர் தனக்குத்தானே பாராட்டுக் கடிதம் எழுதுவதாக வாசகர்கள் எண்ணக்கூடும்.
ஆனால், அவருக்கு ஒரு பாராட்டு கடிதமும் தேவையில்லை, ஏனெனில் கொரிந்து சபை மக்களே, அவருடைய பாராட்டு கடிதம் என்கின்றார். கிறிஸ்து அவர்களுடைய வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றமே, அனைவராலும் பார்க்கக்கூடிய, அவருடைய கடிதம் என்கின்றார். “அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினால் எழுதப்பட்டிருக்கிறது.” (3:3) பவுல் பிரசங்கித்த சுவிசேஷத்திற்கு அவர்களுடைய வாழ்க்கை தானே சாட்சி என்கின்றார். அவர்களுடைய வாழ்க்கை “சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்படும்” நிருபம் என்கின்றார்.(3:2) இயேசுவை பின்பற்றும் நமக்கும் இது உண்மை. நம்முடைய வாழ்வு, சுவிசேஷத்தின் நன்மையை எடுத்துக் கூறும் உண்மை கதையாய் இருக்க வேண்டும்.
தேவனைப் பற்றிய சம்பாஷணை
2018 ல் பார்னா குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவு, அநேக அமெரிக்கர்கள், தேவனைப் பற்றி பேச விரும்பவில்லை எனத் தெரிவிக்கிறது. ஏழு சதவீதத்தினரே, ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து அடிக்கடி பேசுகின்றனர். இயேசுவின் விசுவாசிகளாக, வாழ்ந்து காட்டும் இந்த அமெரிக்கர்கள், மற்றவர்களை விட அதிக வித்தியாசமானவர்கள் அல்ல. பதின்மூன்று சதவீத அமெரிக்கர்கள் ஒழுங்காக ஆலயத்திற்குச் செல்பவர்கள், இவர்கள், ஆவிக்குரிய கருத்து உரையாடல்களை வாரம் ஒரு முறை வைத்துக் கொள்கின்றனர்.
ஆவிக்குரிய சம்பாஷணைகள் குறைந்து வருகிறது என்ற செய்தி, நமக்கு புதியதல்ல. தேவனைக் குறித்து பேசுவது ஆபத்தாயுள்ளது. குறுகிய கண்ணோட்டமுள்ள அரசியல் கட்சிகளாலும், கருத்து வேறுபாடுகள், உறவில் பிளவுகளை ஏற்படுத்துவதாலும், ஆவிக்குரிய உரையாடல்கள், நம் வாழ்வில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை உணர்த்துவதாலும், இவ்வகை உரையாடல்கள் ஆபத்து நிறைந்ததாகக் கருதப்படுகின்றன.
உபாகமம் புத்தகத்தில், தேவனைப் பற்றிய உரையாடலை, தங்கள் அனுதின வாழ்வில் இணைந்த ஒன்றாக கருத வேண்டும் என அவருடைய ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. கர்த்தருடைய பிள்ளைகள், அவருடைய வார்த்தைகளை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், அடிக்கடி பார்க்கக் கூடிய இடங்களிலே எழுதி வைக்க வேண்டும். அவருடைய கட்டளைகளைக் குறித்து பிள்ளைகளிடம் வாழ்நாளெல்லாம் பேச வேண்டும். “நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், படுத்துக்கொள்ளும் போதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்து பேசுவீர்களாக” (11:20).
தேவன் நம்மை உரையாடலுக்கு அழைக்கிறார். முயற்சி செய்து பார். பரிசுத்த ஆவியானவரின் துணையோடு, உன்னுடைய சிறிய வீண் பேச்சுக்களை, ஆழ்ந்த கருத்துள்ள, உரையாடல்களாக்கிப் பார். நாம் தேவனுடைய வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டு, அவற்றை செயல் படுத்தும் போது, தேவன் நம்முடைய சமுதாயத்தை ஆசிர்வதிப்பார்.
அன்பின் விருந்து
“பெபட்டாவின் விருந்து” என்ற டேனிஷ் திரைப் படத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் அகதி, ஜெர்மனி தேசத்திலுள்ள ஒரு கடற்கரை கிராமத்திற்கு வருகின்றாள். அங்குள்ள கிறிஸ்தவ சமுதாயத்தினரின் தலைவர்களாகச் செயல்பட்ட இரு வயதான சகோதரிகளிடம் வந்து அடைக்கலம் புகுகின்றாள். பதினான்கு ஆண்டுகள், பெபட்டா அந்தச் சகோதரிகளின் வீட்டு வேலைகளை கவனிக்கின்றாள். இதன் மூலம் அவள் அதிகமான தொகையைச் சேகரித்து வைத்திருந்தாள். அவள், பிரான்ஸ் நாட்டினரின் உயர்தர உணவு விருந்தொன்றை ஆயத்தப்படுத்தி, அங்குள்ள சபை அங்கத்தினர்கள் பன்னிரண்டு பேரையும் அழைத்தாள்.
ஒரு வகை உணவிலிருந்து அடுத்ததிற்குச் செல்லும் இடைவெளியில், சிலர் ஓய்வு எடுத்துக் கொண்டனர், சிலர் மன்னிப்பை பெற்றுக்கொண்டனர், சிலர் தாங்கள் இழந்த அன்பை திரும்ப பெற்றுக்கொண்டனர், சிலர் தாங்கள் பெற்ற அற்புதங்களையும், சிறுவயதில் கற்றுக்கொண்ட உண்மைகளையும் பிறரோடு பகிர்ந்து கொண்டனர். “நாம் கற்றுக்கொண்டவைகளை நினைக்கின்றோமா?” என்று கேட்டுக் கொண்டனர். சிறு குழந்தைகள், ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள் என்று தங்களுக்குச் சொல்லப்பட்டதை நினைவு கூர்ந்தனர். அந்த சாப்பாடு முடிந்த போது, பெபட்டா, அந்த சகோதரிகளிடம், தன்னுடைய சேமிப்பு அனைத்தையும் இந்த உணவிற்கு செலவழித்து விட்டதாகத் தெரிவித்தாள். அவள் எல்லாவற்றையும், மீண்டும், பாரீஸிசின் புகழ் பெற்ற சமையற்காரியாகும் வாய்ப்பையும் விட்டுக் கொடுத்தாள். அவளோடு உணவருந்திய நண்பர்களின் உள்ளத்தைத் திறக்க உதவினாள்.
இயேசு, இவ்வுலகிற்கு அந்நியராகவும், ஊழியம் செய்பவராகவும் வந்தார். நம்முடைய ஆத்தும தாகத்தைத் தீர்க்க, அவர் எல்லாவற்றையும் கொடுத்தார். இயேசு தன்னுடைய உபதேசத்தைக் கேட்பவர்களிடம், உங்கள் முன்னோர்கள் வனாந்திரத்தில் திரிந்த போது, தேவன் அவர்கள் புசிப்பதற்கு காடையையும், மன்னாவையும் புசிக்கக் கொடுத்தார் (யாத். 16). அந்த உணவு அவர்களுக்கு கொஞ்சக் காலம் மட்டுமே திருப்தியைக் கொடுத்தது. இயேசுவை “வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்” என்று ஏற்றுக் கொள்கிறவன் “என்றென்றைக்கும் பிழைப்பான்” (யோவா. 6:51). அவருடைய தியாகம் நம்முடைய ஆத்ம தாகத்தைத் தீர்க்கும்.