“அவ்வளவுத்தான் எடுக்கும்” மேகி சொன்னாள். அவள் பூச்செடியிலிருந்து ஒரு தண்டை வெட்டி, அதன் நுனியை தேனில் நனைத்து ஒரு உரம் நிரப்பப்பட்ட தொட்டியில் சொறுகினாள். இந்தப் பூக்களை பரப்பவும், ஒரு ஆரோக்கியமான செடியிலிருந்து பல செடிகளை எவ்வாறு உருவாக்குவது என்றும் எனக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தாள். அதனால் நான் மற்றவர்களோடு பூக்களை பகிர்ந்து கொள்ள முடியும். தேன் இளம் வேர்களை திடப்படுத்தும் என்று அவள் கூறினாள்.

அவள் வேலையை கவனித்துக்கொண்டிருந்த நான் ஆவிக்குரிய வேர்களை நிலைநாட்ட நமக்கு எந்த காரியங்கள் உதவும் என்று யோசித்தேன். நாம் முதிர்ச்சியடைந்த வலுமையான மற்றும் விசுவாசத்தில் செழித்து வளருகிற ஜனமாய் இருக்க எது உதவுகிறது? வாடிவிடுவதிலிருந்தோ அல்லது வளருவதிலிருந்தோ நம்மை தடுப்பது எது? எபேசியருக்கு “அன்பில் வேரூன்றி நிலைப்பெற்றவர்களாகி” (எபே. 3:17) என்று பவுல் எழுதுகிறார். இந்த அன்பு, நமக்கு பரிசுத்த ஆவியானவரை அளித்து நம்மை பலப்படுத்தும் தேவனிடத்திலிருந்து வருகிறது. கிறிஸ்து நம் இருதயத்தில் வாசம் செய்கிறார். நாம் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்துக் கொள்ளும்போது, (வச. 18), நாம் முழுமையாக தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிரப்பப்படுவதால், தேவனின் பிரசன்னத்தினால் ஏற்படும் செழிப்பான அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். (வச. 19).

ஆவிக்குரிய காரியங்களில் வளருவதற்கு தேவை –  தேவனின் அன்பில் வேரூன்றுவதும்,  நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற (வ 20) தேவனுக்கு நாம் பிரியமானவர்கள் என்ற சத்தியத்தை தியானிப்பதுமே. நம் விசுவாசத்திற்கு என்ன ஒரு வியக்கத்தக்க அஸ்திபாரம்!