பிரான்ஸ் நாட்டில் லீசியு என்ற ஊரைச் சேர்ந்த தெரெஸ் என்னும் கன்னியாஸ்திரி, சிறுமியாக இருந்தபோது மகிழ்ச்சியுடனும் கவலையற்றும் இருந்தாள். ஆனால் அவளுக்கு நான்கு வயதானபோது அவளுடைய அம்மா இறந்துவிட்டார்; அப்பொழுது மிகவும் பயந்த சுபாவம் உள்ளவளாகவும் எளிதில் கலங்குகிறவளாகவும் மாறிவிட்டாள். பல வருடங்களுக்கு பின்னர் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தினநாள் ஒரு திருப்பம் காணப்பட்டது. தன்னுடைய சபையோடு பண்டிகையை அனுசரிக்கும்போது, ஒரு மாற்றத்தை அவள் உணர்ந்தாள். இறைவன் அவளை பயத்தினின்று விடுவித்து மகிழ்ச்சியை அளித்தார். இந்த மாறுதல், இறைவன் வானத்தை விட்டு பூமிக்கு வந்து இயேசு என்னும் மானிடனாக அவளுக்குள் வாசம் செய்த வல்லமையால் தான் உண்டாயிற்று என்ற மாற்றத்திர்கான காரணத்தை அவள் பகர்ந்தாள்.

இறைவன் நமக்குள் வாசம் செய்வது என்றால் என்ன? அது ‘ஒரு ரகசியம்’ என்று பவுல் கொலோசெயருக்கு எழுதினார். அது “ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்டது” (கொலோசெயர் 1:25) என்கிறார். “இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்” (கொலோசெயர் 1:27). இப்பொழுது கிறிஸ்து கொலோசெயர் நடுவே வாசம் செய்கிறதினாலே அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய சந்தோஷத்தை அனுபவித்தார்கள். பழைய பாவத்திற்கு அடிமையாக இருக்க வேண்டியதில்லை.

நாமும் இயேசுவை நமக்கு இரட்சகராக ஏற்றுக்கொண்டால், அவர் நம்மில் வாசம் பண்ணுகிற இந்த ரகசிய வாழ்வை அனுபவிப்போம். அவருடைய ஆவியின் மூலமாக திரெசை போலவே அவர் நம்முடைய பயத்தினின்றும் நம்மை விடுவிப்பார். ஆவியின் கனி – சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை போன்றவை –  ( கலாத்தியர் 5:22-23) நம்மில் வளரும்.

‘கிறிஸ்து நமக்குள் வாசமாயிருக்கும் இந்த அருமையான ரகசியத்தை இறைவன் நமக்கு தந்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துவோம்.