1876ம் ஆண்டில், மத்திய இந்தியானாவில், நிலக்கரிக்காக துளையிடுபவர்கள் நரகத்தின் வாசலைக் கண்டுபிடித்ததாக நினைத்தனர். வரலாற்றாசிரியர் ஜான் பார்லோ மார்ட்டின், அறுநூறு அடியின் கீழே, அற்புhதமான சத்தங்கள் மத்தியில் தீப்பொறிகள் எழும்பின என்று தெரிவிக்கிறார். அவர்கள் பிசாசின் குகையின் கூரையை உடைத்திருப்பதாக நினைத்து, பயந்து, வேகமாக தோண்டிய துளையை மூடிவிட்டு தங்கள் வீட்டிற்கு விரைந்தனர்.

சுரங்கத் தொழிளாலர்கள், நிச்சயாமாகத் தவராகப் புரிந்துக்கொண்டனர் – சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மறுபடியும் துளையிட்டு, இயற்கை எரிவாயுவினால் பணக்காரர்களாக இருப்பார்கள். அவர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டாலும், நான் அவர்களைக் குறித்து சற்று பொறாமைப்படுகிறேன். இந்தச் சுரங்கத் தொழிளாலர்கள், என் சொந்த வாழ்க்கையில் அடிக்கடி நான் காணாமலிருந்த, ஆன்மீக உலகத்தின் விழிப்புணர்வோடு இருந்தனர். இயற்கைக்கு அப்பாற்பட்ட மற்றும் இயற்கையும் ஒன்றிணைவது அறிதாக இருக்கிறது என்று நான் வாழ்வது சுலபமானதாக இருந்தாலும், ‘மாம்சத்தோடும், இரத்தத்தோடும் அல்ல… வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நமக்கு போராட்டம் உண்டு” எபேசியர் 6:12 என்பதை மறந்துவிட முடியாது.

நம் உலகில் தீமை வெற்றியடைவதைக் காணும்போது, நாம் அதை விட்டுவிடவோ அல்லது சொந்த பலத்தில் போராடவோ முயற்சிக்கக்கூடாது. ஆனால் நாம் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை (வச. 13-18) தரித்துக்கொண்டு எதிர்த்து நிற்க வேண்டும். வேதத்தை வாசிப்பதும், ஊக்கப்படுவதற்காக மற்ற விசுவாகிளை தொடர்ந்து சந்திப்பதும், மற்றவர்களின் நன்மைகளை மனதில் கொள்வதும், நாம் பிசாசினுடைய திட்டங்களுக்கு எதிர்த்து நிற்க உதவி செய்யும் (வச. 11). பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு எதையும் எதிர்கொண்டு உறுதியாக நிற்க முடியும் (வச. 13).