பதினேழு வயதில், டோவெய்ன், திருடுதல் மற்றும் போதைக்கு அடிமைபட்டிருந்ததால், தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் தன்னுடைய குடும்ப வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவர் வெகுதூரம் செல்லவில்லை, தனது தாயின் கொல்லைப்புறத்தில் நெளிந்த உலோகத்தினால் ஒரு சிறு குடிலை அமைத்து, நாளடைவில் இது போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் கேசினோ என்ற இடமாக அறியப்பட்டது. எனினும் தன் பத்தொன்பதாம் வயதில் டோவெய்ன் இயேசுவின் இரட்சிக்கும் விசுவாசத்திற்குள் வந்தார். போதைப் பொருட்களிலிருந்து விடுதலைப் பெறுவது ஒரு நீண்டதும் சோர்வானதாவும் ஆனால், தேவனுடைய உதவியாலும், இயேசுவை விசுவாசிக்கும் நண்பர்களின் ஆதரவோடும் அவர் சுத்தமாகிவிட்டடர். டோவெய்ன் கேசினோ கட்டிப் பத்து வருடங்கள் கழித்து அவரும் மற்றவர்களும் சேர்ந்து அந்த குடிசையை ஒரு ஆலய வீடாக மாற்றினர். ஒரு காலத்தில் இருண்ட மற்றும் தடை செய்யப்பட்டதாக இருந்த இடம் இப்போது ஜெபிக்கும் மற்றும் ஆராதனைச் செய்யும் இடமாகியது.

இந்த ஆலயத்தின் தலைவர்கள், எரேமியா 33ல், டோவெய்ன் மற்றும் முன்னாள் கேசினோவுக்கு செய்ததைப் போல, தேவன் மக்களையும், இடத்தையும் எவ்வாறு குணப்படுத்தி மீட்டெடுக்க முடியும் என்பதைக் காண்கிறார்கள். எரேமியா தீர்க்கதரிசி, சிறைப்பிடிக்கப்பட்ட தேவமக்களிடம் பேசி, நகரம் காப்பாற்றப்படாது என்றாலும், தேவன் தம்முடைய ஜனத்தை குணமாக்கி அவர்களைக் கட்டுவித்து, அவர்களுடைய பாவங்களற அவர்களை சுத்திகரிப்பேன் என்று பேசினார் (எரே. 33:7,8). அப்பொழுது அந்த நகரம் அவருக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும், புகழ்ச்சியாயும், மகிமையுமாய் இருக்கும் (எரே. 33:9).

இதயத்தை உடைக்கும் பாவத்தைப்பற்றி நாம் விரக்தியடைந்து மனக்கசப்புடன் இருக்கும்போது, அவர் மேனன்பெர்க்கில் கொல்லைப்புறத்தில் செய்தது போல, தேவன் சுகத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வர நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.