நெதர்லாந்து நாட்டில் ஆடைகளை வடிவமைக்கும் ஒரு குழுவினர் துணிகளை ‘மிளிர  வைக்கும் கூட்டு வேலை’ என்று ஒரு பணிமனை நடத்தினர். இது உடைந்த ஒரு பீங்கான், தங்கம் வைத்து சரி செய்யப்படும் ஜப்பானிய நுட்பமான கிண்ட்சுகி முறையை தழுவியது. இந்த முறையில் சரி செய்யப்பட்ட இடத்தை மறைப்பதை விட அதை வெளிப்படுத்துவது பிரதானம். அதில் பங்கு பெறுகிறவர்கள் அவர்களுக்கு விருப்பமான ஆனால் கிழிந்த ஆடைகளை கொண்டு வந்து தங்கத்தை வைத்து சரி செய்ய  அழைக்கப்படுவார்கள். அப்படி செய்யும்போது அந்த இடம் தங்க தழும்பாக மிளிரும். 

இந்த வழியில் கிழிந்த இடங்கள் முன்னிலைப் படுத்தப்படுகிறது. ஒருவேளை இதுதான் “தன்னுடைய பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்” என்று பவுல்  சொன்னதோ? மிக உயர்ந்த வெளிப்பாடுகள் அவருக்கு கிடைத்தபோதிலும் அவை களைப் பற்றி அவர் தன்னை உயர்த்தவில்லை
(2 கொரி. 12: 7) அவை அதனால் பெருமையோ அகந்தையோ அடையாதபடிக்கு “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்கிறார். (2 கொரி. 12:7)  

அவர் சொன்னது என்னவென்று யாருக்கும் தெரியாது: மன அழுத்தமோ, மலேரியாவோ, துன்புறுத்தப்படுதலோ, வேறு ஏதோ. என்னவென்றாலும் அதை எடுத்துவிட ஆண்டவனை வேண்டிக் கொண்டார். ஆனால் இறைவன்
“என் கிருபை உனக்குப் போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் (வச. 9)  என்று சொல்லிவிட்டார். 

விரிசல்களும், கிழிஞ்தவைகளும்  ஆடை வடிவமைப்பு செய்கிறவர்களால் எப்படி அழகாக மாற்றப்படுகிறதோ  அவ்விதமே நாம் வாழ்க்கையிலும் வலிமையற்ற உடைந்த பகுதிகள் இறைவனுடைய மகிமையும் வல்லமையும் வெளிப்பட மாறலாம். அவர் நம்மை ஒன்றாகக் கூட்டி, நம்மை மாற்றி, நம்முடைய பலவீனத்தை மிக அழகாக வடிவமைக்கிறார்.