அவரது தாயார் ஷரோண்டா (Sharonda) வின் சோகமான மரணத்தின் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கிறிஸ் (Chris) கிருபை நிறைந்த, வல்லமை வாய்ந்த  இந்த வார்த்தைகளை சொல்ல முடிந்தது: “அன்பு வெறுப்பை விட வலிமையானது”. இன்னும் எட்டு பேரோடு கூட அவனுடைய தாயார் அமெரிக்காவில் தெற்கு கரொலைனா மாகாணத்தில் சார்ல்ஸ்டன் நகரில் புதன் தோறும் நடைபெறும் வேத பாடத்தில் பங்கு பெற்றுக்கொண்டிருக்கும்போது  கொல்லப்பட்டார். இந்த தருணத்தில் இவ்வித  அருமையான வார்த்தைகள் அவனுடைய இருதயத்திலிருந்தும் வாயிலிருந்தும் வெளிவரும்படி அந்த இளைஞனுடைய வாழ்க்கையை யார் வடிவமைத்தது? கிறிஸ், இயேசுவை விசுவாசிப்பவர், அவருடைய தாயார் அனைவரையும் முழு மனதுடன்” நேசித்தவர். 

லூக்கா 23: 26-49  நிரபராதி இயேசுவும், கூட 2 குற்றவாளிகளும் சிலுவையில் அறையப்படும் காட்சிக்கு நம்மை கொண்டு போகிறது (வ 32,33). அங்கே கேட்கும் பெருமூச்சு, திணறல்களின் சத்தத்திற்கு  மத்தியில் இயேசுவின் குரல் கேட்கிறது:” பிதாவே இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (வ 34) அன்பையே எதிரொலித்த ஒருவரையே அந்த மதபோதகர்கள் தங்களுடைய வெறுப்பினால் சிலுவையில் அறைந்தார்கள். அந்த வேதனைகள் மத்தியிலும் இயேசுவின்  அன்பு வெற்றி சிறந்தது.

நீயோ அல்லது உனக்கு அருமையானவர்களோ இவ்விதமாக வெறுப்பு, கசப்பு, தீங்கிற்கு இலக்காகி இருக்கிறார்களா? உங்களுடைய துயரங்கள் ஜெபிக்க உங்களை ஊக்குவிப்பதாக; இயேசுவை பின்பற்றின கிறிஸ்-ன் உதாரணத்தை போலவே ஆவியின் வல்லமையினாலே அன்பின் மூலமாக வெறுப்பை மேற்கொள்ளுங்கள்.