கைப்பேசி, அருகலை (Wi-Fi), தடங்காட்டி (GPS), ஊடலை (Bluetooth) சாதனங்கள், மற்றும் நுண்ணலைஅடுப்பு (microwave) இல்லாத வாழ்க்கையை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். மேற்கு விர்ஜினியா மாகாணத்தில் உள்ள Green Bank என்னும்  ஊரில் இவைகள் எல்லாமே கிடையாது. அமெரிக்காவிலேயே மிக நிசப்தமான ஊர் என்று சொல்லப்படுகிறது. இங்கே தான் உலகத்திலேயே மிகப்பெரிய ‘திசைமாற்றக் கூடிய வானொலி தொலைநோக்கி’ கொண்ட Green Bank Observatory இருக்கிறது. இந்த தொலைநோக்கிக்கு அமைதி முக்கியம்; அப்பொழுதுதான்  விண் வெளியில் காணும் pulsars மற்றும்  galaxies  உமிழும் இயற்கையான வானொலி அலைகளை உணர முடியும்.. அந்த தொலைநோக்கியினுடைய பரப்பு கால்பந்து மைதானத்தை விட அதிகம்.. அது மின்னணுக்கள் அதன் துல்லிய உணர்திறனில் குறுக்கிடாத ஒரு இடத்தில், 13,000 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட ’தேசிய வானொலி அமைதி மண்டலத்தில்’ இருக்கிறது.  

இவ்விதமான அமைதியில் தான் விஞ்ஞானிகள் கோட்களின் இசையை கேட்க முடியும்.  இந்த பிரபஞ்சத்தை உண்டாக்கின சிருஷ்டிகரின் சத்தத்தை கேட்க வேண்டும் என்றால் நாமும் நம்மை இவ்விதமாக அமைதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.. வழிதவறிய, எளிதாக கவனம் சிதற கூடிய  மக்களுக்கு இறைவன் ஏசாயா மூலமாக இவ்விதம் பேசினார்: “உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்… உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.( ஏசா. 55: 3) அவரை நாடி அவருடைய மன்னிப்பை தேடுகிறவர்களிடத்தில் நிச்சயமாக அன்பு கூறுவார்.

வேத வாசிப்பின் மூலமாகவும் ஜெபத்தின் மூலமாகவும் நாம் கருத்தாக இறைவனை  நோக்கலாம். அவர் தூரத்தில் அல்ல. நாம் அவரை இம்மையிலும் மறுமையிலும் முதன்மையாக வைத்து, அன்றாடம் அவருக்கு நேரம் ஒதுக்கவேண்டுமென்று  அவர் விரும்புகிறார்.