திறவுகோல்
“தி ஹ்யூமன் கண்டிஷன்” (The Human Condition) என்னும் பிரபலமான தன்னுடைய புத்தகத்தில், தாமஸ் கீட்டிங் இந்த மறக்கமுடியாத கதையை பகிர்கிறார். ஒரு குருவானவர், தனது வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டு, புல் வெளியில் தேடிக்கொண்டு இருந்தராம். அவரது சீடர்கள் அவர்த் தேடுவதைக் கண்டதும், அவர்களும் தேடினார்களாம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக, புத்திசாலித்தனமான சீடர்களில் ஒருவர், “குருவே, சாவியை எங்கே தொலைத்தீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்க, அதற்கு குருவானவர், “அதை நான் வீட்டில் தொலைத்தேன்” என்று சொன்னாராம். “அப்படியானால் நாம் ஏன் அதை இங்கே தேடுகிறோம்?" என்று கேட்டாராம். அதற்கு அவர், “அதை விட இங்கு தான் வெளிச்சம் அதிகமாக இருக்கிறது” என்று பதிலளித்தாராம்.
“தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கும் நெருக்கமான உறவு என்னும் சாவியை நாம் தொலைத்துவிட்டோம். அந்த அனுபவம் இல்லாமல், நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது நம்மோடிருந்தால் அனைத்தும் நேர்த்தியாய் இருக்கும்" என்று கீட்டிங் நிறைவுசெய்கிறார்.
வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் தேவன் நம்மோடிருந்தார் என்பதை சுலபமாய் மறந்துவிடுகிறோம். ஆனால் எல்லா தவறுகளையும் நாம் தவிர்க்கும்போது, உண்மையான நன்மையை நமக்கு தருவதற்கு அவர் ஆயத்தமாய் இருக்கிறார். மத்தேயு 11இல், தேவன் தம்முடைய வழிகளை “ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து,”; “பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால்” (வச. 25) இயேசு பிதாவை துதிக்கிறார். பின்னர் அவர், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!" (வச. 28) இளைப்பாறுதலுக்காய் தம்மிடம் வரும்படி அழைக்கிறார்.
சிறு குழந்தைகளைப் போலவே, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்” (வச. 29) என்று சொன்ன நம்முடைய குருவிடத்திலிருந்து மெய்யான இளைப்பாறுதலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். நம்மை நித்திய வீட்டிற்கு அழைத்துச்செல்ல அவர் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார்.
சிருஷ்டிப்பின் அதிசயத்தை கொண்டாடுகின்றோம்
இ லையுதிர் காலத்தின் இலைகள் போல இறப்பின் அடையாளங்களை நம் சரீரங்கள் சுமக்கின்றன. எதிர்காலத்தில் நம் சரீரங்கள் அழியாத சரீரங்கள் ஆக மாற்றப்படும் என்பதால் நாம் தற்கால சரீரங்களை கவனிக்காமல் அவமதிக்கிறோமா? கீழ்க் கண்ட கட்டுரையில் கல்வியாளர் மற்றும் இயற்கை ஆர்வலர் டின் ஓல் மேன். நம் சரீரங்களை பராமரிப்பது போல நம்மை சுற்றியுள்ள உலகத்தையும் பராமரிக்க வேண்டும் என்கிறார். இரண்டும் தேவனுடைய கரத்தின் கிரியைகளாய், நம்முடைய விசுவாசமுள்ள உக்கிராணத்துவம் தேவைப்படுகிறதாய், எதிர்கால மறுசீரமைப்புக்கான வாக்குத்தத்தத்தை பகிர்கின்றன.
மார்ட்டின் ஆர். டி ஹான் II
தோட்டத்தின் தேவன்
பல ஆண்டுகளுக்கு முன்பு, நந்திதாவும் அவரது கணவர் விஷாலும் அதிக சம்பளம் வாங்கக்கூடிய, மன அழுத்தம் நிறைந்த சாப்ட்வேர் வேலைகளை விட்டுவிட்டு, எளிமையான, மன அழுத்தமில்லாத விவசாய வாழ்க்கையைத் தழுவுவதற்கான தீர்மானத்தை எடுத்தனர். அவர்கள் தேவனுடனும், தங்கள் ஒருவரோடொருவருடனும் நேரத்தை செலவிட எண்ணி, அமைதியான மலை நகரத்திற்கு சென்றனர். தோட்டத்திற்கு திரும்பும் வழியான, இயற்கையால் சூழப்பட்ட அமைதியான வாழ்க்கை முறையை அனுபவித்தனர்.
ஏதேன், ஆதியிலே தேவன் நமக்காக படைத்த பரதீசு. இந்தத் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும், சாத்தானுக்கு செவிகொடுக்கும் முன்புவரை தேவனை வழக்கமாய் சந்திக்க நேரிட்டது (ஆதியாகமம் 3:6-7 பார்க்கவும்). ஆனால் அந்த நாள் முற்றிலும் வித்தியாசமானது. “பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்" (வச. 8).
அவர்கள் என்ன செய்தார்கள் என்று தேவன் கேட்டபோது, ஆதாமும் ஏவாளும் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தினர். அவர்கள் மறுத்தாலும், தேவன் அவர்களை அங்கே விடவில்லை. அவர் “ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்” (வச. 21). இது நம்முடைய பாவங்களுக்கான இயேசுவின் மரணத்தை அடையாளப்படுத்துகிறது.
தேவன் நமக்கு ஏதேனுக்குத் திரும்பும் வழியைக் காண்பிக்கவில்லை. அவருடனான முறிந்த உறவை மீட்டெடுக்க அவர் நமக்கு ஒரு வழியைக் கொடுத்தார். நாம் தோட்டத்திற்கு திரும்ப முடியாது. ஆனால் நாம் தோட்டத்தின் தேவனிடம் திரும்பலாம்.
பயண ஒளி
ஜேம்ஸ், இருசக்கர வாகனத்தில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் 2011-கிமீ சாகச பயணம் மேற்கொண்டார். அவருடைய 1496வது கி.மீட்டரில், எனது நண்பர் அவரை சந்தித்தார். அப்போது ஜேம்ஸின் முகாமிடும் பொருட்களை யாரோ திருடிச் சென்றதை அறிந்ததும், எனது நண்பர் தன்னுடைய போர்வையையும் ஸ்வெட்டரையும் கொடுக்க முன்வந்தார். ஆனால் ஜேம்ஸ் அதை மறுத்துவிட்டார். ஏனென்றால், அவர் தெற்கு நோக்கி பயணிக்கும்போது, தட்பவெப்பநிலையின் காரணமாக, அவர் தன்னுடைய பொருட்களை குறைக்கவேண்டியிருக்கும் என்று அவர் கூறினாராம். மேலும் அவர் தனது இலக்கின் முடிவை நெருங்க நெருங்க, அவர் மிகவும் சோர்வடைந்தவராய் இருப்பதினால், அவர் சுமந்து செல்லும் எடையை குறைத்தே ஆகவேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
ஜேம்ஸின் உணர்தல் புத்திசாலித்தனமாக இருந்தது. எபிரெயர் நிருப ஆசிரியரின் கூற்றை இது பிரதிபலிக்கிறது. வாழ்க்கையில் நமது பயணத்தைத் தொடரும்போது, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு" (12:1), தொடர்ந்து முன்னேற, நாம் குறைவான பொருட்களை கொண்டுசெல்ல வேண்டியது அவசியமாயிருக்கிறது.
கிறிஸ்தவர்களாக, இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு விடாமுயற்சி தேவை (வச. 1). நம்முடைய ஓட்டத்தை தடைசெய்யும் மன்னிக்க முடியாத சுபாவம், அற்பத்தனம், மற்ற பல பாவங்களிலிருந்து விடுபடுவதே, நம்முடைய சமூகமான பயணத்தை உறுதிசெய்யும் காரியங்கள்.
இயேசுவின் உதவியின்றி, நாம் இலகுவாகப் பயணித்து, இந்தப் பந்தயத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்ய முடியாது. நாம் “இளைப்புள்ளவர்களாய்... ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு” (வச. 2-3) “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி” ஓடக்கடவோம்.
தேவனுக்கு தெரியும்
ஒரு ஓவிய கண்காட்சியில் வரையப்பட்டிருந்த ஒரு பெரிய ஓவியத்தை ஒரு தம்பதியினர் பார்வையிட்டனர். அதின் அருகில் பெயிண்ட் கேன்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அவர்கள், அந்த ஓவியம் இன்னும் வரைந்து முடிக்கப்படவில்லை என்றும், பார்வையாளர்கள் தான் அதை நிறைவுசெய்யவேண்டும் என்று எண்ணி, தங்களுடைய பங்கிற்கு சில வர்ணங்களை பூசிவிட்டு கடந்து சென்றனர். ஆனால் அந்த ஓவியம் சமீபத்தில் வரையப்பட்டது என்பதை பிரதிபலிப்பதற்காய், ஓவியர்கள் அவற்றை அங்கே விட்டுச் சென்றிருந்தனர். அந்த சம்பவத்தின் காணொலிகளை பரிசோத்தி பின்னரே, நிர்வாகத்தினர் தங்கள் தவறை உணர்ந்தனர்.
யோர்தானின் கிழக்கே வாழ்ந்த இஸ்ரவேலர்கள் நதிக்கு அருகில் ஒரு பெரிய பலிபீடத்தைக் கட்டியபோது, தவறான புரிதலை உருவாக்கினர். தேவனை ஆராதிப்பதற்கு ஆசரிப்புக் கூடாரம் மட்டுமே என்றிருந்த நிலையில், மேற்கத்திய கோத்திரத்தார்கள் இதை தேவனுக்கு எதிரான முரட்டாட்டமாய் கருதினர் (யோசுவா 22:16).
கிழக்கத்திய கோத்திரத்தார், தேவனின் பலிபீடத்தின் மாதிரியை மட்டுமே உருவாக்க நினைத்த எண்ணத்தை விளக்கும் வரை பதட்டம் அதிகரித்தது. தங்கள் சந்ததியினர் அதைக் காணவும், தங்களின் முற்பிதாக்களுடனும் தொடர்பு வைத்துக்கொள்ளும் எண்ணத்திலும் அதை அரங்கேற்றினர் (வச. 28-29). “தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்” (வச. 22) என்று கூச்சலிட்டனர். அவர்கள் சொன்னதை மற்றவர்களும் காது கொடுத்து கேட்டு, அங்கே நடப்பதைக் கண்டு, தேவனைத் துதித்துவிட்டு வீடு திரும்பினர்.
“கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்” (1 நாளாகமம் 28:9). ஒவ்வொருவரின் நோக்கங்களும் அவருக்கு தெளிவாக தெரியும். குழப்பமான சூழ்நிலைகளை சரிசெய்ய உதவுமாறு நாம் அவரிடம் கேட்டால், அதை தெளிவுபடுத்தும் வாய்ப்பையும், நமக்கு விரோதமான செய்கைகளை மன்னிக்கும் கிருபையையும் அவர் நமக்கு அருளுவார். நாம் மற்றவர்களுடன் ஒற்றுமையாய் வாழும் எண்ணத்தோடு, அவரிடத்திற்கு திரும்புவோம்.