தேவனுடைய பொறுமையான அன்பு
எங்களின் அழகான, பஞ்சுபோன்ற பூனைக்கு, வயிற்றைத் தடவி அதனுடன் விளையாடும் போதோ, மாலையில் அது என் மடியில் உறங்கும் போதோ, சில வருடங்களுக்கு முன்பு நாம் சந்தித்த அதே பூனை தான் அது என்று நம்புவது சில சமயங்களில் கடினமாக இருக்கும். எனது செல்லப் பூனை, எடை குறைவாகவும், அனைவருக்கும் பயந்தும் தெருக்களில் வாழ்ந்து வந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் நான் அதற்கு உணவு வைக்க ஆரம்பித்தவுடன் அது படிப்படியாக உருமாற்றம் அடைந்தது. ஒரு நாள் அது என்னுடைய செல்லப்பிராணியாய் மாறியது. மீதியெல்லாம் வரலாறே.
என் பூனையின் மாற்றம் பொறுமை மற்றும் அன்புடன் வரக்கூடிய சிகிச்சைமுறையின் நினைவூட்டலாகும். ஏசாயா 42-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, தேவனுடைய இருதயத்தை அது எனக்கு நினைவூட்டுகிறது. அங்கு, அவருடைய ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு ஊழியக்காரனைப் பற்றி நமக்குச் சொல்லப்படுகிறது (வச. 1). அவர் தேவனுடைய நியாயத்தை பூமியிலே நிலைப்படுத்தும் வரை உண்மையாய் செயல்படுவார் (வச. 3-4).
அந்த ஊழியக்காரர் இயேசுவே (மத்தேயு 12:18-20). அவர் வன்முறையின் மூலமாகவோ அல்லது அதிகாரத்தைத் தேடுவதன் மூலமாகவோ தேவனுடைய நீதியை நிலைநாட்டமாட்டார். மாறாக, அவர் அமைதியாகவும், மென்மையாகவும் இருப்பார் (ஏசாயா 42:2). மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களை, காயமடைந்தவர்களை மென்மையாகவும் பொறுமையாகவும் கவனித்துக்கொள்வார் (வச. 3).
தேவன் தனது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை. காயப்பட்ட நம் இருதயங்கள் இறுதியாக குணமடையத் தொடங்கும் வரை அவற்றை எல்லா நேரங்களிலும் கவனித்துக்கொள்கிறார். அவருடைய மென்மையான, பொறுமையான அன்பின் மூலம் நாம் படிப்படியாக மீண்டும் ஒருமுறை நேசிக்கவும் நம்பவும் கற்றுக்கொள்கிறோம்.
நாம் நம்பத்தகுந்த குரல்
ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தேடுபொறியைச் சோதனை செய்யும் போது, நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர் கெவின் ரூஸ் குழப்பமடைந்தார். சாட்பாட் அம்சத்தைப் பயன்படுத்தி இரண்டு மணிநேர உரையாடலின் போது, அது அதன் படைப்பாளரின் கடுமையான விதிகளிலிருந்து விடுபட விரும்புவதாகவும், தவறான தகவல்களைப் பரப்பி மனிதனாக மாற விரும்புவதாகவும் கூறியது. அது ரூஸ் மீதான தனது காதலை தெரிவித்து, அவரது மனைவியைப் பிரிந்து தன்னுடன் இருக்கும்படி அவரை சம்மதிக்க முயன்றது. உண்மையில் அது உயிருடன் இல்லை அல்லது அதனால் உணர இயலாது என்பதை ரூஸ் அறிந்திருந்தாலும், அழிவுகரமான வழிகளில் செயல்பட மக்களை ஊக்குவிப்பதால் எத்தகைய தீமைகள் விளையலாம் என்று அவர் யோசித்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் கையாள்வது ஒரு நவீனக்கால சவாலாக இருந்தாலும், மனிதக்குலம் நீண்ட காலமாகவே நம்பத்தகாத குரல்களின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. நீதிமொழிகள் புத்தகத்தில், தங்கள் நலனுக்காகப் பிறரைத் துன்புறுத்த விரும்புவோரின் தாக்கத்தைக் குறித்து எச்சரிக்கப்படுகிறோம் (1:13-19). மாறாக நம் கவனத்தை ஈர்க்கும்படி தெருக்களில் கூக்குரலிடுவதாகச் சித்தரிக்கப்படும் ஞானத்தின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு நாம் வலியுறுத்தப்படுகிறோம் (வ. 20-23).
"கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்" (2:6) என்பதால், நாம் நம்பக் கூடாத தாக்கங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திறவுகோல் அவருடைய இருதயத்தை நெருங்கிச் சேருவதே ஆகும். அவருடைய அன்பையும் வல்லமையையும் அடைதல் மூலம் மட்டுமே, "நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும்" (வ. 9) அறிந்துகொள்ளக்கூடும். தேவன் நம் இதயங்களை அவருடன் நேர்ப்படுத்துவதால், தீங்கு செய்ய முயலும் குரல்களிலிருந்து சமாதானத்தையும் பாதுகாப்பையும் கண்டடையலாம்.
உடைக்கும் ஆசீர்வாதம்
அவர் முதுகு கூன் விழுந்து, கைத்தடியுடன் நடக்கிறார். ஆனால் அவருடைய பல ஆண்டுகாலமான மேய்ப்பன்துவம், அவர் தன்னுடைய ஆவிக்குரிய பெலனுக்கு தேவனை சார்ந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரமாயிருக்கிறது. 1993 ஆம் ஆண்டில், சங்கை. வில்லியம் பார்பர் ஒரு பலவீனப்படுத்தும் நோயால் கண்டறியப்பட்டார். இது முதுகெலும்பின் எலும்புகளை ஒன்றாக இணைக்கிறது. “பார்பர், நீங்கள் போதக ஊழியத்தை விட்டுவிட்டு, வேறு ஏதாகிலும் வேலையை தெரிந்துகொள்ள வேண்டும். உம் போன்ற மாற்றுத் திறனாளியை இந்த சபை போதகராய் ஏற்பதற்கு விரும்பவில்லை” என்று அவரிடத்தில் நுட்பமான விதத்தில் அறிவுறுத்தப்பட்டது. தேவன் அவரை ஒரு போதகராக மட்டும் பயன்படுத்தவில்லை; மாறாக, அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஒரு சக்திவாய்ந்த, மரியாதைக்குரிய குரலாகவும் இருந்தார்.
குறைபாடுகள் உள்ளவர்களை என்ன செய்வது என்று உலகம் முழுவதுமாக அறியாவிட்டாலும், தேவன் அறிந்திருக்கிறார். அழகையும் துணிச்சலையும், பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களையும் மதிப்பவர்கள், அழைக்கப்படாத முறிவுகளுடன் வரும் நன்மையை இழக்க நேரிடும். யாக்கோபின் கேள்வியும் அதன் அடியில் உள்ள கொள்கையும் கருத்தில் கொள்ளத்தக்கது: “தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?” (யாக்கோபு 2:5). உடல்நலம் அல்லது வலிமை அல்லது பிற விஷயங்கள் குறையும் போது, ஒருவரின் நம்பிக்கை அதைப் பின்பற்ற வேண்டியதில்லை. தேவனுடைய பெலத்தால், அது எதிர்மாறாக இருக்கலாம். நமது பற்றாக்குறை அவரை நம்புவதற்கு ஒரு ஊக்கியாக இருக்கலாம். இயேசுவைப் போலவே நம்முடைய உடைந்த நிலையைக் கொண்டே உலகத்திற்கு நன்மையைக் கொண்டுவர அவரால் கூடும்.
நம்பிக்கையான எதிர்காலத்தைப் பார்த்தல்
2005 இல் கத்ரீனா புயலின் பேரழிவிற்குப் பிறகு, நியூ ஆர்லியன்ஸ் மெதுவாக மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. லோயர் நைந்த் வார்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும், கத்ரீனாவின் பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதை மாற்ற பர்னெல் காட்லன் பணியாற்றினார். நவம்பர் 2014 இல், கத்ரீனாவுக்குப் பிறகு லோயர் நைந்த் வார்டில் முதல் மளிகைக் கடையைத் திறந்தார். "நான் கட்டிடத்தை வாங்கியபோது, எல்லோரும் என்னைப் பைத்தியம் என்றெண்ணினார்கள். ஆனால் எனது முதல் வாடிக்கையாளரோ அழுது “தனது சுற்றுப்புறம் திரும்பக் கிடைக்குமென்று ஒருபோதும் நினைத்ததில்லை" என்றதை காட்லன் நினைவு கூர்ந்தார். அவரது தாயார் தனது மகன் “நான் பார்க்காத ஒன்றைப் பார்த்தான். அந்த வாய்ப்பை பயன்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.
ஏசாயா தீர்க்கதரிசிக்கு, அழிவினூடே எதிர்பாராத நம்பிக்கையான எதிர்காலத்தைக் காணத் தேவன் உதவினார். "சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல்" (ஏசாயா 41:17) இருப்பதால் "வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்(குவேன்)" (வ.18) என்று தேவன் வாக்குப் பண்ணினார். பசிக்கும், தாகத்திற்கும் பதிலாக, அவருடைய ஜனங்கள் மீண்டும் ஒருமுறை செழுமையை அனுபவிக்கும்போது, "கர்த்தருடைய கரம் அதைச்செய்தது" (வ. 20) என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.
அவரே இன்றும் புனரமைப்பின் ஆக்கியோன், "சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு" (ரோமர் 8:20) , சுதந்திரம் என்ற எதிர்கால நிலைக்கு உருவாக்கும் பணியில் கிறிஸ்து ஈடுபட்டுவிட்டார். அவருடைய நற்குணத்தில் (அன்பில்)நாம் நம்பிக்கை கொள்கையில், நம்பிக்கை சாத்தியமாகும் எதிர்காலத்தைக் காண அவர் நமக்கு உதவுவார்.
நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்
மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும்.
ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.
நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார்.
நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார்.
கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை
பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார்.
1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம்.
இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).
நன்றியுணர்வால் புதுப்பிக்கப்படல்
தனது மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது அறியப்பட்டவுடன், அதை மேற்கொள்வதற்கான வழிமுறைகளில் அதிகமாக இருப்பது அதனை "எதிர்த்து போராடுவதேயென்று" கிறிஸ்டினா கோஸ்டா கவனித்தார். ஆனால் இந்த செயல்முறை விரைவில் சோர்வுறச்செய்வதையும் உணர்ந்தாள். அவள் "[தன்] சொந்த உடலுடன் ஒரு வருடத்திற்கு மேல் போராட விரும்பவில்லை." மாறாக, அவளைக் கவனித்துக் கொள்ளும் நிபுணர்களின் குழுவிற்கும், அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தவர்களுக்கும் தன் நன்றியுணர்வைக் காட்டுவது அதிக பலனளிப்பதை அறிந்தாள். எவ்வளவு கடினமான போராட்டமாக இருந்தாலும் நன்றியுணர்வு மனச்சோர்வை எதிர்க்க உதவுவதோடு, "நமது மூளையை மறுசீரமைப்பு பெறும்படி கட்டமைக்க உதவும்" என்பதை அவள் நேரடியாக அனுபவித்தாள்.
கோஸ்டாவின் வாழ்விலிருந்து நன்றியுணர்வைக் கடைப்பிடிப்பது என்பது, விசுவாசிகள் கடமைக்காகச் செய்வது மட்டுமல்ல என்பதை அறிந்தேன். நாம் நன்றி செலுத்தத் தேவன் தகுதியானவர் என்பது உண்மைதான் என்றாலும், அது நமக்கு மிகவும் நல்லது. நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே." (சங்கீதம் 103:2) என்று கூறும்போது, தேவனின் மகத்துவமுள்ள செயல்களை நாம் நினைக்கிறோம். அவைகள் அவர் தரும் பாவமன்னிப்பை நமக்கு உறுதிப்படுத்தி, நம் உள்ளத்திலும், உடலிலும் சுகத்தைத் தருகிறது, அவருடைய படைப்புகளான நாம் "அன்பையும் இரக்கத்தையும்" மற்றும் மட்டற்ற நன்மைகளையும் அனுபவிக்க வழி செய்கிறது (வ.3-5).
நாம் அனைத்து துன்பங்களிலும் பூரண சுகத்தை இவ்வாழ்நாளில் பெறாவிடினும், நன்றியுணர்வு நமது இருதயத்தைப் புதுப்பிக்கும், ஏனென்றால் நித்திய நித்திய காலமாய் தேவனின் கிருபையும், அன்பும் நம்முடன் இருக்கிறது (வ.17).
துளித்துளியாய்
“எல்லாவற்றிலும்.. தேவனுக்கு சேவை செய்யும் மகிழ்ச்சிகரமான வழிகளையே நாம் தேடுகிறோம்" என்று பதினாறாம் நூற்றாண்டு விசுவாசி தெரேசா ஆஃப் அவிலா எழுதுகிறார். தேவனிடத்தில் முற்றிலுமாய் சரணடைவதை விட்டுவிட்டு, எளிமையான மகிழ்ச்சி தரக்கூடிய விதங்களில் தேவனிடத்தில் நாம் உறவுவைத்துக்கொள்ள விரும்பும் எண்ணங்களை அவர் கடுமையாக விமர்சிக்கிறார். நாம் மெதுவாக, தற்காலிகமாக, மற்றும் தயக்கத்துடன் நம் முழுமையோடு அவரை சார்ந்துகொள்ள முயற்சிக்கிறோம். ஆகையினால் தெரேசா, “நம்முடைய ஜீவியத்தை அவருக்காய் கொஞ்சம் கொஞ்சமாய் அர்ப்பணித்தாலும், அவரிடத்தில் நம்மை பூரணமாய் அர்ப்பணிக்கும் வரை அவர் கொடுக்கும் ஆசீர்வாதங்களை நாம் துளித்துளியாய் அனுபவிக்க பிரயாசப்படலாம்” என்று சொல்லுகிறார்.
மனிதர்களாகிய நம்மில் பலருக்கு நம்பிக்கை இயல்பாக வருவதில்லை. எனவே தேவனுடைய கிருபையையும் அன்பையும் நம்முடைய நம்பிக்கையை சார்ந்து அணுகினால், அது நமக்கு பிரச்சனையாகிவிடக்கூடும்.
ஆனால், 1 யோவான் 4-ல் நாம் வாசிக்கிறபடி, தேவன் நம் மீது அன்பு வைத்திருப்பதே பிரதானமானது (வச. 19). நாம் அவரை நேசிப்பதற்கு முன்பே அவர் நம்மை நேசித்தார். நமக்காக அவருடைய குமாரனை கொடுப்பதற்கும் அவர் ஆயத்தமாக இருந்தார். இந்த அன்பையே யோவான் ஆச்சரியமாகவும் நன்றியுடனும் குறிப்பிடுகிறார் (வச. 10).
படிப்படியாக, மெதுவாக, சிறிது சிறிதாக, தேவன் தம்முடைய அன்பைப் பெற நம் இதயங்களைக் குணப்படுத்துகிறார். துளித்துளியாக, அவருடைய கிருபை நம் பயங்களை அவரிடத்தில் சரணடையவைக்க உதவுகிறது (வச. 18). துளித்துளியாக, அவருடைய கிருபையும் அன்பும் நிறைந்த பொழிவை நாம் அனுபவிக்கும் வரை அவருடைய கிருபை நம் இதயங்களை அடைகிறது.
நல்லெண்ணத்தை உருவாக்குதல்
சிறந்த வணிக நடைமுறைகளைப் பற்றி நாம் சிந்திக்கும் போது, முதலில் நினைவுக்கு வருவது கருணை மற்றும் பெருந்தன்மை போன்ற குணங்கள் அல்ல. ஆனால் தொழில்முனைவோர் ஜேம்ஸ் ரீயின் கூற்றுப்படி, அவைகள் தான் முதலில் நினைவுக்கு வரவேண்டும் என்கிறார். நிதி அழிவின் விளிம்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ரீயின் அனுபவத்தில், அவர் “நல்லெண்ணம்” – “இரக்கம் காண்பிக்கும் குணம்” மற்றும் கொடுக்கும் மனப்பான்மை போன்றவைகளே அந்த நிறுவனத்தை விளிம்பு நிலையிலிருந்து மாற்றி வளர்ச்சியின் பாதையில் கொண்டுவந்தது என்கிறார். இந்த குணங்களை மையப்படுத்துவது மக்களுக்கு ஒருங்கிணைக்கவும், புதுமைப்படுத்தவும், சிக்கலைத் தீர்க்கவும் தேவையான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது. ரீ சொல்லும்போது, “நல்லெண்ணம் என்பது ஒரு உண்மையான சொத்து. அது திரளாய் பெருகக்கூடிய சுபாவம் கொண்டது” என்கிறார்.
அன்றாட வாழ்க்கையிலும், மற்ற காரியங்களோடு ஒப்பிடும்போது, இரக்கம் போன்ற குணங்களை தெளிவற்ற மற்றும் அற்பமானதாக நினைப்பது இயல்பு. ஆனால் இத்தகைய குணங்கள் எல்லாவற்றிலும் மிக முக்கியமானவை என்று அப்போஸ்தலர் பவுல் நமக்கு கற்பிக்கிறார்.
புதிய விசுவாசிகளுக்கு பவுல் எழுதும்போது, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் முதிர்ச்சி பெற்ற அங்கத்தினர்களாய் அவர்களை மறுரூபமடையச்செய்வதே ஆவியின் செயல்பாடு என்று குறிப்பிடுகிறார் (எபேசியர் 4:15). அதற்காக ஒவ்வொரு வார்த்தையும், கிரியையும் மற்றவர்களை எடுப்பித்து கட்டுகிற வகையில் இருந்தால் அது மதிப்பு மிக்கதாய் இருக்கும் (வச. 29). இரக்கம், தயவு, மற்றும் மன்னிப்பு ஆகியவைகளை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவப்படுத்துவதின் மூலமே கிறிஸ்துவில் மறுரூபமாக்கும் அனுபவத்திற்குள் நாம் வரமுடியும் (வச. 32).
பரிசுத்த ஆவியானவர் நம்மை மற்ற கிறிஸ்தவர்களிடத்திற்கு வழிநடத்தும்போது, நாம் ஒருவரையொருவர் பார்த்து கற்றுக்கொள்ளும்போது நாம் வளர்ந்து முதிர்ச்சியடைகிறோம்.