ஜேம்ஸ், இருசக்கர வாகனத்தில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் 2011-கிமீ சாகச பயணம் மேற்கொண்டார். அவருடைய 1496வது கி.மீட்டரில், எனது நண்பர் அவரை சந்தித்தார். அப்போது ஜேம்ஸின் முகாமிடும் பொருட்களை யாரோ திருடிச் சென்றதை அறிந்ததும், எனது நண்பர் தன்னுடைய போர்வையையும் ஸ்வெட்டரையும் கொடுக்க முன்வந்தார். ஆனால் ஜேம்ஸ் அதை மறுத்துவிட்டார். ஏனென்றால், அவர் தெற்கு நோக்கி பயணிக்கும்போது, தட்பவெப்பநிலையின் காரணமாக, அவர் தன்னுடைய பொருட்களை குறைக்கவேண்டியிருக்கும் என்று அவர் கூறினாராம். மேலும் அவர் தனது இலக்கின் முடிவை நெருங்க நெருங்க, அவர் மிகவும் சோர்வடைந்தவராய் இருப்பதினால், அவர் சுமந்து செல்லும் எடையை குறைத்தே ஆகவேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். 

ஜேம்ஸின் உணர்தல் புத்திசாலித்தனமாக இருந்தது. எபிரெயர் நிருப ஆசிரியரின் கூற்றை இது பிரதிபலிக்கிறது. வாழ்க்கையில் நமது பயணத்தைத் தொடரும்போது, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு” (12:1), தொடர்ந்து முன்னேற, நாம் குறைவான பொருட்களை கொண்டுசெல்ல வேண்டியது அவசியமாயிருக்கிறது. 

கிறிஸ்தவர்களாக, இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு விடாமுயற்சி தேவை (வச. 1). நம்முடைய ஓட்டத்தை தடைசெய்யும் மன்னிக்க முடியாத சுபாவம், அற்பத்தனம், மற்ற பல பாவங்களிலிருந்து விடுபடுவதே, நம்முடைய சமூகமான பயணத்தை உறுதிசெய்யும் காரியங்கள். 

இயேசுவின் உதவியின்றி, நாம் இலகுவாகப் பயணித்து, இந்தப் பந்தயத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்ய முடியாது. நாம் “இளைப்புள்ளவர்களாய்… ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு” (வச. 2-3) “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி” ஓடக்கடவோம்.