பல ஆண்டுகளுக்கு முன்பு, நந்திதாவும் அவரது கணவர் விஷாலும் அதிக சம்பளம் வாங்கக்கூடிய, மன அழுத்தம் நிறைந்த சாப்ட்வேர் வேலைகளை விட்டுவிட்டு, எளிமையான, மன அழுத்தமில்லாத விவசாய வாழ்க்கையைத் தழுவுவதற்கான தீர்மானத்தை எடுத்தனர். அவர்கள் தேவனுடனும், தங்கள் ஒருவரோடொருவருடனும் நேரத்தை செலவிட எண்ணி, அமைதியான மலை நகரத்திற்கு சென்றனர். தோட்டத்திற்கு திரும்பும் வழியான, இயற்கையால் சூழப்பட்ட அமைதியான வாழ்க்கை முறையை அனுபவித்தனர்.

ஏதேன், ஆதியிலே தேவன் நமக்காக படைத்த பரதீசு. இந்தத் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும், சாத்தானுக்கு செவிகொடுக்கும் முன்புவரை தேவனை வழக்கமாய் சந்திக்க நேரிட்டது (ஆதியாகமம் 3:6-7 பார்க்கவும்). ஆனால் அந்த நாள் முற்றிலும் வித்தியாசமானது. “பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்” (வச. 8).

அவர்கள் என்ன செய்தார்கள் என்று தேவன் கேட்டபோது, ஆதாமும் ஏவாளும் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தினர். அவர்கள் மறுத்தாலும், தேவன் அவர்களை அங்கே விடவில்லை. அவர் “ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்” (வச. 21). இது நம்முடைய பாவங்களுக்கான இயேசுவின் மரணத்தை அடையாளப்படுத்துகிறது. 

தேவன் நமக்கு ஏதேனுக்குத் திரும்பும் வழியைக் காண்பிக்கவில்லை. அவருடனான முறிந்த உறவை மீட்டெடுக்க அவர் நமக்கு ஒரு வழியைக் கொடுத்தார். நாம் தோட்டத்திற்கு திரும்ப முடியாது. ஆனால் நாம் தோட்டத்தின் தேவனிடம் திரும்பலாம்.