மீண்டும் எழு
ரயன் ஹால் என்னும் அமெரிக்காவின் ஒலிம்பிக் ஓட்டக்காரர், மாரத்தானின் பாதி ஓட்டத்தில் சாதனை படைத்துள்ளார். 13.1 மைல் தூரத்தை (21 கி.மி.) 59 நிமிடங்கள் 43 விநாடிகளில் கடந்து, அமெரிக்க தடகள வரலாற்றில் ஒரு மணி நேரத்திற்குள் இவ்வளவு தூரத்தைக் கடந்தவர் என்று சாதனைப் படைத்தார். ஆனாலும் அந்த ஓட்டத்தை அவரால் சரியாய் முடிக்கமுடியவில்லை.
வெற்றியையும் தோல்வியையும் ருசிபார்த்தபோதிலும், அவரைப் பாதுகாத்தது இயேசுவின் மீதான விசுவாசம் என்று சொல்லுகிறார். நீதிமொழிகள் புத்தகத்தில் அவருக்கு பிடித்த வார்த்தை, “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும், திரும்பவும் எழுந்திருப்பான்” (24:16) என்பதே. தேவன் மீது நம்பிக்கை வைத்து, தேவனோடு சரியான உறவில் இருக்கும் நீதிமானுக்கும் பாடுகளும் துன்பங்களும் உண்டு என்பதை இந்த நீதிமொழி வலியுறுத்துகிறது. ஆனாலும் அந்த துன்பத்தின் மத்தியிலும் தொடர்ந்து தேவனை பற்றிக்கொள்ளும்போது மீண்டும் எழுந்து நிற்க தேவன் பெலன் தருவார்.
நீங்கள் சமீபத்தில் பாதிக்கக்கூடிய மனச் சோர்வுக்கும் தோல்விக்கும் ஆளாகி, மீளுவது சாத்தியமேயில்லை என்று எண்ணியதுண்டா? வேதாகமம் நம்முடைய பலத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், தேவன் மீதும் அவர் வாக்குத்தத்தத்தின் மீதும் நம்பிக்கை வைக்க நம்மை உற்சாகப்படுத்துகிறது. அவரை நம்பும்போது வாழ்க்கையில் நேரிடுகிற பிரச்சனையிலிருந்து கடினமான பிரச்சனைகள் வரை அனைத்தையும் மேற்கொள்ள தேவனுடைய ஆவியினாலே நாம் பெலப்படுத்தப்படுகிறோம் (1 கொரி. 12:9).
மேன்மை
வடக்கு இங்கிலாந்து தேசத்தில், கத்பர்ட் மிகவும் விரும்பப்பட்ட ஒரு நபர். 7ஆம் நூற்றாண்டில் அநேக இடங்களில் சுவிசேஷ ஊழியம் செய்த இவர் அவ்வப்போது மன்னர்களுக்கும் ஆலோசகராகவும், மாநில விவகாரங்களில் தீர்வுகாணவும் உதவி செய்துள்ளார். அவருடைய மரணத்திற்கு பின், அவருடைய நினைவாக துர்ஹாம் என்னும் பட்டணம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் கத்பர்ட்டின் பணி இவைகளைக் காட்டிலும் அதிகம்.
ஒரு பெரிய வியாதியினால் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் சிக்குண்டு தவித்தபோது, கத்பர்ட் மக்களை தேற்றுவதற்கு அந்த இடத்திற்கு போனார். அப்படி ஒரு கிராமத்தில் தன் பணியை முடித்து கிளம்பியபோது யாருக்காவது ஜெப தேவை இருக்கிறதா என்று பார்க்க, அங்கு ஒரு பெண் தன் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள். அவள் ஏற்கனவே ஒரு மகனை இழந்தவள். அவள் தூக்கிவந்த அந்த பிள்ளையும் மரிக்கும் தருவாயில் இருந்தது. ஜூரத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த பிள்ளையை தன் கையில் தூக்கிய கத்பர்ட், அவனுக்காய் பாரத்துடன் ஜெபித்து, அவனுடைய நெற்றியில் முத்தமிட்டார். அவனைப் பார்த்து, “பயப்படாதே, இனி உன் குடும்பத்தில் யாரும் மரிப்பதில்லை” என்றார். அதற்கேற்றாற்போல் அந்த பிள்ளையும் உயிர் பிழைத்தது.
இயேசுகிறிஸ்துவும் ஒரு சிறு பிள்ளையை தூக்கி, ஒரு பெரிய பாடத்தை கற்றுத் தந்தார். “இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்” என்றார் (மாற்கு 9:37). ஒரு தொகுப்பாளர் விசேஷ விருந்தாளியை நிகழ்ச்சிக்கு வரவேற்பதுபோல, யூத கலாச்சாரத்தின்படி, ஒருவரை வரவேற்பது என்பது அவர்களுக்கு பணிவிடை செய்வது என்று பொருள்படுகிறது. சிறியவர்கள் பெரியவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும் என்ற நிலை இருந்தபோது, இயேசு சொன்ன இந்த காரியம் சற்று அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். இயேசு சொல்ல வந்தது என்ன? சிறுமையும் எளிமையுமான காரியங்களுக்கு ஊழியம் செய்வதே உண்மையான மேன்மை (வச. 35).
மன்னர்களுக்கு ஆலோசகர். வரலாற்று புகழ்பெற்றவர். அவர் நினைவாக ஒரு பட்டணம் அமைந்துள்ளது. ஷதன் எஜமானை பிரதிபலிக்கும் அவளின் எளிமையான செயலாய் பதிந்துகொள்வன, தாயின் அழுகை குரலுக்கு செவிகொடுத்தது மற்றும் சிறு பிள்ளையின் நெற்றியில் முத்தம் இடப்பற்றது.. தன் எஜமானனை பிரதிபலிக்கும் எளிமையான வாழ்க்கை.
மறக்கப்படுவதில்லை
மாமா! என்னை நீங்கள் முடித் திருத்தகத்திற்கும் பல்பொருள் அங்காடிக்கும் கூட்டிச்சென்றது நினைவிருக்கிறதா? அன்று நான் காக்கி நிற பேண்ட்டும், நீலநிற சட்டையும், கருநீல நிற ஸ்வெட்டரும், காபி நிற காலணியும் அணிந்திருந்தேன். அது ஒரு வியாழக்கிழமை, அக்டோபர் 20, 2016. இதை நினைவுகூர்ந்தது எனது அக்கா மகன்; அவன் ஒரு மனநலம் குன்றியவன். பல ஆண்டுகள் கழிந்தாலும் சில காரியங்களை அவன் மறக்காமல் நினைவில் வைத்திருந்தான்.
இந்த சூழ்நிலையிலும் அவனுடைய இந்த நினைவுகள், எல்லாம் அறிந்த, காலத்தையும் நித்தியத்தையும் கையில் வைத்திருக்கிற அன்பான தேவனை எனக்கு நினைவுபடுத்தியது. நடப்பது எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் தன்னுடைய ஜனத்தையும் அவர்களுக்கு வாக்கு பண்ணினதையும் மறக்கமாட்டார். நீங்கள் தேவனால் மறக்கப்பட்டீர்களா? என்று தேவனிடத்தில் கேள்வியெழுப்பிய தருணங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதுவும் மற்றவர்கள் மகிழ்ச்சியாக சுகித்து, வெற்றியுள்ள வாழ்க்கை வாழும்போது அப்படி எண்ணத்தோன்றியதா?
இஸ்ரவேலர்களின் கடினமான சூழ்நிலைகள் அவர்களை “கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார்” என்று சொல்லத் தூண்டியது. ஆனால் அது உண்மையில்லை. ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு இரங்குவதைக் காட்டிலும் தேவனுடைய இரக்கமும் கரிசணையும் அதிகமாய் இருக்கிறது (வச. 15). தேவன் “கைவிட்டார்,” “மறந்துவிட்டார்” என்று சொல்லுவதற்கு முன்பு, அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாய் என்ன செய்திருக்கிறார் என்பதை யோசித்துப்பாருங்கள். மன்னிப்பைக் கொண்டுவரும் சுவிசேஷத்தில் தேவன், “நான் உன்னை மறப்பதில்லை” என்று மிகத் தெளிவாய் சொல்லுகிறார் (வச. 15).
இயேசுவோடு நடத்தல்
சாப்பாட்டுப் பொட்டலங்கள், நீர்புகா காலணிகள், வரைபடம் போன்றவைகள் மலை ஏற்றம் மேற்கொள்ளுகிறவர்கள் எடுத்துச் செல்லும் சில முக்கியப் பொருட்கள். இந்த மலைப்பாதையானது ஓடைகள், ஏரிகள், மரங்கள், குன்றுகள் என்று ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் கொண்ட பாதையாயிருக்கும். ஏறும் சிகரங்களின் உயரங்களைப் பொறுத்து, நிர்ணயித்த உயரத்தை சென்றடைய சில வாரங்கள் பிடிக்கும் என்பதினால், அதிகமான உணவுப்பொருட்களை எடுத்துச் செல்வது சாத்தியமல்ல. அநேக காரியங்களை தூக்கி சுமக்கமுடியாது; ஆனால் கொஞ்சம் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வெகுதூரம் செல்லவும் முடியாது.
கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாமும் நம்முடைய ஓட்டத்தை நேர்த்தியாய் முடிப்பதற்கு நம்மோடு எதைக் கொண்டு செல்லுகிறோம் என்பது மிகவும் முக்கியம். எபிரெயர் 12இல் பவுல் அப்போஸ்தலர் “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு” ஓடுவதற்கு நம்மை உற்சாகப்படுத்துகிறார். அவர் நம்முடைய வாழ்க்கையை நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டமாகவும், அதில் “இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு” ஓடவும் ஊக்குவிக்கிறார் (வச. 1,3). பாவத்தை சுமந்துசெல்வதும் தேவ திட்டத்திற்கு ஒவ்வாத காரியங்களை சுமந்துகொண்டு செல்வதும் தேவையற்ற பலுவாகிவிடும்.
மலையேற்றத்திற்கு தேவைப்படும் பொருட்களின் பட்டியல் போலவே இயேசுவை பின்பற்றுவதற்கு தேவையான பட்டியலையும் தேவன் வேதாகமத்தில் கொடுத்துள்ளார். நம்முடைய சுபாவங்கள், கனவுகள், ஆசைகள் ஆகியவற்றில் எது தேவையானது என்பதை வேதத்தின் அடிப்படையில் அறிவது நல்லது. சுமையில்லாமல் வெறுமையாய் நடந்தால் நம் ஓட்டத்தை நேர்த்தியாய் நிறைவு செய்யமுடியும்.
தத்தெடுக்கும் அழகு
“த பிளைன்ட் சைட்” என்று 2009 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படமானது, மைக்கேல் ஓஹெர் என்பவரின் நிஜக்கதை. ஒரு குடும்பம் அவனுக்கு ஆதரவு தந்து, கற்றுக்கொள்ளுதலில் அவனுக்கு இருந்த குறைபாட்டை மேற்கொள்ளச் செய்து, அமெரிக்க கால்பந்து விளையாட்டில் சிறந்தவனாய் மாற்றுகிறது. அதில் ஒரு காட்சியில், அவர்களோடு பல மாதங்கள் தங்கியிருந்த மைக்கேலைப் பார்த்து, அவனை தத்தெடுத்துக்கொள்வதைக் குறித்து அவனிடத்தில் கேட்கிறார்கள். மைக்கேல் அவர்களைப் பார்த்து, நான் ஏற்கனவே குடும்பத்தின் அங்கத்தினராகவே இருப்பதாக மிக இனிமையாகவும் மென்மையாகவும் பதிலளிக்கிறான்.
இது ஒரு அழகான தருணம். தத்தெடுப்பது ஓர் அழகான விஷயம். அன்பு விரிவடைந்து, குடும்பம் ஒரு புது நபருக்கு தன் இரண்டு கரங்களையும் விரிக்கிறது. மைக்கேலின் வாழ்க்கை மாறியதுபோல, தத்தெடுத்தல் வாழ்க்கையை மாற்றுகிறது.
விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் “தேவனுடைய பிள்ளைகளாய்” மாற்றப்படுகின்றனர் (கலா. 3:26). நாம் தேவனால் தத்தெடுக்கப்பட்டு அவருடைய குமாரனாகவும் குமாரத்தியாகவும் மாற்றப்படுகிறோம் (4:5). தேவனுடைய தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாய் அவருடைய குமாரனுடைய ஆவியைப் பெற்று தேவனை “அப்பா” என்று அழைக்கவும் (வச. 6), அவருடைய சுதந்திரனாயும் (வச. 7), கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரமாயும் (ரோமர் 8:17) மாற்றப்பட்டுள்ளோம். நாம் அவருடைய குடும்பத்தின் முழுமையான அங்கத்தினராய் மாற்றப்படுகிறோம்.
மைக்கேல் ஓஹெரின் தத்தெடுப்பு அவனுடைய வாழ்க்கையையும், அங்கீகாரத்தையும், அவனுடைய எதிர்காலத்தையும் மாற்றியது. தேவனால் தத்தெடுக்கப்பட்ட நாம் எவ்வளவு மேன்மையானவர்கள்! அவரை தகப்பனாய் அறிந்ததினால் நம் வாழ்க்கை மாறுகிறது. அவருக்கு சொந்தமானதினால் நம் அங்கீகாரம் மாறுகிறது. மகிமையான நித்திய மாட்சிமை வாக்களிக்கப்பட்டதினால் நம் எதிர்காலமும் மாற்றப்படுகிறது.