வடக்கு இங்கிலாந்து தேசத்தில், கத்பர்ட் மிகவும் விரும்பப்பட்ட ஒரு நபர். 7ஆம் நூற்றாண்டில் அநேக இடங்களில் சுவிசேஷ ஊழியம் செய்த இவர் அவ்வப்போது மன்னர்களுக்கும் ஆலோசகராகவும், மாநில விவகாரங்களில் தீர்வுகாணவும் உதவி செய்துள்ளார். அவருடைய மரணத்திற்கு பின்,  அவருடைய நினைவாக துர்ஹாம் என்னும் பட்டணம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் கத்பர்ட்டின் பணி இவைகளைக் காட்டிலும் அதிகம். 

ஒரு பெரிய வியாதியினால் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் சிக்குண்டு தவித்தபோது, கத்பர்ட் மக்களை தேற்றுவதற்கு அந்த இடத்திற்கு போனார். அப்படி ஒரு கிராமத்தில் தன் பணியை முடித்து கிளம்பியபோது யாருக்காவது ஜெப தேவை இருக்கிறதா என்று பார்க்க, அங்கு ஒரு பெண் தன் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள். அவள் ஏற்கனவே ஒரு மகனை இழந்தவள். அவள் தூக்கிவந்த அந்த பிள்ளையும் மரிக்கும் தருவாயில் இருந்தது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அந்த பிள்ளையை தன் கையில் தூக்கிய கத்பர்ட், அவனுக்காய் பாரத்துடன் ஜெபித்து, அவனுடைய நெற்றியில் முத்தமிட்டார். அவனைப் பார்த்து, “பயப்படாதே, இனி உன் குடும்பத்தில் யாரும் மரிப்பதில்லை” என்றார். அதற்கேற்றாற்போல் அந்த பிள்ளையும் உயிர் பிழைத்தது. 

இயேசுகிறிஸ்துவும் ஒரு சிறு பிள்ளையை தூக்கி, ஒரு பெரிய பாடத்தை கற்றுத் தந்தார். “இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்” என்றார் (மாற்கு 9:37). ஒரு தொகுப்பாளர் விசேஷ விருந்தாளியை நிகழ்ச்சிக்கு வரவேற்பதுபோல, யூத கலாச்சாரத்தின்படி, ஒருவரை வரவேற்பது என்பது அவர்களுக்கு பணிவிடை செய்வது என்று பொருள்படுகிறது. சிறியவர்கள் பெரியவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும் என்ற நிலை இருந்தபோது, இயேசு சொன்ன இந்த காரியம் சற்று அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். இயேசு சொல்ல வந்தது என்ன? சிறுமையும் எளிமையுமான காரியங்களுக்கு ஊழியம் செய்வதே உண்மையான மேன்மை (வச. 35).

மன்னர்களுக்கு ஆலோசகர். வரலாற்று புகழ்பெற்றவர். அவர் நினைவாக ஒரு பட்டணம் அமைந்துள்ளது. தன் எஜமானை பிரதிபலிக்கும் அவரின் எளிமையான செயலாய் பதிந்துகொள்வன, தாயின் அழுகை குரலுக்கு செவிகொடுத்தது மற்றும் சிறு பிள்ளையின் நெற்றியில் முத்தமிடப்பட்டது.. தன் எஜமானனை பிரதிபலிக்கும் எளிமையான வாழ்க்கை.