இருளை எதிர்கொள்ளுதல்
1960 களின் நடுப்பகுதியில், மனித ஆன்மாவில் இருளின் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் இரண்டு பேர் பங்கேற்றனர். அவர்கள் தனித்தனி குகைகளுக்குள் நுழைந்தனர், அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் உணவு மற்றும் தூக்க பழக்கத்தை கண்காணித்தனர். ஒருவர் முழு இருளில் 88 நாட்களும், மற்றொருவர் 126 நாட்களும் இருந்தனர். ஒவ்வொருவரும் எவ்வளவு காலம் முழு இருளில் இருக்கமுடியும் என்று தீர்மானித்திருந்த மாதங்களுக்குள்ளாகவே சோர்ந்து போனார்கள். ஒருவர் குறுகிய நேரம் தான் தூங்கினதாக நினைத்தார். ஆனால் உண்மையாக அவர் 30 மணிநேரம் தூங்கியுள்ளதைக் கண்டுபிடித்தார். இருள் நம்மை திசைதிருப்பும்.
தேவனின் மக்கள் தனித்துவிடப்பட்ட இருளில் தங்களைக் கண்டார்கள். என்ன நடக்கும் என்று தெரியாமல் அவர்கள் காத்திருந்தனர். ஏசாயா தீர்க்கதரிசி இருளை அவர்களின் திசைதிருப்பலுக்கான ஓர் உருவகமாகவும், தேவனின் தீர்ப்பைப் பற்றி பேசுவதற்கான ஒரு வழியாகவும் பயன்படுத்தினார் (ஏசாயா 8:22). முன்னதாக, எகிப்தியர்களை இருள் வாதையாக சந்தித்தது (யாத்திராகமம் 10:21-29). இப்போது இஸ்ரவேல் இருளில் மூழ்கியது.
ஆனால் ஒரு ஒளி வரும். “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசாயா 9:2). அடக்குமுறை உடைக்கப்படும்; திசைதிருப்பல் முடிவுக்கு வரும். எல்லாவற்றையும் மாற்றி ஒரு புதிய நாளைக் கொண்டுவரவும் - மன்னிப்பு மற்றும் சுதந்திரத்தின் நாளைக் கொண்டுவரவும் ஒரு பாலகன் பிறப்பார் (வச.6).
இயேசு வந்தார்! உலகின் இருள் திசைதிருப்பக்கூடியதாக இருந்தாலும், கிறிஸ்துவில் காணப்படும் மன்னிப்பு, சுதந்திரம் மற்றும் ஒளியின் ஆறுதலை நாம் பூரணமாக அனுபவிக்கலாம்.
அன்பால் தொடரப்பட்டது
“இரவும் பகலும் நான் அவரை விட்டு ஓடினேன்” என்னும் வரிகள் ஆங்கிலக் கவிஞர் பிரான்சிஸ் தாம்சனின் “தி ஹவுண்ட் ஆஃப் ஹெவன்” என்ற புகழ்பெற்ற கவிதையின் துவக்க வரிகள். தேவனிடமிருந்து மறைக்க அல்லது ஓட முயற்சித்தபோதிலும், இயேசுவின் தொடர்ச்சியான தேடலை தாம்சன் விவரிக்கிறார். “அவர் என்னைத் தான் தேடுகிறார்!" என்று கவிஞர் முடிக்கிறார்.
தேவனின் தேடிவரும் அன்பே யோனா புத்தகத்தின் மையக் கருப்பொருள். நினிவே மக்களுக்கு (இஸ்ரவேல் ஜனங்களின் மோசமான எதிரிகள்) தேவனிடம் திரும்ப வேண்டிய அவசியம் குறித்து சொல்லும்படியான ஒரு பணியை தீர்க்கதரிசி பெற்றார். ஆனால் அதற்கு பதிலாக “யோனா கர்த்தருடைய சமூகத்தினின்று விலகி” (யோனா 1:3), நினிவேயின் எதிர்திசையில் பயணிக்கும் ஒரு கப்பலில் பயணம் செய்கிறார். ஆனால் கப்பல் பெருங்காற்றில் சிக்கியது. கப்பலில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக, பெரிய மீனினால் விழுங்கப்படுவதற்காக, யோனா கடலில் வீசப்பட்டான் (1:15-17).
தேவனிடமிருந்து ஓடுவதற்கு பல முயற்சிகள் எடுத்தபோதிலும், தேவன் அவனை பின்தொடர்ந்தார் என்று யோனா தனது அழகான கவிதையில் விவரிக்கிறார். மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட யோனாவுக்கு மீட்பு அவசியப்படும்போது, அவன் ஜெபத்தில் தேவனிடம் கூக்குரலிட்டு, அவருடைய அன்பை நோக்கி திரும்புகிறார் (2:2,8). தேவன் யோனாவுக்கு மட்டுமல்லாது அவனுடைய அசீரிய எதிரிகளுக்கும் மீட்பை கட்டளையிட்டார் (3:10).
இரண்டு கவிதைகளிலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, நாம் தேவனிடமிருந்து ஓட முயற்சிக்கும் பல பருவங்கள் நம் வாழ்வில் இருக்கலாம். எனினும் இயேசு நம்மை நேசிக்கிறார், அவருடனான மீட்டெடுக்கப்பட்ட உறவுக்கு நேராக நம்மை வழிநடத்துகிறார் (1 யோவான் 1:9).
குற்ற உணர்ச்சியும் மன்னிப்பும்
“ஹியூமன் யுனிவர்சல்ஸ்” என்ற தனது புத்தகத்தில், மானுடவியலாளர் டொனால்ட் பிரவுன் மனிதகுலத்திற்கு பொதுவான மக்களின் நானுறுக்கும் அதிகமான பழக்கவழக்கங்களை பட்டியலிடுகிறார். பொம்மைகள், நகைச்சுவைகள், நடனங்கள் மற்றும் பழமொழிகள், பாம்புகளின் போர்க்குணம், மற்றும் சரங்களை கட்டுவது போன்றவற்றை அதில் உள்ளடக்கியுள்ளார்! அதேபோல், எல்லா கலாச்சாரங்களிலும் சரி மற்றும் தவறு என்ற கருத்துக்கள் உள்ளன. அங்கு தாராள குணம் பாராட்டப்படுகிறது; வாக்குறுதிகள் மதிக்கப்படுகிறது; மற்றும் கஞ்சத்தனம் மற்றும் கொலை செய்தல் ஆகியவை தவறானவை என்றும் புரிந்துகொள்ளப்படுகின்றன. நாம் எங்கிருந்தாலும் நம் அனைவருக்கும் மனசாட்சி உணர்வு இருக்கிறது.
அப்போஸ்தலனாகிய பவுல் இதேபோன்ற கருத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறினார். தேவன் யூத ஜனங்களுக்கு சரி தவறுகளை தெளிவுபடுத்த பத்து கட்டளைகளைக் கொடுத்தாலும், புறஜாதியார் தங்கள் மனசாட்சியின்படி நடக்கிறதின் மூலம் சரியானதைச் செய்யமுடியும் என்பதால், தேவனின் நியாயப்பிரமாணங்கள் அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருப்பதாக பவுல் குறிப்பிடுகிறார் (ரோமர் 2:14-15). அதினால் மக்கள் எப்போதும் சரியானதையே செய்தனர் என்று அர்த்தமல்ல. புறஜாதியார் தங்கள் மனசாட்சிக்கு எதிராக செயல்பட்டார்கள் (1:32), யூதர்கள் நியாயப்பிரமாணத்தை மீறினார்கள் (2:17-24), இருவரும் குற்றவாளிகளாக இருந்தனர். ஆனால் இயேசுவை விசுவாசிப்பதின் மூலம், தேவன் நம்முடைய எல்லா நியாயப்பிரமாண மீறுதலினால் ஏற்பட்ட மரண தண்டனையை நீக்குகிறார் (3:23-26; 6:23).
தேவன் எல்லா மனிதர்களையும் சரி மற்றும் தவறு என்ற உணர்வோடு படைத்ததால், நாம் செய்த ஒரு கெட்ட காரியம் அல்லது நாம் செய்யத் தவறிய ஒரு நல்ல காரியம் குறித்து நாம் ஒவ்வொருவரும் சில குற்ற உணர்வை பெறுகிறோம். அந்த பாவங்களை நாம் அறிக்கையிடும்போது, தேவன் ஒரு வெள்ளை பலகையை சுத்தமாக துடைப்பது போல அனைத்து பாவங்களையும் துடைக்கிறார். நாம் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் அவரிடம் கேட்பது மட்டுமே நாம் செய்ய வேண்டிய ஒன்று.
பிரகாசிக்கும் சுடர்கள்
நான் கண்களை மூடிக்கொண்டு, நான் வளர்ந்த வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியும். என் தந்தையுடன் நட்சத்திரங்களை பார்த்து மகிழ்ந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவருடைய தொலை நோக்கியின் உதவியோடு, வானத்தில் புள்ளிகளாய் ஒளிரும் சுடர்களை உற்று நோக்கினோம். வெப்பத்தினாலும் நெருப்பு பிழம்பினாலும் தோன்றும் இந்த ஒளியின் கூறுகள், மென்மையான கருவானத்திற்கு முற்றிலும் நேர்மாறாக ஒளிர்ந்தது.
உங்களை ஒரு பிரகாசிக்கும் சுடராக கருதுகிறீர்களா? நான் மனித சாதனைகளின் உயரத்தை எட்டுவது பற்றி பேசவில்லை, ஆனால் உடைக்கப்பட்டு, தீமைகளின் இருண்ட பின்னணிக்கு முரணாக ஒளிர்வதைக்குறித்து பேசுகிறேன். பவுல் அப்போஸ்தலர் பிலிப்பு சபை விசுவாசிகளிடம், முறுமுறுப்பதையும் தர்க்கிப்பதையும் தவிர்த்து, “ஜீவவசனத்தை பிடித்துக்கொண்டால்,” தேவன் அவர்களினூடாகவும் பிரகாசிப்பார் என்று கூறுகிறார் (பிலிப்பியர் 2:14-16).
மற்ற விசுவாசிகளுடனான நமது ஐக்கியம் மற்றும் தேவன் மீதுள்ள நம்பிக்கை ஆகியவை நம்மை உலகத்திலிருந்து வேறுபிரித்துக் காட்டும். பிரச்சனை என்னவென்றால், இந்த விஷயங்கள் இயற்கையாக வராது. தேவனுடன் நெருங்கிய உறவில் இருக்கவேண்டும் என்பதற்காக, சோதனையை வெல்ல நாம் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். நம்முடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுடன் இணக்கமாக இருக்க சுயநலத்திற்கு எதிராக நாம் போராடுகிறோம்.
ஆனால் இன்னும் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. உயிரோடு இருக்கிற ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் செயல்படும் தேவனின் ஆவியானவர் சுய கட்டுப்பாட்டுடனும், கனிவுடனும், உண்மையுமாயிருக்க நமக்கு அதிகாரம் கொடுக்கிறார் (கலாத்தியர் 5:22-23). நம்முடைய இயல்புக்கு அப்பாற்பட்டு நாம் அழைக்கப்பட்டதுபோலவே, தேவனும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் நமக்கு உதவுகிறார் (பிலிப்பியர் 2:13). ஒவ்வொரு விசுவாசியும் ஆவியின் சக்தியால் ஒரு “பிரகாசிக்கும் நட்சத்திரமாக” மாறினால், தேவனின் ஒளி நம்மைச் சுற்றியுள்ள இருளை எவ்வாறு விரட்டும் என்பதை சற்று கற்பனை செய்துபாருங்கள்!
எடுக்கப்பட்டது
என்னுடைய வயதான நாய் ஒன்று என் பக்கத்தில் அமர்ந்து வெட்டவெளியில் வெறித்துப் பார்க்கிறது. அதின் எண்ணங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்காது. ஆனால் அவைகளால் மரணத்தை விளங்கிக்கொள்ள முடியாது என்பதினால் அது மரணத்தைக் குறித்து யோசிக்கவில்லை என்பது உறுதி. எதிர்கால விஷயங்களைப் பற்றி அவைகள் சிந்திப்பதில்லை. ஆனால் நாம் சிந்திக்கிறோம். நம் வயது அல்லது உடல்நிலை அல்லது செல்வம் எதுவாக இருந்தாலும், நாம் ஒரு கட்டத்தில் இறப்பதைப் பற்றி சிந்திக்கிறோம். சங்கீதம் 49:20-ன் படி, மிருகங்களைப் போலல்லாமல், நமக்கு “புரிதல்” இருக்கிறது. நாம் இறந்துவிடுவோம் என்று நமக்குத் தெரியும், அதை மாற்ற நாம் எதுவும் செய்யமுடியாது. “எவ்விதத்தினாலாவது ஒருவரை மீட்டுக்கொள்ளவும் அல்லது அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்கு கொடுக்கவுங்கூடாதே" (வச.8). தன்னை கல்லறையிலிருந்து மீட்டெடுப்பதற்கு போதுமான பணம் யாரிடமும் இல்லை.
ஆனால் மரணத்தின் முடிவில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது: “ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்” என்று சங்கீதக்காரன் வலியுறுத்துகிறார். “அவர் என்னை ஏற்றுக்கொள்வார்” (வச. 15 அதாவது, “அவர் என்னை உள்ளே அழைத்துச் செல்வார்”) என்றும் கூறுகிறார். “நாம் போகும்போது நம்முடைய உள்ளே அழைத்துக்கொள்வதற்குதான் வீடு என்று பெயர்” என்று ராபர்ட் ஃப்ரோஸ்ட் கூறுகிறார்.
தேவன் தம்முடைய குமாரன் மூலமாக மரணத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார், அவர் “எல்லாரையும் மீட்கும்பொருளாக தன்னை ஒப்புக்கொடுத்தார்” (1 தீமோத்தேயு 2:6). இவ்வாறு நம்முடைய காலம் வரும்போது, அவர் நம்மை வாழ்த்தி வரவேற்று, நம்மை உள்ளே அழைத்துச் செல்வார் என்று இயேசு வாக்குறுதி அளித்துள்ளார் (யோவான் 14:3).
என்னுடைய காலம் வரும்போது, என் வாழ்க்கையின் விலைக்கிரயத்தை தேவனுக்குக் கொடுத்த இயேசு என்னைத் திறந்த கரங்களுடன் தம்முடைய பிதாவின் வீட்டிற்கு வரவேற்பார்.