நான் கண்களை மூடிக்கொண்டு, நான் வளர்ந்த வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியும். என் தந்தையுடன் நட்சத்திரங்களை பார்த்து மகிழ்ந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவருடைய தொலை நோக்கியின் உதவியோடு, வானத்தில் புள்ளிகளாய் ஒளிரும் சுடர்களை உற்று நோக்கினோம். வெப்பத்தினாலும் நெருப்பு பிழம்பினாலும் தோன்றும் இந்த ஒளியின் கூறுகள், மென்மையான கருவானத்திற்கு முற்றிலும் நேர்மாறாக ஒளிர்ந்தது.

உங்களை ஒரு பிரகாசிக்கும் சுடராக கருதுகிறீர்களா? நான் மனித சாதனைகளின் உயரத்தை எட்டுவது பற்றி பேசவில்லை, ஆனால் உடைக்கப்பட்டு, தீமைகளின் இருண்ட பின்னணிக்கு முரணாக ஒளிர்வதைக்குறித்து பேசுகிறேன். பவுல் அப்போஸ்தலர் பிலிப்பு சபை விசுவாசிகளிடம், முறுமுறுப்பதையும் தர்க்கிப்பதையும் தவிர்த்து, “ஜீவவசனத்தை பிடித்துக்கொண்டால்,” தேவன் அவர்களினூடாகவும் பிரகாசிப்பார் என்று கூறுகிறார் (பிலிப்பியர் 2:14-16).

மற்ற விசுவாசிகளுடனான நமது ஐக்கியம் மற்றும் தேவன் மீதுள்ள நம்பிக்கை ஆகியவை நம்மை உலகத்திலிருந்து வேறுபிரித்துக் காட்டும். பிரச்சனை என்னவென்றால், இந்த விஷயங்கள் இயற்கையாக வராது. தேவனுடன் நெருங்கிய உறவில் இருக்கவேண்டும் என்பதற்காக, சோதனையை வெல்ல நாம் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். நம்முடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுடன் இணக்கமாக இருக்க சுயநலத்திற்கு எதிராக நாம் போராடுகிறோம். 

ஆனால் இன்னும் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. உயிரோடு இருக்கிற ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் செயல்படும் தேவனின் ஆவியானவர் சுய கட்டுப்பாட்டுடனும், கனிவுடனும், உண்மையுமாயிருக்க நமக்கு அதிகாரம் கொடுக்கிறார் (கலாத்தியர் 5:22-23). நம்முடைய இயல்புக்கு அப்பாற்பட்டு நாம் அழைக்கப்பட்டதுபோலவே, தேவனும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் நமக்கு உதவுகிறார் (பிலிப்பியர் 2:13). ஒவ்வொரு விசுவாசியும் ஆவியின் சக்தியால் ஒரு “பிரகாசிக்கும் நட்சத்திரமாக” மாறினால், தேவனின் ஒளி நம்மைச் சுற்றியுள்ள இருளை எவ்வாறு விரட்டும் என்பதை சற்று கற்பனை செய்துபாருங்கள்!