என்னுடைய வயதான நாய் ஒன்று என் பக்கத்தில் அமர்ந்து வெட்டவெளியில் வெறித்துப் பார்க்கிறது. அதின் எண்ணங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்காது. ஆனால் அவைகளால் மரணத்தை விளங்கிக்கொள்ள முடியாது என்பதினால் அது மரணத்தைக் குறித்து யோசிக்கவில்லை என்பது உறுதி. எதிர்கால விஷயங்களைப் பற்றி அவைகள் சிந்திப்பதில்லை. ஆனால் நாம் சிந்திக்கிறோம். நம் வயது அல்லது உடல்நிலை அல்லது செல்வம் எதுவாக இருந்தாலும், நாம் ஒரு கட்டத்தில் இறப்பதைப் பற்றி சிந்திக்கிறோம். சங்கீதம் 49:20-ன் படி, மிருகங்களைப் போலல்லாமல், நமக்கு “புரிதல்” இருக்கிறது. நாம் இறந்துவிடுவோம் என்று நமக்குத் தெரியும், அதை மாற்ற நாம் எதுவும் செய்யமுடியாது. “எவ்விதத்தினாலாவது ஒருவரை மீட்டுக்கொள்ளவும் அல்லது அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்கு கொடுக்கவுங்கூடாதே” (வச.8). தன்னை கல்லறையிலிருந்து மீட்டெடுப்பதற்கு போதுமான பணம் யாரிடமும் இல்லை.

ஆனால் மரணத்தின் முடிவில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கிறது: “ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்” என்று சங்கீதக்காரன் வலியுறுத்துகிறார். “அவர் என்னை ஏற்றுக்கொள்வார்” (வச. 15 அதாவது, “அவர் என்னை உள்ளே அழைத்துச் செல்வார்”) என்றும் கூறுகிறார். “நாம் போகும்போது நம்முடைய உள்ளே அழைத்துக்கொள்வதற்குதான் வீடு என்று பெயர்” என்று ராபர்ட் ஃப்ரோஸ்ட் கூறுகிறார். 

தேவன் தம்முடைய குமாரன் மூலமாக மரணத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார், அவர் “எல்லாரையும் மீட்கும்பொருளாக தன்னை ஒப்புக்கொடுத்தார்” (1 தீமோத்தேயு 2:6). இவ்வாறு நம்முடைய காலம் வரும்போது, அவர் நம்மை வாழ்த்தி வரவேற்று, நம்மை உள்ளே அழைத்துச் செல்வார் என்று இயேசு வாக்குறுதி அளித்துள்ளார் (யோவான் 14:3).

என்னுடைய காலம் வரும்போது, என் வாழ்க்கையின் விலைக்கிரயத்தை தேவனுக்குக் கொடுத்த இயேசு என்னைத் திறந்த கரங்களுடன் தம்முடைய பிதாவின் வீட்டிற்கு வரவேற்பார்.