“ஹியூமன் யுனிவர்சல்ஸ்” என்ற தனது புத்தகத்தில், மானுடவியலாளர் டொனால்ட் பிரவுன் மனிதகுலத்திற்கு பொதுவான மக்களின் நானுறுக்கும் அதிகமான பழக்கவழக்கங்களை பட்டியலிடுகிறார். பொம்மைகள், நகைச்சுவைகள், நடனங்கள் மற்றும் பழமொழிகள், பாம்புகளின் போர்க்குணம், மற்றும் சரங்களை கட்டுவது போன்றவற்றை அதில் உள்ளடக்கியுள்ளார்! அதேபோல், எல்லா கலாச்சாரங்களிலும் சரி மற்றும் தவறு என்ற கருத்துக்கள் உள்ளன. அங்கு தாராள குணம் பாராட்டப்படுகிறது; வாக்குறுதிகள் மதிக்கப்படுகிறது; மற்றும் கஞ்சத்தனம் மற்றும் கொலை செய்தல் ஆகியவை தவறானவை என்றும் புரிந்துகொள்ளப்படுகின்றன. நாம் எங்கிருந்தாலும் நம் அனைவருக்கும் மனசாட்சி உணர்வு இருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் இதேபோன்ற கருத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறினார். தேவன் யூத ஜனங்களுக்கு சரி தவறுகளை தெளிவுபடுத்த பத்து கட்டளைகளைக் கொடுத்தாலும், புறஜாதியார் தங்கள் மனசாட்சியின்படி நடக்கிறதின் மூலம் சரியானதைச் செய்யமுடியும் என்பதால், தேவனின் நியாயப்பிரமாணங்கள் அவர்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டிருப்பதாக பவுல் குறிப்பிடுகிறார் (ரோமர் 2:14-15). அதினால் மக்கள் எப்போதும் சரியானதையே செய்தனர் என்று அர்த்தமல்ல. புறஜாதியார் தங்கள் மனசாட்சிக்கு எதிராக செயல்பட்டார்கள் (1:32), யூதர்கள் நியாயப்பிரமாணத்தை மீறினார்கள் (2:17-24), இருவரும் குற்றவாளிகளாக இருந்தனர். ஆனால் இயேசுவை விசுவாசிப்பதின் மூலம், தேவன் நம்முடைய எல்லா நியாயப்பிரமாண மீறுதலினால் ஏற்பட்ட மரண தண்டனையை நீக்குகிறார் (3:23-26; 6:23).

தேவன் எல்லா மனிதர்களையும் சரி மற்றும் தவறு என்ற உணர்வோடு படைத்ததால், நாம் செய்த ஒரு கெட்ட காரியம் அல்லது நாம் செய்யத் தவறிய ஒரு நல்ல காரியம் குறித்து நாம் ஒவ்வொருவரும் சில குற்ற உணர்வை பெறுகிறோம். அந்த பாவங்களை நாம் அறிக்கையிடும்போது, தேவன் ஒரு வெள்ளை பலகையை சுத்தமாக துடைப்பது போல அனைத்து பாவங்களையும் துடைக்கிறார். நாம் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும் அவரிடம் கேட்பது மட்டுமே நாம் செய்ய வேண்டிய ஒன்று.