“இரவும் பகலும் நான் அவரை விட்டு ஓடினேன்” என்னும் வரிகள் ஆங்கிலக் கவிஞர் பிரான்சிஸ் தாம்சனின் “தி ஹவுண்ட் ஆஃப் ஹெவன்” என்ற புகழ்பெற்ற கவிதையின் துவக்க வரிகள். தேவனிடமிருந்து மறைக்க அல்லது ஓட முயற்சித்தபோதிலும், இயேசுவின் தொடர்ச்சியான தேடலை தாம்சன் விவரிக்கிறார். “அவர் என்னைத் தான் தேடுகிறார்!” என்று கவிஞர் முடிக்கிறார். 

தேவனின் தேடிவரும் அன்பே யோனா புத்தகத்தின் மையக் கருப்பொருள். நினிவே மக்களுக்கு (இஸ்ரவேல் ஜனங்களின் மோசமான எதிரிகள்) தேவனிடம் திரும்ப வேண்டிய அவசியம் குறித்து சொல்லும்படியான ஒரு பணியை தீர்க்கதரிசி பெற்றார். ஆனால் அதற்கு பதிலாக “யோனா கர்த்தருடைய சமூகத்தினின்று விலகி” (யோனா 1:3), நினிவேயின் எதிர்திசையில் பயணிக்கும் ஒரு கப்பலில் பயணம் செய்கிறார். ஆனால் கப்பல் பெருங்காற்றில் சிக்கியது. கப்பலில் உள்ளவர்களை காப்பாற்றுவதற்காக, பெரிய மீனினால் விழுங்கப்படுவதற்காக, யோனா கடலில் வீசப்பட்டான் (1:15-17).

தேவனிடமிருந்து ஓடுவதற்கு பல முயற்சிகள் எடுத்தபோதிலும், தேவன் அவனை பின்தொடர்ந்தார் என்று யோனா தனது அழகான கவிதையில் விவரிக்கிறார். மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட யோனாவுக்கு மீட்பு அவசியப்படும்போது, அவன் ஜெபத்தில் தேவனிடம் கூக்குரலிட்டு, அவருடைய அன்பை நோக்கி திரும்புகிறார் (2:2,8). தேவன் யோனாவுக்கு மட்டுமல்லாது அவனுடைய அசீரிய எதிரிகளுக்கும் மீட்பை கட்டளையிட்டார் (3:10).

இரண்டு கவிதைகளிலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, நாம் தேவனிடமிருந்து ஓட முயற்சிக்கும் பல பருவங்கள் நம் வாழ்வில் இருக்கலாம். எனினும் இயேசு நம்மை நேசிக்கிறார், அவருடனான மீட்டெடுக்கப்பட்ட உறவுக்கு நேராக நம்மை வழிநடத்துகிறார் (1 யோவான் 1:9).