சிறியது ஆனால் வலியது
வட அமெரிக்காவின் கடுமையான சோனோரன் பாலைவனத்தின் நள்ளிரவு நேரங்களில் அங்கு, ஒரு உயர் தொனியில், மங்கலான அலறலை ஒருவரால் கேட்க முடியும். ஆனால் ஒலியின் மூலத்தை நீங்கள் சந்தேகிக்க மாட்டீர்கள். - சிறிய மற்றும் வலிமைமிக்க வெட்டுக்கிளி சுண்டெலி, நிலவொளியில் அதன் எல்லையை வரையறுக்க அலறும்.
இந்த தனித்துவமான கொறித்துண்ணி (“ஓநாய் சுண்டெலி” என அழைக்கப்படுகிறது) மாமிச உண்ணியாகும். சொல்லபோனால், சிலர் மோத பயப்படும் தேள் போன்ற உயிரினங்களை இது வேட்டையாடுகிறது. ஆனால் ஓநாய் சுண்டெலி இந்த குறிப்பிட்ட யுத்தத்திற்கு தனித்துவமாக பழக்குவிக்கப்பட்டுள்ளது. இது தேள் விஷத்திற்கு எதிர்ப்பு தன்மையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அந்த விஷத்தை வலி நிவாரணியாக மாற்றவும் முடியும்!
இந்த விழிப்புணர்வுடைய சிறிய சுண்டெலியானது தப்பிப்பிழைப்பதற்கும், அதன் கடுமையான சூழலில் செழித்து வளருவதற்கும் உருவாக்கப்பட்ட அதன் தனித்தன்மைமையில் ஊக்கப்படுத்தும் ஏதோ ஒன்று உள்ளது. பவுல் எபேசியர் 2: 10 ல் விளக்குவது போல, அந்த வகையான அற்புதமான கைவினைத்திறன் தேவனின் ஜனங்களுக்கான அவருடைய திட்டத்தின் பண்புகளை விளக்குகிறது. நாம் ஒவ்வொருவரும் இயேசுவில் தேவனுடைய கரத்தின் கிரியைகளாக அவருடைய ராஜ்யத்திற்கு பங்களிக்க தனித்துவமாக பழக்குவிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். தேவன் உங்களுக்கு எப்படி பரிசளித்திருந்தாலும்சரி, கொடுப்பதற்கு உங்களிடம் அதிகம் உள்ளது. நீங்கள் யாராக இருக்கும்படி தேவன் உங்களை உண்டாக்கினாரோ, அதை நம்பிக்கையுடன் நாம் ஏற்றுக்கொள்ளும்போது, அவரிலுள்ள ஜீவனின் நம்பிக்கை மற்றும் சந்தோஷத்திற்கு உயிருள்ள சாட்சிகளாய் இருப்பீர்கள்.
உங்கள் சொந்த வாழ்க்கையில் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் காரியங்களை நீங்கள் எதிர்கொள்ளும்போது தைரியம் கொள்ளுங்கள். நீங்கள் சிறுமையாக உணரலாம். ஆனால் ஆவியானவரின் பரிசு மற்றும் பெலப்படுத்துதல் மூலம் வல்லமையான காரியங்களைச் செய்ய தேவன் உங்களைப் பயன்படுத்த முடியும்.
இதுதான் இயேசு!
பிரபலமான அமெரிக்க தொலைக்காட்சி திறமைக்கான போட்டியான America’s Got Talent நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், ஐந்து வயது சிறுமி ஒருவர் மிகவும் உற்சாகத்துடன் பாடினார். நடுவர்களில் ஒருவர் ஒரு 1930 ல் இருந்த பிரபல குழந்தை பாடகர் மற்றும் நடனக் கலைஞருடன் இந்த குழந்தையை ஒப்பிட்டார். ஷெர்லி டெம்பல் உங்களுக்குள் எங்கேயோ வாழ்கிறார் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கு அவளுடைய எதிர்பாராத பதில்: “ஷெர்லி டெம்பல் அல்ல. இயேசு!”
அந்த சிறுமியின் ஆழ்ந்த புரிதலைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். ஏனெனில், அவளுடைய சந்தோஷம் அவளுக்குள் வாழ்ந்த இயேசுவிடமிருந்து வந்தது. அவரை விசுவாசிக்கிற அனைவருமே தேவனோடு நித்திய ஜீவனுக்கான வாக்குத்தத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் இயேசு தம்முடைய ஆவியினூடாக அவர்களில் வாழ்கிறார் என்பதையும் வேதவசனங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. எங்கள் இருதயங்கள் இயேசுவின் வாசஸ்தலமாகின்றன (கொலோசெயர் 1:27; எபேசியர் 3:17).
நம்முடைய இருதயங்களிலுள்ள இயேசுவின் பிரசன்னம் நன்றியுணர்வுக்கான எண்ணற்ற காரணங்களால் நம்மை நிரப்புகிறது (கொலோசெயர் 2: 6-7). நோக்கம் மற்றும் ஆற்றலுடன் வாழும் திறனை அவர் கொண்டுவருகிறார் (1:28-29). கொண்டாட்டம் மற்றும் போராட்ட காலங்கள் இரண்டிலும், எல்லா சூழ்நிலைகளின் மத்தியிலும் அவர் நம் இதயங்களில் மகிழ்ச்சியை வளர்க்கிறார் (பிலிப்பியர் 4:12-13). நாம் அனைத்தையும் பார்க்க முடியாவிட்டாலும் கூட தேவன் சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடப்பிக்கிறார் என்ற நம்பிக்கையை கிறிஸ்துவின் ஆவி நம் இருதயங்களுக்கு அளிக்கிறது (ரோமர் 8:28). நம்மைச் சுற்றியுள்ள குழப்பங்கள் எதுவாக இருந்தாலும் அதன் மத்தியில் ஆவியானவர் சமாதானத்தைத் தருகிறார் (கொலோசெயர் 3:15).
நம்முடைய இருதயங்களில் வாழும் இயேசுவிடமிருந்து வரும் நம்பிக்கையுடன் அவருடைய பிரசன்னத்தை பிரகாசிக்க நம்மால் அனுமதிக்க முடியும் இதனால் மற்றவர்களால் கவனிக்காமல் இருக்க முடியாது.
ஒரு பலமான இதயம்
பிலிப் யான்சியுடன் இணைந்து எழுதியுள்ள தனது பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டு புத்தகத்தில் டாக்டர் பால் பிராண்ட் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், ஓசனிச்சிட்டின் இதயம் இரத்தாலின் (அவுன்ஸ்) எடையைக் கொண்டு ஒரு நிமிடத்திற்கு எண்ணூறு முறை துடிக்கிறது; ஒரு நீல திமிங்கலத்தின் இதயம் அரை டன் எடையுடையது, நிமிடத்திற்கு பத்து முறை மட்டுமே துடிக்கிறது, அதை இரண்டு மைல் தொலைவிலேயே கேட்க முடியும். இவ்விரண்டிற்கும் மாறாக, மனித இதயமானது மந்தமாக செயல்படுவதுபோல தோன்றுகிறது, ஆனாலும் அது தனது வேலையைச் சரியாகச் செய்கிறது ஒரு நாளைக்கு 1,00,000 முறை [ஒரு நிமிடத்திற்கு 65-70 முறை] ஓய்வெடுக்க நேரமில்லாமல் துடித்து, நம்மில் பெரும்பாலோரைப் எழுபது ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் வரை கொண்டு செல்கிறது.
ஆச்சரியமான இந்த இதயம் வாழ்க்கையின் ஊடே நிறைவுக்கு நம்மை பெலப்படுத்தி கொண்டுசேர்க்கிறது. இது நமது ஒட்டுமொத்த உள்ளான நல்வாழ்விற்கு ஒரு உருவகமாக மாறியுள்ளது. ஆனாலும், நம்முடைய உண்மையான இருதயமும் சரி உருவக இருதயமும் சரி இரண்டுமே தோல்விக்கு ஆளாகின்றன. நம்மால் என்ன செய்ய முடியும்?
இஸ்ரவேலின் ஆராதனைத் தலைவரான சங்கீதக்காரனாகிய ஆசாப் 73-ஆம் சங்கீதத்தில் உண்மையான வலிமை வேறெங்கிருந்தோ - வேறுயாரிடம் இருந்தோ - வழிகளிலோ வருகிறது என்பதை ஒப்புக் கொண்டார். “என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்” (வ. 26) என்று எழுதுகிறார். ஆசாப் சொன்னது சரிதான். ஜீவனுள்ள தேவன் நம்முடைய இறுதி மற்றும் நித்திய பெலனானவர். வானத்தையும் பூமியையும் படைத்தவர் என்ற முறையில் தேவனுடைய பரிபூரண வல்லமைகளுக்கு அத்தகைய வரம்புகள் எதுவும் கிடையாது என்று அவருக்குத் தெரியாது.
நம்முடைய கடினமான மற்றும் சவாலான காலங்களில் ஆசாப் தனது சொந்த போராட்டங்களின் மூலம் கற்றுக்கொண்டதைக் கண்டறிவோம். தேவனே நம் இருதயங்களின் உண்மையான பெலன். நாம் ஒவ்வொரு நாளும் அவருடைய பெலனில் ஓய்வெடுக்க முடியும்.
அக்கறையான கடிதங்கள்
பல தசாப்தங்களுக்கு முன்னர் டாக்டர் ஜெர்ரி மோட்டோ அக்கறையான கடிதங்களின் வல்லமையைக் கண்டறிந்தார். முன்னர் தற்கொலைக்கு முயன்று மீண்ட நோயாளிகளுக்கு அக்கறையை வெளிப்படுத்தும் கடிதத்தை அனுப்புவது மீண்டும் அவர்கள் தற்கொலையில் ஈடுபடும் வீதத்தை பாதியாகக் குறைத்துள்ளது என்று அவரது ஆராய்ச்சி கண்டறிந்தது. சமீபத்தில், கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளானவர்களுக்கு, தொடர் சிகிச்சையாக “அக்கறையுள்ள” உரைகள், அஞ்சல் அட்டைகள் மற்றும் சமூகஊடக மீம்களை, மருத்துவ சேவை அளிப்போர் அனுப்பும்போது, இந்த வல்லமையை மீண்டும் கண்டறிந்தனர்.
வேதத்தில் இருபத்தொரு “புத்தகங்கள்” உண்மையில் கடிதங்கள்-நிருபங்கள்-பல்வேறு காரணங்களால் பாடநுபவித்த முதல் நூற்றாண்டு விசுவாசிகளுக்கு அக்கறையுடன் எழுதப்பட்டவை. பவுல், யாக்கோபு மற்றும் யோவான் விசுவாசம் மற்றும் ஆராதனையின் அடிப்படைகளை விளக்கவும், எவ்வாறு பேதங்களைக் களைவது மற்றும் ஒற்றுமையைக் கட்டமைப்பது என்பதையும் விளக்கவும் கடிதங்களை எழுதினர்.
ஆயினும், அப்போஸ்தலனாகிய பேதுரு இவைகளை குறிப்பாக ரோமானிய பேரரசரான நீரோவால் துன்புறுத்தப்பட்ட விசுவாசிகளுக்கு எழுதினார். தேவன் அவர்கள் மேல்கொண்டிருந்த உள்ளான மதிப்பை அவர்களுக்கு பேதுரு நினைப்பூட்டினார். 1 பேதுரு 2: 9-ல் அவர்களை இவ்விதமாய் விவரிக்கிறார், “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.”
நம்முடைய பெரிய தேவன் தாமே நமக்கு அக்கறையுள்ள கடிதங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் - ஏவப்பட்ட வேதாகமம் - தன்னுடைய சொந்தமாக அவர் நம்மை தெரிந்துகொண்டதை பற்றிய பதிவு நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். அவருடைய கடிதங்களை நாம் தினமும் படித்து, இயேசு அளிக்கும் நம்பிக்கையை தேவைப்படும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக.
பயத்தின் புயல்கள்
சமீபத்தில் நான் பார்த்த தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில், ஒரு பெண் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவரிடம் “மாற்கு, நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டார், “பயத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காத என்னை நான் தேடுகிறேன்”, என்று, தொலைக்காட்சியில் அவர் என்ன பார்க்க விரும்புகிறார் என்பதை தான் அவள் கேட்கிறாள் என்பதை உணராமல், அவர் நிதானமாக பதிலளித்தார்.
ஆஹா! நான் ஆச்சரியப்பட்டேன். ஒரு தொலைக்காட்சி விளம்பரம் என்னை இவ்வளவு ஆழமாக தாக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை! ஆனால் என்னால் மாற்குடன் என்னை தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது: பயம் என் வாழ்க்கையை வழிநடத்துவதைப் போல சில நேரங்களில் தோன்றும்போது, சில சமயங்களில் நானும் சங்கடப்படுகிறேன்.
இயேசுவின் சீஷர்களும் பயத்தின் பலத்த வல்லமையை அனுபவித்தார்கள். ஒருமுறை அவர்கள் கலிலேயா கடலைக் கடக்கமுற்படும்போது (மாற்கு 4:35), “பலத்த சுழல்காற்று உண்டாகி படவு நிரம்பத்தக்கதாக அலைகள் அதின்மேல் மோதிற்று” (வ. 37), பயங்கரம் அவர்களைப் பிடித்தது, (நித்திரையிலிருக்கும்) இயேசு அவர்களைப்பற்றி கவலைப்படமாட்டார் என்றெண்ணி அவருக்கே அறிவுரை கூறினர்: “போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?” என்றார்கள்.
பயம் சீஷர்களின் பார்வையை மழுங்கடித்தது, அவர்களுக்கான இயேசுவின் நல்ல நோக்கங்களை காணக்கூடாதபடி அவர்களுடைய கண்களை குருடாக்கியது, அவர் காற்றையும் அலைகளையும் அதட்டிய பிறகு (வ. 39), கிறிஸ்து சீஷர்களிடம் ஊடுருவும் இரண்டு கேள்விகளை முன்வைத்தார். ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று? (வ. 40).
நம் வாழ்க்கையிலும் புயல்கள் தாக்குகிறது அல்லவா? ஆனாலும் இயேசுவின் கேள்விகள் நம் பயத்தை சரியான கண்ணோட்டத்துடன் அணுகச்செய்கிறது. அவருடைய முதல் கேள்வி நம் பயங்களை குறிப்பிட செய்கிறது. இரண்டாவது சிதைந்தபோன அந்த உணர்வுகளை அவரிடம் ஒப்படைக்க அழைக்கிறது - வாழ்க்கையின் மிக மோசமான புயல்களிலிருந்தும் அவர் நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைக் கண்கள் காண அவரிடம் கேட்பது.