சமீபத்தில் நான் பார்த்த தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில், ஒரு பெண் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவரிடம் “மாற்கு, நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டார், “பயத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காத என்னை நான் தேடுகிறேன்”, என்று, தொலைக்காட்சியில் அவர் என்ன பார்க்க விரும்புகிறார் என்பதை தான் அவள் கேட்கிறாள் என்பதை உணராமல், அவர் நிதானமாக பதிலளித்தார்.

ஆஹா! நான் ஆச்சரியப்பட்டேன். ஒரு தொலைக்காட்சி விளம்பரம் என்னை இவ்வளவு ஆழமாக தாக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை! ஆனால் என்னால் மாற்குடன் என்னை தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது: பயம் என் வாழ்க்கையை வழிநடத்துவதைப் போல சில நேரங்களில் தோன்றும்போது, சில சமயங்களில் நானும் சங்கடப்படுகிறேன்.
 
இயேசுவின் சீஷர்களும் பயத்தின் பலத்த வல்லமையை அனுபவித்தார்கள். ஒருமுறை அவர்கள் கலிலேயா கடலைக் கடக்கமுற்படும்போது (மாற்கு 4:35), “பலத்த சுழல்காற்று உண்டாகி படவு நிரம்பத்தக்கதாக அலைகள் அதின்மேல் மோதிற்று” (வ. 37), பயங்கரம் அவர்களைப் பிடித்தது, (நித்திரையிலிருக்கும்) இயேசு அவர்களைப்பற்றி கவலைப்படமாட்டார் என்றெண்ணி அவருக்கே அறிவுரை கூறினர்: “போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா?” என்றார்கள்.

பயம் சீஷர்களின் பார்வையை மழுங்கடித்தது, அவர்களுக்கான இயேசுவின் நல்ல நோக்கங்களை காணக்கூடாதபடி அவர்களுடைய கண்களை குருடாக்கியது, அவர் காற்றையும் அலைகளையும் அதட்டிய பிறகு (வ. 39), கிறிஸ்து சீஷர்களிடம் ஊடுருவும் இரண்டு கேள்விகளை முன்வைத்தார். ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று? (வ. 40).

நம் வாழ்க்கையிலும் புயல்கள் தாக்குகிறது அல்லவா? ஆனாலும் இயேசுவின் கேள்விகள் நம் பயத்தை சரியான கண்ணோட்டத்துடன் அணுகச்செய்கிறது. அவருடைய முதல் கேள்வி நம் பயங்களை குறிப்பிட செய்கிறது. இரண்டாவது சிதைந்தபோன அந்த உணர்வுகளை அவரிடம் ஒப்படைக்க அழைக்கிறது – வாழ்க்கையின் மிக மோசமான புயல்களிலிருந்தும் அவர் நம்மை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைக் கண்கள் காண அவரிடம் கேட்பது.