Archives: பிப்ரவரி 2021

மிகத் துல்லியமான படம்

ஒரு பயணத்தில், எனது கணவர் சிறுவயதிலிருந்தே அவரது குடும்பத்தை அறிந்த ஒரு பெண்ணை சந்தித்தோம். அவர் எனது கணவர் ஆலனையும் எங்கள் மகன் சேவியரையும் பார்த்தாள். “அவன் தனது அப்பாவின் மிகத் துல்லியமான படம், என்று அவர் கூறினார்.” “அந்த கண்கள். அந்த புன்னகை. ஆம். அவரைப் போலவே தெரிகிறது.” தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ஒரு வலுவான ஒற்றுமையை ஒப்புக்கொள்வதில் அந்தப் பெண் மகிழ்ச்சியடைந்ததால், அவர்களின் ஆளுமைகளில் ஒற்றுமையைக் கூட அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அவர்கள் பல வழிகளில் ஒரே மாதிரியாக இருந்தாலும், என் மகன் தனது தந்தையை முழுமையாக பிரதிபலிக்கவில்லை.

ஒரே ஒரு மகன் - இயேசு தன் தந்தையை முழுமையாக பிரதிபலிக்கிறார். கிறிஸ்து “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” (கொலோ. 1:15). அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது (வச. 16). “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது” (வச. 17).

ஜெபத்திலும் வேதாகமம் படிப்பதிலும் நாம் நேரத்தைச் செலவிடலாம், மாம்சத்தில் இருக்கும் இயேசுவைப் பார்ப்பதன் மூலம் தந்தையின் தன்மையைக் கண்டுபிடிப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் வேதாகமத்தில் மற்றவர்களுடனும் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை ஆராய்வதன் மூலம் அவருடைய அன்பைச் செயலில் காட்ட அவர் நம்மை அழைக்கிறார். நம் வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்து, பரிசுத்த ஆவியின் பரிசைப் பெற்ற பிறகு, நம்முடைய அன்பான பிதாவை அறிந்து நம்புவதில் நாம் வளரலாம். அவருவருக்காக வாழ்ந்து, அவருடைய குணத்தை பிரதிபலிப்பார்களாக அவர் நம்மை மாற்றுவார். 

நாம் இயேசுவைப் போலவே இருக்கிறோம் என்று மற்றவர்கள் சொல்ல முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சி! 

ஒரு நெருக்கடி நிலை குறிகையை அனுப்புகிறது

அலாஸ்காவின் ஒரு மலைப்பிரதேசத்தில் குடியேறியவரின் குடிசையில் தீப்பிடித்தபோது, ​​அமெரிக்காவின் குளிரான மாநிலத்தில் சில வசதிகளே இருந்தன. ஒரு விறைப்பான குளிர் காலத்தின் நடுவில், குடியேறியவருக்கு போதுமான தங்குமிடம் இல்லாமல் இருந்தது.. மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஒரு விமானம் பறந்து, பனியில் அவரால் முத்திரை குத்தப்பட்ட மற்றும் புகைக்கறியால் கருமையாக்க பட்ட பெரிய நெருக்கடி நிலை குறிகையை அவர்கள் உளவு பார்த்தபோது, ​​அந்த நபர் இறுதியாக மீட்கப்பட்டார்.

 சங்கீதக்காரர் தாவீது நிச்சயமாக மிகுந்த நெருக்கடியில் இருந்தார். பொறாமை கொண்ட சவுல் அவரைக் கொல்ல முயன்றார். எனவே அவர் காத் நகரத்திற்கு ஓடினார், அங்கு அவர் தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக பைத்தியக்காரனாக நடித்தார் (1 சாமு. 21ஐப் பார்க்கவும்). அந்த நிகழ்வுகளில் 34 சங்கீதம் வெளிவந்தது, அங்கு தாவீது தேவனிடம் ஜெபத்தில் கூப்பிட்டு சமாதானத்தைக் கண்டார் (வச. 4, 6). கர்த்தர் அவருடைய வேண்டுகோளைக் கேட்டு அவரை விடுவித்தார்.

நீங்கள் ஒரு அவநம்பிக்கையான சூழ்நிலையில் இருக்கிறீர்களா, உதவிக்காக அழுகிறீர்களா? இன்றும் நம்முடைய அவநம்பிக்கையான ஜெபங்களுக்கு தேவன் செவிசாய்த்து பதிலளிப்பார் என்பதில் உறுதியாக இருங்கள். தாவீதுக்கு செய்தது போலவே, அவர் நம்முடைய துயர அழைப்புகளை கவனித்து, நம்முடைய அச்சங்களை நீக்குகிறார் (வச. 4) - மேலும் சில சமயங்களில் “இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சிப்பார். (வச. 6). “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.” (சங். 55:22) என்று வேதாகமம் நம்மை அழைக்கிறது. நம்முடைய கடினமான சூழ்நிலைகளை நாம் தேவனிடம் ஒப்படைக்கும்போது, ​​அவர் நமக்குத் தேவையான உதவியை வழங்குவார் என்று நம்பலாம். அவருடைய திறமையான கைகளில் நாம் பாதுகாப்பாக இருப்போம்.

ஏதோ புதியது

புதிய நீர் இல்லாத பகுதிகளில் விவசாயம் செய்வது கடினம். இந்த சிக்கலை தீர்க்க உதவுவதற்காக, கடல் நீர் கிரீன்ஹவுஸ் நிறுவனம் சோமாலிலாந்து, ஆப்பிரிக்கா மற்றும் இதே போன்ற தட்பவெப்பநிலைகளைக் கொண்ட பிற நாடுகளில் “குளிரூட்டும் வீடுகளை” உருவாக்கியுள்ளது. நெளி அட்டைகளால் செய்யப்பட்ட சுவர்கள் மீது உப்புநீரைத் தூற்றுவதற்கு குளிரூட்டும் வீடுகள் சூரிய விசையியக்கக் குழாய்களைப் (solar pumps) பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு பேனலுக்கும் கீழே நீர் செல்லும்போது, ​​அதன் உப்பை பின்னால் விட்டு விடுகிறது. மீதமுள்ள நன்னீர் பெரும்பகுதி கட்டமைப்பிற்குள் ஆவியாகிறது, இது பழம் மற்றும் காய்கறி பயிர்கள் செழிக்கக்கூடிய ஈரப்பதமான இடமாக மாற்றும்.

ஏசாயா தீர்க்கதரிசி மூலம், பண்டைய இஸ்ரவேலுக்காக “அவாந்தரவெளியிலே ஆறுகளை” வழங்கியதால் தேவன் ஒரு “புதிய காரியத்தை” செய்வதாக வாக்குறுதி அளித்தார் (ஏசா. 43:19). இந்த புதிய காரியம் எகிப்திய இராணுவத்திடமிருந்து தனது மக்களை மீட்பதற்காக அவர் செய்த பழைய காரியத்திற்கு முரணானது. செங்கடல் சம்பவம் நினைவிருக்கிறதா? தம்முடைய மக்கள் கடந்த காலத்தை நினைவுகூர வேண்டும் என்று தேவன் விரும்பினார், ஆனால் அது அவர்களின் வாழ்க்கையில் அவருடைய தற்போதைய ஈடுபாட்டை மறைக்க விடக்கூடாது (வச. 18). அவர், “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியை உண்டாக்குவேன்.” என்று சொன்னார் (வச. 19).

கடந்த காலத்தைப் பார்ப்பது தேவனுடைய சித்தத்தில் நம்முடைய நம்பிக்கையை உயர்த்தும் அதே வேளையில், கடந்த காலங்களில் வாழ்வது இன்று தேவனுடைய ஆவியின் அனைத்து புதிய வேலைகளுக்கும் நம்மை குருடாக்குகிறது. அவருடைய மக்களுக்கு உதவுதல், மறுபடியும் உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றில் அவர் தற்போது எவ்வாறு செயல்படுகிறார் என்பதைக் காட்டும்படி தேவனிடம் நாம் கேட்கலாம். இந்த விழிப்புணர்வு, அருகிலுள்ள மற்றும் தொலைதூர மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவருடன் கூட்டாளராக இருக்கும்படி நம்மைத் தூண்டட்டும்.

ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்டம்

எனது நண்பர் டேவின் வாலிப மகள் மெலிசா இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு எனது நண்பர் ஷரோன் காலமானார். அவர்கள் இருவரும் கார் விபத்துக்களில் கோரமாக கொல்லப்பட்டனர். ஒரு இரவு ஷரோன் மற்றும் மெலிசா இருவரும் என் கனவில் வந்தார்கள். ஒரு பெரிய விருந்து மண்டபத்தில் அவர்கள் அலங்காரங்களை தொங்கவிட்டு கொண்டிருந்தபோது சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அந்த அறைக்குள் நுழைந்த போது என்னைப் புறக்கணித்தார்கள். ஒரு நீண்ட மேஜை வெள்ளைத்துணிகளாலும் தங்கத் தட்டுகளும் கோப்பைகளுடனும் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது. நானும் அலங்காரத்தில் உதவட்டுமா என்று நான் கேட்டதை அவர்கள் கேட்காதது போல வேலை செய்து கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் ஷரோன், “இந்த விருந்து மெலிசாவின் திருமண வரவேற்பு” என்றார்.

“மணவாளன் யார்?” நான் கேட்டேன். இருவரும் பதிலளிக்கவில்லை, ஆனால் புன்னகைத்து ஒருவருக்கொருவர் அர்த்தத்தோடு பார்த்தார்கள். இறுதியாக, அது எனக்கு வெளிப்பட்டது - அது இயேசு!

 “இயேசு மணவாளன்” என்று நான் எழுந்தவுடன் மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

இயேசு திரும்பி வரும் போது விசுவாசிகள் அவரோடு சந்தோஷமாக கொண்டாடும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தை கனவு என் மனதில் கொண்டு வருகிறது. இது "ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து" (19:9) என்று அழைக்கப்படும் ஒரு பகட்டான விருந்தாக வெளிப்படுத்துதலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் முதல் வருகைக்கு மக்களை தயார்படுத்திய யோவான் ஸ்நானகன், அவரை “ உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அழைத்தார் (யோவா. 1:29). அவர் இயேசுவை “மணவாளன்” என்றும், தன்னை "மணவாளனுடைய தோழன்" (சிறந்த மனிதனைப் போல) என்றும் காத்திருந்தார் (3:29).

அந்த விருந்து நாளிலும், நித்திய காலத்திலும், இயேசு, நம்முடைய மணவாளன், ஷரோன், மெலிசா மற்றும் கடவுளின் மக்கள் அனைவருடனும் இடைவிடாத ஐக்கியத்தை அனுபவிப்போம்.

துடிக்கும் கடிகாரம்

தொழிலாளர்கள் ஒரு குழு உறைந்த ஏரியிலிருந்து பனியை வெட்டி ஒரு ஐஸ்ஹவுஸில் சேமித்து வைத்துக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களில் ஒருவர் ஜன்னல் இல்லாத கட்டிடத்தில் தனது கைக்கடிகாரத்தை இழந்துவிட்டார் என்பதை உணர்ந்தார். அவரும் அவரது நண்பர்களும் அதை தேடும் முயற்சி வீணை போயிற்று.

அவர்கள் தேடுவதை பிறகு, அவர்கள் வெளியேறுவதைக் கண்ட ஒரு சிறுவன் கட்டிடத்திற்குள் சென்றான். விரைவில், அவன் கடிகாரத்துடன் வெளிப்பட்டான். அவன் அதை எப்படிக் கண்டுபிடித்தான் என்று கேட்டதற்கு, “நான் உட்கார்ந்து அமைதியாக இருந்தேன், விரைவில் நான் கடிகாரத்தின் துடிக்கும் சத்தத்தை கேட்டேன்.”

அசையாமல் இருப்பதன் மதிப்பு பற்றி வேதாகமம் அதிகம் பேசுகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் தேவன் சில நேரங்களில் ஒரு மெல்லிய குரலில் பேசுகிறார் (1 இரா. 19:12). வாழ்க்கையின் பரபரப்பில், அவருக்கு செவி சாய்ப்பது கடினமாகத் தோன்றலாம், ஆனால் சற்று நிதானித்து, அவருடனும் வேதாகம வசனங்களுடனும் சிறிது நேரம் செலவிட்டால், அவருடைய எண்ணங்களை நம் எண்ணங்களில் கேட்கலாம்.

தீய மக்களின் “பொல்லாத திட்டங்களிலிருந்து” நம்மை மீட்பதற்கும், நமக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும், உண்மையுள்ளவர்களாக இருக்க உதவுவதற்கும் நமது நம்பிக்கை கர்த்தர் மீது இருக்க வேண்டும் (சங். 37:1-7) நமக்கு கூறுகிறது. ஆனால் நம்மைச் சுற்றி கொந்தளிப்பு இருக்கும்போது இதை நாம் எவ்வாறு செய்ய முடியும்? 7 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: “கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு.” ஜெபத்திற்குப் பிறகு சில நிமிடங்கள் அமைதியாக இருக்க கற்றுக்கொள்வதன் மூலம் இதை நாம் தொடங்கலாம். அல்லது அமைதியாக வேதாகமத்தைப் படித்து, வார்த்தைகளை நம் இருதயத்தில் ஊறவைப்பதன் மூலம். பின்னர், ஒருவேளை, அவருடைய ஞானம் நம்மிடம் அமைதியாகவும் நிதானமாகவும் அந்த துடிதுடிக்கும் கடிகாரத்தை போல பேசுவதை கேட்க முடியும்.