ஒரு பயணத்தில், எனது கணவர் சிறுவயதிலிருந்தே அவரது குடும்பத்தை அறிந்த ஒரு பெண்ணை சந்தித்தோம். அவர் எனது கணவர் ஆலனையும் எங்கள் மகன் சேவியரையும் பார்த்தாள். “அவன் தனது அப்பாவின் மிகத் துல்லியமான படம், என்று அவர் கூறினார்.” “அந்த கண்கள். அந்த புன்னகை. ஆம். அவரைப் போலவே தெரிகிறது.” தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ஒரு வலுவான ஒற்றுமையை ஒப்புக்கொள்வதில் அந்தப் பெண் மகிழ்ச்சியடைந்ததால், அவர்களின் ஆளுமைகளில் ஒற்றுமையைக் கூட அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அவர்கள் பல வழிகளில் ஒரே மாதிரியாக இருந்தாலும், என் மகன் தனது தந்தையை முழுமையாக பிரதிபலிக்கவில்லை.

ஒரே ஒரு மகன் – இயேசு தன் தந்தையை முழுமையாக பிரதிபலிக்கிறார். கிறிஸ்து “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” (கொலோ. 1:15). அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது (வச. 16). “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது” (வச. 17).

ஜெபத்திலும் வேதாகமம் படிப்பதிலும் நாம் நேரத்தைச் செலவிடலாம், மாம்சத்தில் இருக்கும் இயேசுவைப் பார்ப்பதன் மூலம் தந்தையின் தன்மையைக் கண்டுபிடிப்போம். நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் வேதாகமத்தில் மற்றவர்களுடனும் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை ஆராய்வதன் மூலம் அவருடைய அன்பைச் செயலில் காட்ட அவர் நம்மை அழைக்கிறார். நம் வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்து, பரிசுத்த ஆவியின் பரிசைப் பெற்ற பிறகு, நம்முடைய அன்பான பிதாவை அறிந்து நம்புவதில் நாம் வளரலாம். அவருவருக்காக வாழ்ந்து, அவருடைய குணத்தை பிரதிபலிப்பார்களாக அவர் நம்மை மாற்றுவார். 

நாம் இயேசுவைப் போலவே இருக்கிறோம் என்று மற்றவர்கள் சொல்ல முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சி!