எனது நண்பர் டேவின் வாலிப மகள் மெலிசா இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு எனது நண்பர் ஷரோன் காலமானார். அவர்கள் இருவரும் கார் விபத்துக்களில் கோரமாக கொல்லப்பட்டனர். ஒரு இரவு ஷரோன் மற்றும் மெலிசா இருவரும் என் கனவில் வந்தார்கள். ஒரு பெரிய விருந்து மண்டபத்தில் அவர்கள் அலங்காரங்களை தொங்கவிட்டு கொண்டிருந்தபோது சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அந்த அறைக்குள் நுழைந்த போது என்னைப் புறக்கணித்தார்கள். ஒரு நீண்ட மேஜை வெள்ளைத்துணிகளாலும் தங்கத் தட்டுகளும் கோப்பைகளுடனும் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது. நானும் அலங்காரத்தில் உதவட்டுமா என்று நான் கேட்டதை அவர்கள் கேட்காதது போல வேலை செய்து கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் ஷரோன், “இந்த விருந்து மெலிசாவின் திருமண வரவேற்பு” என்றார்.

“மணவாளன் யார்?” நான் கேட்டேன். இருவரும் பதிலளிக்கவில்லை, ஆனால் புன்னகைத்து ஒருவருக்கொருவர் அர்த்தத்தோடு பார்த்தார்கள். இறுதியாக, அது எனக்கு வெளிப்பட்டது – அது இயேசு!

 “இயேசு மணவாளன்” என்று நான் எழுந்தவுடன் மெல்லிய குரலில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

இயேசு திரும்பி வரும் போது விசுவாசிகள் அவரோடு சந்தோஷமாக கொண்டாடும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தை கனவு என் மனதில் கொண்டு வருகிறது. இது “ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து” (19:9) என்று அழைக்கப்படும் ஒரு பகட்டான விருந்தாக வெளிப்படுத்துதலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் முதல் வருகைக்கு மக்களை தயார்படுத்திய யோவான் ஸ்நானகன், அவரை “ உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அழைத்தார் (யோவா. 1:29). அவர் இயேசுவை “மணவாளன்” என்றும், தன்னை “மணவாளனுடைய தோழன்” (சிறந்த மனிதனைப் போல) என்றும் காத்திருந்தார் (3:29).

அந்த விருந்து நாளிலும், நித்திய காலத்திலும், இயேசு, நம்முடைய மணவாளன், ஷரோன், மெலிசா மற்றும் கடவுளின் மக்கள் அனைவருடனும் இடைவிடாத ஐக்கியத்தை அனுபவிப்போம்.