தொழிலாளர்கள் ஒரு குழு உறைந்த ஏரியிலிருந்து பனியை வெட்டி ஒரு ஐஸ்ஹவுஸில் சேமித்து வைத்துக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களில் ஒருவர் ஜன்னல் இல்லாத கட்டிடத்தில் தனது கைக்கடிகாரத்தை இழந்துவிட்டார் என்பதை உணர்ந்தார். அவரும் அவரது நண்பர்களும் அதை தேடும் முயற்சி வீணை போயிற்று.

அவர்கள் தேடுவதை பிறகு, அவர்கள் வெளியேறுவதைக் கண்ட ஒரு சிறுவன் கட்டிடத்திற்குள் சென்றான். விரைவில், அவன் கடிகாரத்துடன் வெளிப்பட்டான். அவன் அதை எப்படிக் கண்டுபிடித்தான் என்று கேட்டதற்கு, “நான் உட்கார்ந்து அமைதியாக இருந்தேன், விரைவில் நான் கடிகாரத்தின் துடிக்கும் சத்தத்தை கேட்டேன்.”

அசையாமல் இருப்பதன் மதிப்பு பற்றி வேதாகமம் அதிகம் பேசுகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் தேவன் சில நேரங்களில் ஒரு மெல்லிய குரலில் பேசுகிறார் (1 இரா. 19:12). வாழ்க்கையின் பரபரப்பில், அவருக்கு செவி சாய்ப்பது கடினமாகத் தோன்றலாம், ஆனால் சற்று நிதானித்து, அவருடனும் வேதாகம வசனங்களுடனும் சிறிது நேரம் செலவிட்டால், அவருடைய எண்ணங்களை நம் எண்ணங்களில் கேட்கலாம்.

தீய மக்களின் “பொல்லாத திட்டங்களிலிருந்து” நம்மை மீட்பதற்கும், நமக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும், உண்மையுள்ளவர்களாக இருக்க உதவுவதற்கும் நமது நம்பிக்கை கர்த்தர் மீது இருக்க வேண்டும் (சங். 37:1-7) நமக்கு கூறுகிறது. ஆனால் நம்மைச் சுற்றி கொந்தளிப்பு இருக்கும்போது இதை நாம் எவ்வாறு செய்ய முடியும்? 7 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: “கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு.” ஜெபத்திற்குப் பிறகு சில நிமிடங்கள் அமைதியாக இருக்க கற்றுக்கொள்வதன் மூலம் இதை நாம் தொடங்கலாம். அல்லது அமைதியாக வேதாகமத்தைப் படித்து, வார்த்தைகளை நம் இருதயத்தில் ஊறவைப்பதன் மூலம். பின்னர், ஒருவேளை, அவருடைய ஞானம் நம்மிடம் அமைதியாகவும் நிதானமாகவும் அந்த துடிதுடிக்கும் கடிகாரத்தை போல பேசுவதை கேட்க முடியும்.