ஹச்சி: எ டாக்ஸ் டேல் (Hachi: A Dog’s Tale) என்ற ஆங்கில திரைப்படத்தில், கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஹச்சி என்ற தெரு நாய்க்குட்டியுடன் நட்பு கொண்டிருந்தார். பேராசிரியர் வேலையிலிருந்து திரும்புவதற்காக ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் காத்திருந்து நாய் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது. ஒரு நாள், பேராசிரியருக்கு ஆபத்தான பக்கவாதம் ஏற்பட்டது. ஹச்சி ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தது. அடுத்த பத்து வருடங்களுக்கு ஒவ்வொரு நாளும் அது திரும்பத் திரும்ப வந்தது. அதனுடைய அன்பான எஜமானருக்காக காத்திருந்தது.

தன் எஜமானரின் வருகைக்காக பொறுமையாகக் காத்திருந்த சிமியோன் என்ற மனிதனின் கதையை லூக்கா சொல்கிறார் (லூக்கா 2:25). மேசியாவைக் காணும் வரை அவர் மரணத்தைக் காணமாட்டார் என்று பரிசுத்த ஆவியானவர் சிமியோனுக்கு வெளிப்படுத்தினார் (வச. 26). இதன் விளைவாக, கடவுளின் மக்களுக்கு “இரட்சிப்பை” அளிப்பவருக்காக சிமியோன் காத்திருந்தார் (வச. 30). மரியாளும் யோசேப்பும் இயேசுவோடு ஆலயத்திற்குள் நுழைந்தபோது, ​​பரிசுத்த ஆவியானவர் சிமியோனிடம் இவர்தான் அவர் என்று கிசுகிசுத்தார்! காத்திருப்பு இறுதியாக முடிந்தது! சிமியோன் எல்லா மக்களுக்கும் நம்பிக்கை, இரட்சிப்பு மற்றும் ஆறுதலுமான கிறிஸ்துவை தன் கைகளில் வைத்திருந்தார் (வச. 28-32).

காத்திருக்கும் பருவத்தில் நாம் நம்மைக் கண்டால், ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை புதிய காதுகளால் கேட்கலாம்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா. 40:31). இயேசுவின் வருகைக்காக நாம் காத்திருக்கும்போது, ​​ஒவ்வொரு புதிய நாளுக்கும் நமக்குத் தேவையான நம்பிக்கையையும் பலத்தையும் அவர் அளிக்கிறார்.