வாழ்வின் கொந்தளிப்புகளைக் கடந்து செல்லல்
“இடது புறம் அமர்ந்திருப்பவர்களெல்லாரும், என்னோடு சேர்ந்து மூன்று முன்னோக்கிய தள்ளு விசையைக் கொடுக்கவும்!” என்று எங்களுடைய படகு வழிகாட்டி கத்தினான். இடது பக்கம் இருப்பவர்கள் உள்ளே மூழ்கி, நமது படகை சுழல் நீரோட்டத்திலிருந்து வெளியே இழுக்கவும். பல மணி நேரம், நாங்கள் எங்கள் வழிகாட்டியின் அறிவுரைக்குச் செவிசாய்க்க கற்றுக் கொண்டோம். கொந்தளிக்கும் ஆற்றினைப் பாதுகாப்பாக கடந்து செல்ல, எங்களுக்கிருந்த கொஞ்ச அநுபவத்தோடு, ஆறு பேரும் சேர்ந்து எப்படி தண்டு வலிக்க வேண்டுமென, அவனுடைய தளராத குரல் எங்களுக்கு உதவியது.
வாழ்க்கையிலும் இத்தகைய போராட்டங்கள் உண்டு அல்லவா? சில வேலைகளில் நமது படகு அமைதலாகப் போய் கொண்டிருக்கும். நொடிப்பொழுதில், வரும் ஆபத்தைத் தவிர்க்க, மிக வேகமாக துடுப்பு வலிக்க ஆரம்பித்து விடுவோம். அத்தகைய பிரச்சனை நேரங்களில், நமக்கு ஒரு திறமையான வழிகாட்டி வேண்டும் என உணருவோம், ஒரு நம்பிக்கைக்குரிய குரல், நம்மை சுழல் ஓட்டங்களில் இருந்து வெளியே கொண்டு வர உதவ வேண்டுமென நாம் விரும்புவோம்.
சங்கீதம் 32 ல் தேவன் அத்தகைய குரலாக இருப்பதாக வாக்களிக்கின்றார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்” (வ.8) என்கின்றார். இதற்கு சற்று முன்பு, பாவத்தை உமக்கு அறிவித்தேன் (வ.5) என்றும், உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான் (வ.6) என்றும் காண்கின்றோம், அப்படியானால், அவர் கூறுவதைக் கேட்கின்ற பங்கினையும் செய்ய வேண்டும். “உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (வ.8) என்று அவருடைய அன்பினால் வெளிப்படும் வழி நடத்துதலை நமக்கு நினைப்பூட்டுகின்றார். கடைசியாக சங்கீதக்காரன், “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்” (வ.10) என்கின்றார். நாமும் தேவனை நம்பி, நம்முடைய வாழ்வின் கடினமான பாதையில் நமக்கு வழிகாட்ட அவருடைய வாக்கின் மேல் பற்றுதலோடு, அவர் மீது அமைந்திருப்போம்.
புதிய நம்பிக்கையின் தேர்வு
“நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் .... நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு.” ~ உபாகமம் 30:19…
எளிமையாக கேள்வி
அவளுடைய மருத்துவர், பிரிந்து காணப்படும் அவளுடைய விழித்திரை சரிபார்க்கக் கூடிய நிலையில் இல்லை என்றார். 15 ஆண்டுகள் பார்வையில்லாதவளாய், பிரெயில் முறையைக் கற்றுக் கொண்டு, ஒரு கோலையும், பழக்குவிக்கப் பட்ட நாயையும் பயன் படுத்தி வாழக் கற்றுக் கொண்டபின்பு, ஒரு நாள் அவளுடைய கணவன் வேறொரு மருத்துவரை அணுகி, ஒரு எளிய கேள்வியைக் கேட்டார் “அவளுக்கு எப்படியாகிலும் உதவ முடியுமா?” என்றார். உடனடியாக “ஆம்” என்ற பதில் வந்தது. அந்த மருத்துவர் அவளுக்குச் சாதாரண கண் புறை நோய் (cataracts) இருப்பதைக் கண்டுபிடித்தார். முதலாவது, அதனை அவளுடைய வலது கண்ணிலிருந்து நீக்கினார், அப்பொழுது அவளுடைய பார்வை 20/20 என்றிருந்தது. பின்னர், அவளுடைய இடது கண்ணிலும் அறுவை சிக்கிச்சை செய்தார், அதுவும் வெற்றியாக முடிந்தது.
ஒரு எளிய கேள்வி நாகமானின் வாழ்வை மாற்றியது. மிக வலிமையான இராணுவ வீரன் குஷ்டரோகத்தால் பாதிக்கப் பட்டான். ஆனால், எலிசா தீர்க்கதரிசி, “நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு, அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்” (2 இரா.5:10) என்று அறிவுரை கூறியதைக் கேட்ட போது, அவன் கோபமடைந்தான். நாகமானின் வேலைகாரன் அந்த படைத்தலைவனிடம் ஓர் எளிய கேள்வியைக் கேட்டான். “அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா?” (வ.13) என்றான். அதற்குச் சம்மதித்த நாகமான் ஸ்நானம் பண்ணினான், “அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்” (வ.14).
சில வேளைகளில், நாமும் நம்முடைய வாழ்வில் சில பிரச்சனைகளோடு போராடிக் கொண்டிருக்கலாம், காரணம், நாம் தேவனிடம் கேட்கவில்லை. நீர் உதவுவீரா? நான் போகலாமா? நீர் வழி நடத்துவீரா? என்று சந்தேகமான கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் நம்மிடமிருந்து சிக்கலான கேள்விகளை எதிர்பார்க்கவில்லை. “அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்” என்று தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு வாக்களிக்கின்றார் (ஏசா.65:24). எனவே, இன்றே அவரிடம் கேள்.
விடுவிக்கும் நம்பிக்கை
இந்த மனிதன் விடுவிக்கப் பட கூடாதவனாக காணப்படுகின்றான். அவனது குற்றப் பட்டியலில், எட்டு முறை துப்பாக்கி சுடுதல்(ஆறு பேர் கொல்லப்பட்டனர்) 1970 ஆம் ஆண்டு நியுயார்க் பட்டணத்தை அச்சுறுத்தும் வகையில் ஏறத்தாள 1500 நெருப்புகளை ஏற்படுத்தினான். அவனுடைய குற்றச்செயல் நடைபெறும் இடத்தில் காவல் துறையை திட்டி கடிதங்களை வைத்தான். ஆனால், ஒரு நாள் பிடிபட்டான். அவன் செய்த ஒவ்வொரு கொலைக்கும் தொடர்ந்து சிறைத்தண்டனை வழங்கப்பட்டு ஆயுள் கைதியானான்.
ஆனாலும், தேவன் இந்த மனிதனுக்கு இரங்கினார். இன்று இவன் கிறிஸ்துவின் விசுவாசி, அனுதினமும் தேவனுடைய வார்த்தைகளில் நேரத்தைச் செலவிடுகிறான். தன்னால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தான், அவர்களுக்காக ஜெபிக்கின்றான். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இந்த மனிதன் மீட்கப்பட வாய்ப்பேயில்லை என்றிருந்த போதும், அவன் தேவனிடத்தில் நம்பிக்கையைப் பெற்றான். அவன், “என்னுடைய விடுதலையை இயேசு என்ற ஒரே ஒரு வார்த்தையில் பெற்றேன்” என்றான்.
மீட்பு என்பது தேவனுடைய அற்புத செயல். சில கதைகள் இன்னும் வினோதமாக இருக்கின்றது. ஆனால் எல்லாவற்றிலும் உள்ள அடிப்படை உண்மை ஒன்றுதான். இயேசு வல்லமையுள்ள இரட்சகர்! அவருடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள நாம் ஒருவருமே தகுதியானவர்கள் அல்ல. அவர், “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களை……….முற்று முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபி.7:25).