சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: “மீன்பிடிக்கப்போகிறேன்” என்றான். அதற்கு அவர்கள்: “நாங்களும் உம்முடனேகூட வருகிறோம்” என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.  யோவான் 21:3

““ஹலோ என்ன விஷயம்” இந்த நள்ளிரவில் எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று தொலைபேசியின் மறுமுனையில் இருந்த.என்னுடைய சிநேகதியிடம் கேட்டேன்.

“நாங்கள் அனைவரும் சுகமே” என்று சொல்லிவிட்டு ஒரு கணம் தயங்கினாள்.” என் இதயம் கனமாக/பாரமாக இருப்பதால் என்னால் தூங்க முடியவில்லை. நான் யாரிடமாவது பேசியாக வேண்டும்” என்றாள்.

உரையாடல்தொடர்ந்தபோது தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் மனித வளத்துறையின் தலைவராக இருந்த என் சிநேகிதி ஒரு சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாள் என்று புரிந்து கொன்டேன் – ஊரடங்கின் விளைவினால். கிட்டத்தட்ட 350 தொழிலாளர்களை அவள் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்ய வேண்டியதாயிற்று. கோவிட் -19 தொற்று நோயால் ஏற்பட்டுள்ள இந்த நிதி நெருக்கடி ஏற்கனவே உயிர்களைவிட அதிகமான வாழ்வாதாரங்களைப் பறிக்கத் தொடங்கிவிட்டது, தெரிந்த பல குடும்பங்கள் கஷ்டப்படுவதைப் பார்ப்பது தேவனின் பிள்ளையாகிய என் சிநேகிதிக்கு மிகவும் வேதனையை அளித்தது. இந்த காரியத்தை அவள் செய்ய மறுத்தாலும் அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

இந்த தொற்றுநோயின் தாக்கத்தால் பொருளாதார மந்த நிலை காத்திருக்கிறது என்று நிபுணர்கள் ஏற்கனவே கணித்திருக்கிறார்கள். இவ்விதமான பொருளாதார சங்கடத்தை எப்படி சமாளிப்பது என்று அநேக நிபுணர்கள் அறிவுரை கூறிவருகிறார்கள். எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமற்ற தன்மையே இன்றைய குறியீட்டு வார்த்தையாகத் தெரிகிறது. நமக்கே வேலை இருக்குமா என்று நாளைக்குத் தான் தெரியும்! நம்முடைய சம்பளத்தின் அடிப்படையில் எடுத்த கடன்கள், எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள் இவை எல்லாமே தடாலென்று விழுந்து நொறுங்கி விட்டன. இப்பொழுது இருக்கும் இந்த சூழ்நிலை நம்முடைய வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் எத்தகைய நிச்சயமற்ற காரியங்களின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்கின்றன என்று நமக்கு உணர்த்துகின்றது.

மற்ற மக்களை விட வாழ்க்கையில் மாற்றம் காண்பதை இயேசுவின் சீடர்கள் நன்றாக புரிந்து கொண்டிருந்தனர். உதாரணமாக சீமோன் பேதுரு நல்ல மீனவத் தொழிலை இயேசுவைப் பின்பற்றுவதற்காக விட்டுவிட்டான். அது போலவே யாக்கோபு, யோவான், அந்திரேயாவும் செய்தனர் “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” (மாற்கு 1:17). என்ற இயேசுவின் அழைப்பைக் கேட்டு உடனடியாக அவரைப் பின்தொடர்ந்தனர். சீமோன் பேதுருவுக்கு உங்களையும் என்னைப் போலவும் குடும்பமும் கடமைகளும் இருந்தது என்பது நமக்குத் தெரியும். இயேசு அவரை அழைத்த போது அது அவரை தடுத்திருக்கலாம். ஆனால் நாசரேத்திலிருந்து வந்த “புதிய ரபியை” பின்பற்றுவதற்கான நிச்சயமற்ற தன்மையிலிருந்து விலகிச் செல்வதற்குப் பதிலாக, அது ஒரு உன்னத அழைப்பு என்று `நம்பி துணிச்சலாக புறப்பட்டார்.

மூன்று வருடங்கள் கடந்தது; அவருடைய சீடர்கள் என்னற்றஅற்புதங்களைக் கண்டனர். 5000-க்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்த போது அங்கே இருந்தனர். திரளான மக்கள் குணம் அடைந்த போது அங்கும் இருந்தனர். லாசரு உயிரோடு எழுப்ப பட்டதையும் அவர்கள் கண்டனர். ஒரு காலத்தில் அற்பமாக கருதப்பட்ட இந்த மீனவர்கள், ‘வருகின்ற மேசியாவைக்’ இப்பொழுது தூரத்தில் இருந்தும் சமீபத்திலிருந்தும், காண திரளான மக்கள் வரும் போது, அந்த காலத்தில் இஸ்ரவேலின் நடந்துகொண்டிருந்த மிகப்பெரிய இயக்கத்தின் முன்னிலையில் அவர்கள் நின்று செயல்பட்டனர்! சீமோன் பேதுரு பிரபலமாகிவிட்டார். இயேசு சிலுவையில் அறையப்படும் முன்னர் விசாரணைக்கு கொண்டுபோக பட்ட போது அவரை ஒரு வேலைக்காரப் பெண்கூட எளிதாக அடையாளம் கண்டு கொண்டு “நீயும் இயேசுவோடே இருந்தாய்” (மாற்கு 14:67) என்றாள்.

ஆனால் ஒரே இரவில் எல்லாம் மாறியது. இயேசு ஒரு குற்றவாளியைப் போல சிலுவையில் அறையப்பட்டார். இந்த பிரபலமான மனிதர்கள் இப்பொழுது மறைந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டனர், உயிர்ந்தெழுதலுக்குப் பின்னரும், உயிர்த்தெழுந்த ஆண்டவர் அவர்களை வந்து சந்திப்பார் என்பதை அவர்கள் கணிக்கவும் எதிர்பார்க்கவுமில்லை; அவர்கள் வாழ்க்கை முற்றிலுமகா மாறிவிட்டது.

தன் தொழில் பாதையில் ஒரு நாற்சந்தியிற்கு வந்து, முன்செல்லமுடியாத ஒரு நிலையை அடைந்தார் பேதுரு. நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது, அவன் தனது குடும்பத்தைப் பற்றியும் தமது பொறுப்புக்கள் பற்றியும் நினைத்திருப்பாரா என்றுத் தோன்றுகிறது. மூன்று வருடங்களாக தன்னுடைய வலைகளை மறந்திருந்தார். மூன்று வருடங்களாக இயேசுவைப் பின்பற்றினார். மூன்று வருடங்களாக தான் முதலிடும் நேரமும் முயற்சியும் எதிர்காலத்தில் பலனளிக்கும் என்று அவர் நம்பியிருந்தார். ஆயினும் எஞ்சியிருந்தது எல்லாம் நிச்சயமற்ற தன்மை மட்டுமே. ஆகவே தனக்கு நன்கு தெரிந்த வேலைக்கு திரும்ப முடிவெடுக்கிறார் – மீன் பிடிப்பது.

தன்னுடைய முன்னாள் சகாக்களுடன் சேர்ந்து திரும்ப படகில் சென்றார்; இரா முழுவதும் உழைத்தும் பயன் ஏதுமில்லை. விடியற் காலம் அவர் பசியோடும் மனசோர்வோடும் கரை வந்து சேரும்போது அங்கிருந்த ஒரு மனிதன் ஒரு எளிய கேள்வியை கேட்கிறார்: “பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா?” (யோவான் 21:5). “இதோ வாங்குவதற்கு ஆள் இருக்கிறது ஆனால் விற்பதற்கு தான் என்னிடத்தில் ஒன்றுமில்லை” என்று நினைத்திருக்கலாம். அதற்குப் பிறகு அந்த மனிதருடைய அசாதாரண ஆலோசனையை அவர்கள் பின்பற்றிய போது மிகப்பெரியளவு மீன்களைப்பிடிக்கின்றனர். அப்பொழுதுnதான் சீடர்கள் அவரை ஆண்டவர் என்று உணர்ந்துகொண்டனர். அவரைப் பின்தொடரும்படி பேதுருவை அழைத்தபோது இயேசு செய்தவிதமாகவே இதுவும் இருக்கின்றதல்லவா?

படகிலிருந்து அவசரமாக இறங்கி தன்னுடைய குருவை சந்திக்க பேதுரு விரைகிறான்; அப்பொழுது அவன் காண்பது என்ன? வாசனைவீசும் பொறித்த மீனும் அப்பமுமே. இங்கு குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இயேசு ஏற்கனவே நெருப்பை மூட்டி மீன் பொரித்துக் கொண்டிருந்தார்; இருந்தாலும்கூடபேதுரு பிடித்த மீன்களிலிலிருந்து சிலவற்றைக் கேகிட்றார்.அவனுடைய பசி ஆறின பின்பு இயேசு மறுபடியும் பேதுருவுக்கு தான் கொடுத்த வேலை வாய்ப்பின் அழைப்பைத் திரும்பவும் கொடுக்கிறார் “என்னைப் பின்பற்றி வா”

பேதுருவிற்கான இந்த அழைப்பு நமக்கும் கொடுக்கப்பட்டதொன்று தான். உலகளாவிய பேரிடர் மற்றும் உறுதியற்ற பொருளாதார நிலை மையமாக இருக்கும் இக்காலங்களில் கிறிஸ்து நமக்குத் தந்த “என்னைப் பின்பற்றி வா” என்கிற வேலைவாய்ப்பு நிரந்தரமான ஒன்று என்பது நமக்கு நிச்சயம் அளிக்கிறது. இந்த உலகத்தில் நம்முடைய வேலைகள் போகலாம்; வங்கி நிலுவை கரையலாம். ஆனால் நாம் தொழுது கொள்ளும் ஆண்டவர் நம்முடைய எல்லாத் தேவைகளையும் அறிந்திருக்கிறார் என்கிற நிச்சயத்தில் நம்முடைய நம்பிக்கை காணப்பட வேண்டும். சங்கீதம் 23: 1 “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன்” என்பது நமக்கு மீண்டும் உறுதியளிக்கிறது. நமது நல்ல மேய்ப்பனாக கர்த்தர் நமக்கு தேவையானவற்றையும், இறக்கத்தையும், ஊழியத்தையும் தருகிறார். நம் சோதனையின் காலங்களை சாதனையின் சாட்சிகளாக மாற்றுவதில் ஆவர் நிபுணர். நாமும் அதில் சிறிதளவு சேர்க்க வேண்டுமென்பதை அவர் விரும்புகிறார். ஒரு சிறிய விசுவாசம், அதிக நம்பிக்கை, ஆண்டவரின் முடிவில்லா அன்பின்மேல் பூரண நம்பிக்கை. சார்ல்ஸ் ஸ்பர்ஜன் இதை அருமையாக வருணிக்கிறார்…

“கர்த்தரின் கரத்தை நாம் தொடர முடியாவிட்டாலும் கூட அவருடைய இருதயத்தை எப்பொழுதும் நம்பலாம்.”

-ரெபெக்கா விஜயன்