அவளுடைய மருத்துவர், பிரிந்து காணப்படும் அவளுடைய விழித்திரை சரிபார்க்கக் கூடிய நிலையில் இல்லை என்றார். 15 ஆண்டுகள் பார்வையில்லாதவளாய், பிரெயில் முறையைக் கற்றுக் கொண்டு, ஒரு கோலையும், பழக்குவிக்கப் பட்ட நாயையும் பயன் படுத்தி வாழக் கற்றுக் கொண்டபின்பு, ஒரு நாள் அவளுடைய கணவன் வேறொரு மருத்துவரை அணுகி, ஒரு எளிய கேள்வியைக் கேட்டார் “அவளுக்கு எப்படியாகிலும் உதவ முடியுமா?” என்றார். உடனடியாக “ஆம்” என்ற பதில் வந்தது. அந்த மருத்துவர் அவளுக்குச் சாதாரண கண் புறை நோய் (cataracts) இருப்பதைக் கண்டுபிடித்தார். முதலாவது, அதனை அவளுடைய வலது கண்ணிலிருந்து நீக்கினார், அப்பொழுது அவளுடைய பார்வை 20/20 என்றிருந்தது. பின்னர், அவளுடைய இடது கண்ணிலும் அறுவை சிக்கிச்சை செய்தார், அதுவும் வெற்றியாக முடிந்தது.

ஒரு எளிய கேள்வி நாகமானின் வாழ்வை மாற்றியது. மிக வலிமையான இராணுவ வீரன் குஷ்டரோகத்தால் பாதிக்கப் பட்டான். ஆனால், எலிசா தீர்க்கதரிசி, “நீ போய், யோர்தானில் ஏழுதரம்     ஸ்நானம்பண்ணு, அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்” (2 இரா.5:10) என்று அறிவுரை கூறியதைக் கேட்ட போது, அவன் கோபமடைந்தான். நாகமானின் வேலைகாரன் அந்த படைத்தலைவனிடம் ஓர் எளிய கேள்வியைக் கேட்டான். “அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச்   சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா?” (வ.13) என்றான். அதற்குச் சம்மதித்த நாகமான் ஸ்நானம் பண்ணினான், “அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்” (வ.14).

சில வேளைகளில், நாமும் நம்முடைய வாழ்வில் சில பிரச்சனைகளோடு போராடிக் கொண்டிருக்கலாம், காரணம், நாம் தேவனிடம் கேட்கவில்லை. நீர் உதவுவீரா? நான் போகலாமா? நீர் வழி நடத்துவீரா? என்று சந்தேகமான கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர் நம்மிடமிருந்து சிக்கலான கேள்விகளை எதிர்பார்க்கவில்லை. “அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறு உத்தரவு கொடுப்பேன்” என்று தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு வாக்களிக்கின்றார் (ஏசா.65:24). எனவே, இன்றே அவரிடம் கேள்.