Archives: ஏப்ரல் 2018

விதவையின் விசுவாசம்

காலையில் அதிக இருட்டோடு இருக்கும்போதே ஆ-பி தன் நாளைத் துவக்கிடுவாள். கிராமத்தில் உள்ள மற்றவர்களும் சீக்கிரத்தில் எழுந்து ரப்பர் தோட்டத்திற்கு போக புறப்படுவார்கள். சீனாவின் (ஹூவாங்சாங்) கிராமத்தில் ஒரு ரப்பர் மரப்பால் (latex) தான் அவர்களுக்கு பிரதான வருமான ஆதாரம். விடியும்முன் எவ்வளவு சீக்கிரமாய் அவர்கள் மரத்தை செதுக்குகிறார்களோ அவ்வளவாய் அவர்கள் பாலை எடுக்கமுடியும். காலையில் ரப்பர் மரத்தை செதுக்குகிறவர்கள் நடுவில் ஆ-பி காணப்பட்டாலும், அவள் முதலில்

ஆண்டவரோடுதான் தன் நேரத்தை செலவிடுவாள்.

ஆ-பியின் தகப்பன், கணவர் மற்றும் ஒரே மகன் மூவரும் இறந்துபோனார்கள். ஆனால் அவள் – தன் மருமகளுடன் இணைந்து வயது முதிர்ந்த தாயார் மற்றும் இரண்டு பேரன்களை பராமரித்து வந்தாள். இவளுடைய கதை, வேதத்திலே ஆண்டவரை நம்பிய இன்னொரு விதவையை எனக்கு நினைவுபடுத்துகிறது.

விதவையின் இறந்த கணவன் அவளைக் கடனில் விட்டு சென்றுவிட்டான் (2 இரா. 4:1). தன்னுடைய இக்கட்டிலே அவள் ஆண்டவரின் மேல் விசுவாசம் வைத்து அவருடைய ஊழியக்காரனாகிய எலிசாவை அணுகினாள். ஆண்டவர் அவள்மேல் அக்கறையாய் உள்ளார் என்றும், அவளுடைய இந்த நிலைமையில் அவர் எதையாவது செய்வார் என்றும் நம்பினாள். தேவனும் அவ்வாறே செய்தார். விதவையின் அவசரத் தேவையை அற்புதமாக சந்தித்தார் (வச. 5-6). இதே ஆண்டவர் ஆ-பிக்கும் பெரிய அற்புதத்தை நிகழ்த்தாமல் அவளுடைய கையின் பிரயாசம், நிலத்தின் விளைபொருள், அவருடைய மக்கள் தரும் வெகுமதிகளின் மூலமாக நன்மை செய்தார்.

வாழ்க்கை நம்மேல் அநேக அழுத்தங்களைச் சுமத்தினாலும், தேவனுடைய பலம் நமக்கு எப்போதும் உண்டு. நம்முடைய கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்து, நம்மால் இயன்றதை நாம் செய்யும்போது, நம்முடைய சூழ்நிலைகளில் தம்முடைய கரத்தின் கிரியைகளின் மூலமாக அவர் செய்யும் காரியம் ஆச்சரியமாயிருக்கும்.

மறதி நோய்

ஒருமுறை ஒரு குறிப்பிட்ட சூழலில், கலிபோர்னியாவின் அவசர உதவி குழுவினர், ஆஸ்திரேலிய உச்சரிப்புடன் பேசும் ஒரு பெண்ணை மீட்டெடுத்தார்கள். அவளுக்கு அம்னீசியா என்னப்படும் மறதி நோய் இருந்ததாலும், எந்தவொரு அடையாள அட்டையும் அவளிடம் இல்லாத காரணத்தாலும், அவளால் தன்னுடைய பெயரையோ தான் எங்கிருந்து வந்தோம் என்கின்ற விவரத்தையோ சொல்லமுடியவில்லை. மருத்துவர்கள் மற்றும் சர்வதேச ஊடகத்தினர், இருவரும் இணைந்து இவளை இயல்புக்கு கொண்டுவந்தபின், இவளுடைய கதையை கேட்டறிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

பாபிலோனிய தேசத்து ராஜா நேபுகாத்நேச்சாரும் தான் யார் என்பதையும், எங்கே இருந்து வருகிறோம் என்பதையும் மறந்துபோனான். அவனுடைய ‘அம்னீசியா’ ஒரு ஆவிக்குரிய மறதி. அவனுக்கு கொடுக்கப்பட்ட ராஜ்ஜியத்தின் மேல் பெருமிதம் கொண்டு கர்த்தர் ராஜாதி ராஜா என்பதையும், அவனிடம் இருப்பதெல்லாம் ஆண்டவரால் வந்தது (தானி. 4:17, 28-30) என்பதையும் அவன் மறந்துபோனான் (தானி. 4:17, 28-30).

ராஜாவின் மனநிலையை படம்பிடிக்கும் வண்ணம் ஆண்டவர் அவனை மனுஷரினின்று தள்ளி, வெளியின் மிருகங்களோடு சஞ்சரிக்கப் பண்ணி மாடுகளைப்போல் புல்லை மேயச் செய்தார் (வச. 32-33). கடைசியாக, ஏழு ஆண்டுகளுக்கு பின், நேபுகாத்நேச்சார் தன் கண்களை வானத்துக்கு நேராக ஏறெடுத்துபோது, தான் யார் என்கின்ற நினைவையும், இந்த ராஜ்ஜியம் அவனுக்கு யார் தந்தது என்கின்ற அறிவையும் அவன் திரும்பப் பெற்றுக்கொண்டான். அவனுடைய உணர்வுகள் திரும்பினதும் அவன், “ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன் …(வச. 37) என்று அறிக்கை செய்தான்.

நாம் எப்படி இருக்கிறோம்? நம்மை யார் என்று எண்ணுகிறோம்? மறந்துபோகக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதால், ராஜாதி ராஜாவை நமக்கு நினைவுபடுத்த யார் நமக்கு உதவக்கூடும்?

காத்திருக்கும் காலம்

அநேக குழந்தைகள் புத்தகங்களை எழுதிய டாக்டர்.சியூஸ் கூறுகிறார்: “தூண்டிலில் எப்பொழுது மீன் அகப்படும்,? பட்டம் விட எப்பொழுது காற்றடிக்கும், ? அல்லது எப்பொழுது வெள்ளி இரவு வரும் ?….என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஏதோ ஒரு காரியம் நடக்க காத்திருக்கின்றனர்.”

வாழ்க்கையின் அதிகமான பகுதி காத்திருப்பதிலேயே கடந்துவிடுகிறது. ஆனாலும் தேவன் எவ்விதத்திலும் அவசரப்படுவதில்லை - அல்லது அவசரப்படாதவர் போல் காணப்படுகிறார். ‘தேவன் தமக்கென்று ஒரு நேரத்தையும், தாமதத்தையும் உடையவர்’ என்று ஒரு பழம்பெரும் கூற்று சொல்லுகிறது. ஆகையால் நாம் காத்திருக்கிறோம்.

காத்திருப்பது உண்மையில் கடினமானதே. கையை காலை பிசைவோம், அங்குமிங்கும் அலைவோம், பெருமூச்சு விடுவோம், விரக்தியின் உச்சத்தில் உள்ளே புழுங்குவோம். இந்த கொடூரமான மனுஷனோடு நான் ஏன் வாழனும்? இந்த கஷ்டமான வேலை, இந்த தகாத நடத்தை, இந்த வியாதிப்போராட்டம், இன்னும் எத்தனை காலம்தான் இதை சகிக்கனும்? ஏன் ஆண்டவர் பதிலளிக்காமல் உள்ளார்?

ஆண்டவருடைய பதில்: “சற்றே பொறுத்திருந்து நான் செய்யும் காரியத்தை பார்”

வாழ்க்கையை நமக்கு போதிக்கும் சிறந்த ஆசிரியர்களில் ‘காத்திருத்தலும்’ ஒன்று. அதன் மூலமாகவே நாம் ஆண்டவர் நமக்குள்ளும், நமக்காகவும் கிரியை செய்யும்வரை காத்திருப்பதினால் காத்திருத்தலின் பண்பைக் கற்றுக்கொள்கிறோம். காத்திருக்கும் அனுபவத்திலே தான் நாம் சகிப்புத்தன்மை, காரியங்கள் நமக்கு சாதகமில்லாது போனாலும் தேவனுடைய அன்பு , மற்றும் நன்மையின்மேல் நம்பிக்கை வைக்கும் திறன் (சங். 70:5) போன்றவைகளில் வளருகிறோம்.

ஆனாலும், காத்திருத்தல் ஒரு கொடுமையான, பல்லை கடிக்கும் அனுபவமாக இருக்க வேண்டியதில்லை. காத்திருப்பின் நாட்களில் நாம் அவருக்குள் “மகிழ்ந்து களிகூரலாம்” (வச. 4). இம்மையானாலும் மறுமையானலும், ஆண்டவர் நம்மை ஏற்ற நேரத்தில் விடுவிப்பார் என்கின்ற நம்பிக்கையோடு நாம் காத்திருப்போம். ஆண்டவர் எப்போதும் அவசரப்படுகிறவரல்ல, அவர் எப்போதும் சரியான நேரத்தில் வருவார்.

சமாதானத்தின் ரகசியம்

சகோதரி கிரேஸ் ஒரு விசேஷமான மங்கை. அவளைக் குறித்து நான் நினைக்கும்போதெல்லாம் ஒரு வார்த்தை என் மனதில் எழும்பும்: சமாதானம். அவளுடைய முகத்தில் காணப்படும் அமைதியான, ஆரவாரமற்ற தோற்றம். நான் அவளை அறிந்த இந்த ஆறு மாதத்தில் அது மாறவேயில்லை. பயங்கரமான ஒரு நோயின் காரணமாக அவளுடைய கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இவளுடைய முகநாடி வேறுபடவில்லை.

சகோதரி கிரேஸிடம் அவளுடைய சமாதானத்தின் ரகசியம் என்னவென்று விசாரித்தபோது, அவள் சொன்னாள், “அது ரகசியமல்ல, அது ஒருவர், இயேசு, எனக்குள் இருப்பதே என்றாள். இந்தப் புயலின் நடுவில் நான் உணர்ந்திடும் இந்த அமைதியை விவரிக்க வேறு வார்த்தை இல்லை”

நம்முடைய சமாதானத்தின் ரகசியம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடுகூட உள்ள உறவு. அவரே நம் சமாதானம். இயேசு நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாய் இருக்கும்போது, நாம் மேன்மேலும் அவரைப் போல் மாறும்போது, சமாதானம் உண்மையானதாகிறது. வியாதி, பொருளாதார நெருக்கடி அல்லது ஆபத்துகள் நம்மை சந்திக்கலாம், ஆனாலும் தேவன் தம்முடைய கரங்களிலே நம்மைத் தாங்குகிறார் (தானி. 5:23) என்பதை சமாதானம் உறுதிசெய்கிறது. ஆதலால், காரியங்கள் நன்மையாகவே முடியும் என்று நம்பிடலாம்.

எல்லா அறிவுக்கும் புத்திக்கும் எட்டாத இந்த சமாதானத்தை நாம் அனுபவித்திருக்கிறோமா? சகலமும் தேவனுடைய கட்டுப்பாட்டிலேதான் உள்ளது என்கின்ற உள்ளான நம்பிக்கை நமக்குண்டா? இன்றைக்கும் நான் ஒவ்வொருவருக்கும் சொல்லவிரும்பும் வாழ்த்து அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றது “சமாதானத்தின் கர்த்தர்தாமே உங்களுக்கு சமாதானத்தை தந்தருளுவாராக.” இந்த சமாதானத்தை நாம் “எல்லா வேளைகளிலும் எல்லா விதத்திலும்” உணர்ந்திடுவோமாக (2 தெச. 3:16).

சகலத்தையும் அறிந்த தேவன்

சாக்லேட் நிறம்கொண்ட என்னுடைய லாப்ராடர் நாய்க்குட்டிக்கு மூன்று மாதம் இருக்கையில், தடுப்புஊசி போடுவதற்கும் மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் நான் அதை ஒரு கால்நடை மருத்துவரிடம் அழைத்துசென்றேன். மருத்துவர் கவனமாக பரிசோதிக்கும்போது, அதன் இடது பாதத்திலிருந்த மென்மயிரின் மேல் சிறு வெள்ளைப் பகுதி ஒன்று காணப்பட்டது. அந்த மருத்துவர் புன்முறுத்துகொண்டு சொன்னது, “சாக்லேட்டில் உன்னை முக்கி எடுக்கும்வேளையில் தேவன் அந்த இடத்தில் உன்னை பிடித்திருப்பார்போல்” என்றார்.

அதைக்கேட்ட நானும் புன்முறுத்தேன். ஆனாலும், அவர்கள் அறியாமலேயே, தேவன் தம் ஒவ்வொரு சிருஷ்டிப்பின்மீதும் தனிப்பட்ட ஆர்வம் எடுக்கிறவராய் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது.

மத்தேயு 10:30-ல் இயேசு சொல்கிறார், “உன் தலையில் உள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது”. தேவன் எவ்வளவு பெரியவராக இருந்தும் நம்முடைய வாழ்க்கையின் நுணுக்கமான பகுதிகளிலும் அவர் அளவில்லா ஆர்வம் காட்டுகிறார். எந்தவொரு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, அது அவருடைய கவனத்திலிருந்து தப்பமுடியாது, அவர் முன் கொண்டுவர தகுதியல்லாத அற்ப பிரச்சனைதான் என்று எதுவும் இல்லை. அவர் அவ்வளவாய் அக்கறை காட்டுகிறார்!

தேவன் நம்மை சிருஷ்டித்தவர் மாத்திரமல்ல; அவர் நம்மை போஷிக்கிறவரும்கூட ஒவ்வொரு நொடியும் அவர் நம்மை காக்கிறவராய் உள்ளார். சிலவேளைகளில் நாம், “பிசாசு என் எல்லாக் காரியங்களையும் அறிந்து செயல்படுகிறான்” என்று சொல்வதுண்டு. ஆனாலும், தேவன் எல்லாவற்றிலும் இருக்கிறார், நாம் கவனிக்கத் தவறிய காரியங்களையும் அவர் கவனிக்கத் தவறுவதில்லை. சம்பூரண ஞானமும் அன்பும் கொண்ட நம் பரமபிதா நம்மை – மற்ற எல்லா சிருஷ்டிப்புகளுடன் – அவருடைய பரிவான, பலமுள்ள கரங்களில் எப்படித் தாங்குகிறார் என்பதை அறிவது எவ்வளவாய் நம்மை தேற்றுகிறது?