அக்டோபர், 2017 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: அக்டோபர் 2017

ரூத்தின் கதை

ரூத் அவளது கதையைக் கண்ணீர் வடிக்காமல் கூற இயலாது. 80 வயதிற்கு மேற்பட்ட ரூத், அதிகமாக நடமாட்டம் ஏதும் இல்லாத நிலையில், திருச்சபையில் முக்கியமற்றவளாக இருக்கலாம். அவள் தனிமையாக வாழ்ந்து வந்ததால், அவளுக்கு அநேக மக்களோடு தொடர்பு இல்லாத நிலையில், வெளியே செல்லவோ, ஆலயத்திற்குச் செல்லவோ, அவள் பிறருடைய வாகன உதவியைச் சார்ந்திருந்தாள்.

ஆனால், அவளது இரட்சிக்கப்பட்ட வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் பொழுது, தேவனுடைய ஆச்சரியமான கிருபைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறாள். அவள் 30 வயதுகளில் இருந்தபொழுது, அவளது சிநேகிதிகளில் ஒருவர். அவளை ஒரு இரவு கூட்டத்திற்கு வரும்படி அழைத்தாள். அப்பொழுது அவள் ஒரு போதகரின் பேச்சை கேட்கப் போவதாகத் தெரியாது. “அப்படித் தெரிந்திருந்தால், நான் போயிருக்கமாட்டேன்” என்று கூறினாள். அவள் ஏற்கனவே மதத்தைப் பற்றி அறிந்திருந்தாள். அது அவளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனாலும் அவள் அந்தக் கூட்டத்திற்குச் சென்றாள். அன்று இரவு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைக் கேட்டாள்.

இப்பொழுது 50 ஆண்டுகள் கழித்து, இயேசு அவளது வாழ்க்கையை மாற்றி அமைத்ததை ஆனந்தக் கண்ணீருடன் கூறுகிறாள். அன்று மாலை அவள் தேவனுடைய பிள்ளையானாள். இப்பொழுது அவள் வயது சென்றவளானலும், அவளது இரட்சிப்பின் கதை ஒருக்காலும் பழமையாகப் போனதில்லை என்றும் இளமையாகவே உள்ளது.

நமது கதை ரூத்தின் கதையைப் போல இருந்தாலும் சரி, இராவிட்டாலும் சரி அது முக்கியமல்ல ஆனால், இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து அவரது மனம், உயிர்த்தெழுலில் நம்பிக்கை வைக்கும் முதல்படியே மிக முக்கியமானது. “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோம. 10:9) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார்.

அதைத்தான் ரூத் செய்தாள். நீங்களும் அதைச் செய்யலாம். இயேசு மீட்கிறார். மாற்றுகிறார். நமக்கு புதிய ஜீவனைத் தருகிறார்.

புதிர்களை தெளிவுபடுத்துதல்

பீநட்ஸ் என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கிய சார்லஸ் ஷல்ஸின் நகைச்சுவையையும், அறிவுத் திறனையும் கண்டு நான் அதிகம் மகிழ்ச்சியடைவதுண்டு. எங்களது ஆலயத்திலுள்ள வாலிபப் பிள்ளைகளைச் பற்றிய புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான அவரது கேலிச் சித்திரம் காணப்பட்டது. அந்த படத்தில் ஒரு வாலிபன் அவன் கையில் வேதாகமத்தை வைத்துக் கொண்டு, தொலைபேசியில் அவனது சினேகிதனிடம் “பழைய ஏற்பாட்டிலுள்ள புதிர்களை தெளிவுபடுத்துவதற்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளேன்… அதை வாசிக்க ஆரம்பிக்கிறேன்” என்று கூறினான்.

ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையின் வல்லமையை புரிந்து கொள்ளவும், அனுபவிக்கவும் 119ம் சங்கீதத்தை எழுதியவருடைய அளவு கடந்த ஆவல் வெளிப்படுகிறது. “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்; நாள் முழுவதும் அது என் தியானம்” (வச. 97). தேவனுடைய வார்த்தையின் மேலிருந்த அளவு கடந்த ஆவல் அதன் ஆசிரியர் ஞானத்தில், அறிவில் வளர்ச்சியடைந்து தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய அவரை வழிநடத்தினது (வச. 100).

வேதாகமத்தில் உள்ள புதிர்களை தெளிவுபடுத்த எந்தவித அதிசயமான செயல் திட்டங்கள் ஏதும் இல்லை. அந்த செயல் திட்டங்கள் மனரீதியானது மட்டுமல்ல, நாம் வாசிக்கும் பகுதிக்கும் ஏற்ப நாம் நடக்கவும் வேண்டும். வேதாகமத்தில் சில பகுதிகள் நம்மால் புரிந்துகொள்ள இயலாதவைகளாக இருக்கலாம். நாம் நன்றாக புரிந்து கொண்ட உண்மைகளை கடைபிடித்து, செயல்படுத்த “உம்முடைய வார்த்தைகள் என் நாவிற்கு எவ்வளவு இனிமையானவைகள் என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாய் இருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன். ஆதலால், எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன்” (வச. 103-104)

ஆச்சரியமான கண்டுபிடிப்புகளுக்கான பயணம் தேவனுடைய வார்த்தையில் உள்ளது.

மொத்தத்திற்கும் நம்புங்கள்

நானும் என் கணவனும், எங்களது வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கு முன்பு, விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால், தேவனுடைய அன்பிற்கு எங்களை ஒப்புக் கொடுத்து அவருக்கு கீழ்ப்படிந்த பின்பு, நாங்கள் மறுபடியும் ஒருவருக்கொருவர் எங்களை ஒப்புக் கொடுத்தோம். நாங்கள் சிறந்த ஆலோசர்களிடம் ஆலோசனை கேட்டதோடு, பரிசுத்த ஆவியானவர், எங்களைத் தனித்தனியாகவும், கணவன், மனைவியாகவும் சந்தித்து எங்களை மாற்றியமைக்க ஜெபித்தோம். எங்களது பரமபிதா தொடர்ந்து ஒருவரை ஒருவர் சிறந்த முறையில் தொடர்புகொள்ள உதவி செய்கிறார். தேவாதிதேவனை எப்படி நேசிப்பது எப்படி நம்புவது என்று கற்றுத்தருவதோடு என்ன நேரிட்டாலும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் கற்றுத் தருகிறார்.

ஆயினும், நாங்கள் எங்களது 25வது வருட திருமண நாளைக் கொண்டாட இருக்கும் வேளையில், எங்களது சோதனைகளில், தேவன் செய்த அனைத்துக் காரியங்களையும். அவ்வப்பொழுது மறந்து விடுகிறேன். சில சமயங்களில் என் உள்ளத்தில் ஆழத்தில் உள்ள நான் அறியாத ஏதோ ஒரு பயம் என்னை ஆட்கொள்கிறது. அதனால், தேவனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிகளை சார்ந்திருக்காமல், தேவையற்ற கவலைகளை அடைகிறேன்.

உபாகமம் 1ம் அதிகாரத்தில், தேவனை எக்காலத்திலும் உறுதிபட நம்பலாம் என்று மோசே உறுதியாகக் கூறியுள்ளார். இஸ்ரவேல் மக்கள் அவர்களது சுதந்திரமான தேசத்தை பெற்று மகிழ்ச்சியடைய முன்னேறிச் செல்லும்படி மோசே அவர்களை ஊக்கப்படுத்தினான் (வச. 21) ஆனால், தேவனுடைய ஜனங்கள் அவர்களது எதிர்காலத்தை அவரிடம் ஒப்புக் கொடுக்கும் முன்பு, அவர்கள் எதைப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள் (வச. 22-33).

கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு பயமும், கவலையும் அடைவதிலிருந்து விதிவிலக்குக் கிடையாது. நாம் சந்திக்க இருக்கும் அல்லது சந்திக்காத கஷ்டங்களைக் குறித்து கவலைப்படுவது, நம்மை விசுவாசத்தை சார்ந்திருப்பதிலிருந்து நம்மை விலக்கி, நமக்கும் தேவனுக்கும், பிறருக்கும் உள்ள உறவை பாதிக்கும். ஆனால், தேவன் கடந்த காலத்தில் நம்முடைய வாழ்க்கையில் உண்மையுள்ளவராக இருந்த உறுதிப்பாட்டை நம்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிசெய்வார். நேற்றும், இன்றும் நாளையும் தேவனுடைய உண்மையான தன்மையின் மேல் நாம் தைரியத்துடனும்  நம்பிக்கையுடனும் சார்ந்திருக்க ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.

தேவனில் வேர் கொள்ளுதல்

எனது சிநேகிதர்கள் ஒரு புதிய வீட்டில் குடியேறினபொழுது, அவர்களது வேலியின் அருகில் விஸ்டிரியா என்ற செடியை நட்டு வைத்தனர். லாவண்டர் செடி ஐந்து அண்டுகளுக்குப் பின்தான் பூக்க ஆரம்பிக்கும். அதற்காக அவர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். அந்தச் செடியை சுத்தம்பண்ணி, உரம் போட்டு, நீரூற்றி நன்கு கவனித்து வந்ததால், அவர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளாக அந்த செடியின் அழகான பூக்களின் அழகை ரசித்து மகிழ்ந்தார்கள். ஆனால் ஒரு முறை அவர்களது அண்டை வீட்டார் இந்தச் செடி இருந்த லேவிக்கு அருகில், அவர்களது தோட்டத்தில் களைக் கொல்லி மருந்தை பயன படுத்தினதினால், இவர்களது தோட்டத்தில் இருந்த அந்த லாவண்டர் செடி வாடிவிட்டது. அடுத்த வீட்டில் பயன்படுத்தின களைக்கொல்லியில் இருந்த விஷம் விஸ்டியா செடியின் வேர் மூலமாகச் சென்றதால், அந்தச் செடி செத்துவிட்டது என்று எனது சிநேகிதர்கள் எண்ணிவிட்டனர். ஆச்சரியப்படத்தக்கதாக, அடுத்த ஆண்டு அதே இடத்தில் இளம் விஸ்டீரியா செடியின் துளிர்கள் தோன்றின.

இவ்விதமாக தாவரங்கள் செழித்து வளர்வதையும், மடிந்து போவதையும், போல தேவனுடைய ஜனங்கள், தேவனைப் பின் பற்றும்போது செழித்தும், தேவனைபிட்டு விலகும்போது நெருக்கப்படுவதுமான நிலைமைக்கு எரேமியா தீர்க்கன் ஒப்பிடுகிறான். தேவனைப் பின் பற்றுகிறவர்களின் வேர்கள் தண்ணீரண்டைக்குச் செல்வதால் செழித்து வளர்ந்து, அதனதன் காலத்தில் கனி கொடுப்பவர்களாக இருப்பார்கள் (எரே. 17:8). ஆனால், அவர்களது சுய சித்தத்தை நம்பி, அதன் வழியில் நடப்பவர்கள். அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப் போல் இருப்பார்கள் (வச. 5-6). தேவனுடைய ஜனங்கள், ஜீவிக்கிற உண்மையான தேவனைச் சார்ந்து வாழ வேண்டும் என்றும். அவர்கள் கால்வாய் ஓரமாய் நடப்பட்ட மரங்களைப் போல இருக்க வேண்டும் என்றும் தீர்க்கதரிசி வாஞ்சித்தான் (வச. 8).

நமது பிதா திராட்சைத் தோட்டக்காரர் (யோவா. 15:1) என்பதை நாம் அறிந்திருக்கிறோம். மேலும் நாம் அவரை நம்பி அவர் மேல் நம்பிக்கையாக இருக்கலாம் (ஏரே. 17:8) என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். நமது முழு இருதயத்தோடு அவரைப் பின்பற்றி என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய கனிகளைச் கொடுப்பவர்களாக இருப்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார். 
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.  
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.  
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே! 

களைகளுக்கு நீர்ப்பாசனம்

இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள்.  
களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம். 
பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார்.  
பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).   

உறுதியும் நன்மையுமான

அந்த இளம் கேம்பஸ் அலுவலர் என்னுடைய கேள்வியைக் கண்டு கலக்கமடைந்தார். “தேவனுடைய நடத்துதலுக்கும் உதவிக்காகவும் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?” என்று நான் கேட்டதற்கு அவர் முகநாடி வேறுபட்டது. “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று பவுல் வலியுறுத்துகிறார். என் கேள்விக்கு பதிலாக, அந்த இளைஞன், “எனக்கு ஜெபத்தில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை” என்று கூறினான். “தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்கிறார் என்றும் எனக்கு தோன்றவில்லை” என்று தன் முகத்தை சுருக்கினான். அந்த இளம் அலுவலர் தன்னுடைய சுயபெலத்தில் ஒரு துறைசார்ந்த சாதனையை நிகழ்த்த முற்பட்டு தோற்றுப் போனார். ஏன்? அவர் தேவனை மறுதலித்ததால்.  
சபையின் மூலைக்கல்லாகிய கிறிஸ்து தன் சொந்த ஜனத்தினாலேயே எப்போதும் புறக்கணிக்கப்படுகிறவராய் இருக்கிறார் (யோவான் 1:11). பலர் இன்றும் அவரை நிராகரிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை, வேலைகளை, உறுதியாய் ஸ்தாபிக்கப்படாத தேவாலயங்களின் மூலமாகவும், தங்கள் சொந்த திட்டங்கள், கனவுகள் மற்றும் பிற நம்பகத்தன்மையற்ற தளங்களில் தங்களுடைய ஜீவியத்தைக் கட்டியெழுப்ப போராடுகிறார்கள். ஆனாலும், நம்முடைய நல்ல இரட்சகர் ஒருவரே நம்முடைய “பெலனும், என் கீதமுமானவர்” (சங்கீதம் 118:14). நிஜத்தில், “வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று” (வச. 22).  
நம்முடைய வாழ்க்கையின் மூலையில், அவரை விசுவாசிப்பவர்கள் எவ்விதம் வனையப்படவேண்டும் என்ற திசையை தேவன் தீர்மானிக்கிறார். எனவே அவரை நோக்கி “கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்” (வச. 25) என்று நாம் ஜெபிக்கிறோம். அதின் விளைவு? “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” (வச. 26). அவர் உறுதியான மற்றும் நல்ல தேவனாய் இருப்பதால் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.