ரூத் அவளது கதையைக் கண்ணீர் வடிக்காமல் கூற இயலாது. 80 வயதிற்கு மேற்பட்ட ரூத், அதிகமாக நடமாட்டம் ஏதும் இல்லாத நிலையில், திருச்சபையில் முக்கியமற்றவளாக இருக்கலாம். அவள் தனிமையாக வாழ்ந்து வந்ததால், அவளுக்கு அநேக மக்களோடு தொடர்பு இல்லாத நிலையில், வெளியே செல்லவோ, ஆலயத்திற்குச் செல்லவோ, அவள் பிறருடைய வாகன உதவியைச் சார்ந்திருந்தாள்.

ஆனால், அவளது இரட்சிக்கப்பட்ட வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் பொழுது, தேவனுடைய ஆச்சரியமான கிருபைக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறாள். அவள் 30 வயதுகளில் இருந்தபொழுது, அவளது சிநேகிதிகளில் ஒருவர். அவளை ஒரு இரவு கூட்டத்திற்கு வரும்படி அழைத்தாள். அப்பொழுது அவள் ஒரு போதகரின் பேச்சை கேட்கப் போவதாகத் தெரியாது. “அப்படித் தெரிந்திருந்தால், நான் போயிருக்கமாட்டேன்” என்று கூறினாள். அவள் ஏற்கனவே மதத்தைப் பற்றி அறிந்திருந்தாள். அது அவளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனாலும் அவள் அந்தக் கூட்டத்திற்குச் சென்றாள். அன்று இரவு இயேசுவைப் பற்றிய நற்செய்தியைக் கேட்டாள்.

இப்பொழுது 50 ஆண்டுகள் கழித்து, இயேசு அவளது வாழ்க்கையை மாற்றி அமைத்ததை ஆனந்தக் கண்ணீருடன் கூறுகிறாள். அன்று மாலை அவள் தேவனுடைய பிள்ளையானாள். இப்பொழுது அவள் வயது சென்றவளானலும், அவளது இரட்சிப்பின் கதை ஒருக்காலும் பழமையாகப் போனதில்லை என்றும் இளமையாகவே உள்ளது.

நமது கதை ரூத்தின் கதையைப் போல இருந்தாலும் சரி, இராவிட்டாலும் சரி அது முக்கியமல்ல ஆனால், இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து அவரது மனம், உயிர்த்தெழுலில் நம்பிக்கை வைக்கும் முதல்படியே மிக முக்கியமானது. “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோம. 10:9) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார்.

அதைத்தான் ரூத் செய்தாள். நீங்களும் அதைச் செய்யலாம். இயேசு மீட்கிறார். மாற்றுகிறார். நமக்கு புதிய ஜீவனைத் தருகிறார்.