வகை  |  odb

அதிலிருந்து உங்களை வெளியே கொண்டுவருவதற்கு அவரால் கூடும்

அனேகமாக ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் சில தருணங்களில் அவர்களுடைய சொந்த அல்லது வேறொருவரின் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். மனஅழுத்தத்தின் சில பொதுவான அடையாளங்களும் அறிகுறிகளும், நம்பிக்கையின்மை, சோர்வான மனப்பாங்கு, தகுதியற்ற நிலை மற்றும் உதவியற்ற நிலை போன்ற உணர்வுகளை உள்ளடக்கியுள்ளது. வேதாகமத்தில் உள்ள கதாபாத்திரங்கள் மனஅழுத்தத்தை அனுபவித்ததாக நாம் உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், சிலர், தனிப்பட்ட பலமிழந்த நிலை, வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் உற்சாகத்தை இழந்த நிலை ஆகியவற்றுடன் இணைந்ததான விரக்தி, உற்சாகமின்மை மற்றும் சோகம் போன்ற ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் என்று நாம் கூறலாம்.…

ஊக்குவிப்புக்காக எப்படியாவது முயற்சிப்பது

இஸ்ரவேலரின் தலைமைத்துவத்தை யோசுவா பொறுப்பேற்கவிருந்த தருணத்தில் மோசே அவரை உற்சாகப்படுத்தியதை உபாகமம் 3ல் நாம் வாசிக்கிறோம். மோசேயினுடைய இடத்தை நிரப்புமளவிற்கு தகுதியில்லை என்கிற உணர்வோடும் பயத்தோடும் யோசுவா நிரம்பி இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. எனவே, யோசுவாவை உற்சாகப்படுத்தும்படியாக கர்த்தர் மோசேயிடம் கூறினார்.

ஒரு பெரிதான புதிய சவாலுக்கு நாம் முகம் கொடுக்கும்போது நமக்குத் தூண்தல் தருவதற்கு அவ்வப்போது ஊக்கமளிக்கக்கூடிய ஒரு வார்த்தை நம் எல்லோருக்கும் தேவைப்படுகிறது. ஆனால், எமது இல்லத்திலோ அல்லது பணியிடத்திலோ எமது அன்றாட பொறுப்புக்களை நிறைவேற்றுகையில் பாராட்டும் மெச்சுதலும்கூட நமக்கு தேவைப்படுகிறது.…

ஒருபோதும் விட்டுவிடவேண்டாம்!

இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லர் இங்கிலாந்தின் மீது தனது தாக்குதலைத் தொடுத்திருந்த வேளையில், சோர்வுற்றிருந்த இங்கிலாந்து வாசிகளிடம் பேசும்படியாக வின்ஸ்டன் சேர்ச்சில் கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் எட்டு சொற்கள் அடங்கிய ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை உச்சரித்தார் (ஆங்கிலத்தில்): “ஒருபோதும் விட்டுவிடவேண்டாம்! ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும் விட்டுவிடவேண்டாம்!”

உங்களுடைய கிறிஸ்தவ வாழ்விலும் நீங்கள் ஊக்கம் இழந்துபோய்விடுகிற தருணங்கள் நேரிடலாம், ஆனால், அதற்காக ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும் நீங்கள் விட்டுவிடவேண்டாம். வேறொன்றுமே இல்லாத பட்சத்தில், பாவத்திற்கு எதிரான உங்களுடைய போராட்டம் மறுபடியும் மறுபடியுமாக தேவனிடம் திரும்பவும், உங்களுடைய மனச்சோர்வில் அவரை பற்றிக்கொள்ளவும்…

மனக்கவலைக்கான மருந்துச்சீட்டு

“வோல் ஸ்ரீட்” சஞ்சிகையின் ஒரு அறிக்கையின்படி, அமெரிக்காவில் மனஅழுத்தத்தைப் பின்தள்ளி மனக்கவலை அல்லது மனப்பதற்றமானது முன்னணி வகிக்கும் மனநல பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இன்று மனக்கவலையை எதிர்த்துப் போராடும் மருந்துகளே மருத்துவ உலகில் அதிகம் விற்பனையாகும் மருந்து தயாரிப்புகளாக காணப்படுகின்றன. பொருளாதார ஏற்றம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை இவைகளுடன், ஒரு மாத்திரையால் ஒருபோதும் போதுமான அளவு நிவாரணம் பெறமுடியாத வகையில், மனக்கவலையும் அச்சமும் நமது மனித நிலையின் ஒரு பகுதியாகவே உள்ளன.

55-ம் சங்கீதத்தை தாவீது இயற்றியபோது, இன்று நாம் எதிர்கொள்ளும் அதே வகையான சூழ்நிலைகளால்…