அனேகமாக ஒவ்வொருவரும் தமது வாழ்க்கையில் சில தருணங்களில் அவர்களுடைய சொந்த அல்லது வேறொருவரின் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். மனஅழுத்தத்தின் சில பொதுவான அடையாளங்களும் அறிகுறிகளும், நம்பிக்கையின்மை, சோர்வான மனப்பாங்கு, தகுதியற்ற நிலை மற்றும் உதவியற்ற நிலை போன்ற உணர்வுகளை உள்ளடக்கியுள்ளது. வேதாகமத்தில் உள்ள கதாபாத்திரங்கள் மனஅழுத்தத்தை அனுபவித்ததாக நாம் உறுதியாகக் கூற முடியாவிட்டாலும்இ சிலர், தனிப்பட்ட பலமிழந்த நிலை, வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் உற்சாகத்தை இழந்த நிலை ஆகியவற்றுடன் இணைந்ததான விரக்தி, உற்சாகமின்மை மற்றும் சோகம் போன்ற ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள் என்று நாம் கூறலாம்.
இந்த விளக்கத்திற்கு பொருந்தக்கூடிய ஒரு வேதாகம கதாபாத்திரம் எலியா. பாகாலின் தீர்க்கதரிசிகளைத் தோற்கடித்த பின்பு, யெசபேலிடமிருந்து அவருக்கு மரண அச்சுறுத்தல் வந்தது. அவருடைய நம்பிக்கை நொருங்கியது, விரக்தி அவரை ஆட்கொண்டது. அவர் இறந்துவிடவேண்டுமென்று விரும்பினார்! எலியாவிற்கு ஏற்பட்ட விரக்தியில் இருந்து விடுபடுவதற்கு தேவன் பல வழிகளில் உதவினார். ஆண்டவர், அவரது உணர்வுகளைக் கண்டிக்கவில்லை; மாறாக, அவரது சரீர தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு ஒரு தூதனை அனுப்பினார். பின்னர்இ கர்த்தர் தம்மை வெளிப்படுத்தி, எலியா தனது மக்களிடையே அமைதியாக பணியாற்றுவதை அவருக்கு நினைவூட்டினார். அடுத்து, அவர் எலியாவிற்கு புதிய கட்டளைகளை வழங்கியதன்மூலம் அவரது ஊழியத்தைப் புதுப்பித்தார். இறுதியாக, எலியா தனியாக இல்லை என்பதை தேவன் அவருக்கு நினைவுபடுத்தினார்.
நாம் ஊக்கம் இழந்துபோகிற தருணங்களில், தேவன் நம்மை நேசிக்கிறார் என்பதையும், தமது புதுப்பிக்கப்பட்ட தரிசனத்தின் இடத்தை நோக்கி நம்மை வழிநடத்த விரும்புகிறார் என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்!
