வகை  |  odb

உண்மையுள்ள ஊழியக்காரன்

மாடலினோ, ஒரு கட்டடம் கட்டும் தொழிலாளி திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை, கட்டடங்களின் சுவர்களைக் கட்டுவான், கூரைகளைப் பழுது பார்ப்பான் அவன் மிகவும் அமைதியானவன், நம்பிக்கைக்குரியவன், கடின உழைப்பாளி. வெள்ளிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை, மலைகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை போதிக்கச் சென்று விடுவான். மாடலினா “நகூஅட்ல்” என்ற மெக்சிகன் மொழி பேசுவான். ஆகவே அம்மலைப் பகுதியிலுள்ள மக்களுக்கு அவர்களுடைய மொழியில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை எளிதாக பகிர்ந்து கொள்வான். 70 வயதிலும் அவன் வீடுகளைக் கட்டுவதோடு, தேவனுடைய குடும்பத்தைக் கட்டும்…

கிறிஸ்மஸின் பிறப்பு

காபிரியேல் தூதன் மரியாளுக்கும், பின்பு மேய்ப்பர்களுக்கும், உலகிற்கான நற்செய்தியை அறிவித்த பொழுது (லூக்கா 1: 26-27;2:10), அந்த நற்செய்தி இந்த பதின்வயது பெண்ணிற்கு நற்செய்தியாக இருந்ததா? ஒருவேளை மரியாள், நான் கர்ப்பவதி ஆனதை என் குடும்பத்தாருக்கு எவ்விதம் அறிவிப்பேன்? எனக்கு நியமிக்கப்பட்ட யோசேப்பு திருமணத்தை நிறுத்தி விடுவாரா? எனது ஊர் மக்கள் என்ன பேசுவார்கள்? எனது ஜீவன் ஒருவேளை தப்பினாலும், ஒரு தயாயாக தனிமையாக என்னால் வாழ இயலுமா? என்று பலவாறு சிந்தித்திருப்பாள்.

மரியாள் கர்ப்பவதியானதை அறிந்த யோசேப்பு மனக்கலக்கமடைந்தான். மரியாளை திருமணம் செய்து…

கிறிஸ்மஸைப் பற்றிய செய்தி

50 ஆண்டுகளுக்கு முன்பாக “சார்லி பிரவுன் கிறிஸ்மஸ்” என்ற படம் முதல் முதலாக அமெரிக்க டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. சில வலைத்தளத்தின் இயக்குநர்கள், அப்படத்தை மக்கள் கவனிக்க மாட்டார்கள் என்று எண்ணினார்கள் வேறு சிலர் வேதாகம வசனங்கள் அப்படத்தில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளதால், பார்ப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணினார்கள். வேறு சிலர் அக்கதையை எழுதின சார்லஸ் ஸ்கல்ஸ், அதில் கிறிஸ்மஸ் கதையை தவிர்த்திருக்கலாம் என்று எண்ணினார்கள். ஆனால் ஸ்கல்ஸ் கிறிஸ்மஸ் கதை அதில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த ஒளிபரப்பு நிகழ்ச்சி மிகவும் வெற்றி அடைந்ததோடு,…

கவலையின்றி இருத்தல்

அன்றாட நாட்டு நடப்பு நிகழ்ச்சிகளைக் குறித்து நாம் அறிந்திருக்க விரும்புவது, பாதகமான விளைவுகளை உண்டு பண்ணுகிறது. ஏனெனில் நல்ல செய்திகளை விட கெட்ட செய்திகளே அதிகமாகப் பாதிக்கிறது. நம்மால் கட்டுப்படுத்த இயலாத தனி மனிதர்கள், கூட்டங்கள் அல்லது அரசாங்கம் இவைகளின் தீய செயல்பாடுகள் பற்றி மிக எளிதாக அதிகமாக கவலைப்படுகிறோம்.

சங்கீதம் 37 அனுதின செய்திகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது. அச்சங்கீதத்தை ஆரம்பிக்கும் பொழுது தாவீது “பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே” (வச.1) என்று ஆரம்பிக்கிறான். பின்பு நாம் மிகவும் அதிகமாக கவலை கொள்ளாமல்…

சந்தோஷப்பட வேண்டாத நேரம் எது?

கானாவிலுள்ள அக்கான் இன மக்கள் மத்தியில்,“பல்லியானது அதின் மேல் கல்லெறியும் பையன்கள் மேல் அதிகம் கோபப்படாமல் கல்லெறிவதால் அது மரிக்கப்போவதை நின்று பார்த்து சந்தோஷப்படும் பையன்கள் மேலேயே கோபமடைகிறது” என்ற ஒரு பழமொழி உண்டு. ஒருவரது வீழ்ச்சியைக் குறித்து மகிழ்ச்சி அடைவது, அவரது வீழ்ச்சியின் காரணமாவது போலவும், மேலும் அதிக தீமையான காரியங்கள் அவருக்கு வரவேண்டுமென்று விரும்புவதைப் போலவும் உள்ளது.

இதே தன்மையுடன்தான் “என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குறைச்சலாக்கப்படுகிற போதும், இஸ்ரவேல் தேசம் பாழாக்கப்படுகிற போதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிற போதும்” (எசேக்கியேல்…

கண்ணாடி கடற்கரை

கலிபோர்னியாவில் போர்ட்பிராஹ் என்ற இடத்தில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்து வந்தவர்கள், அவர்களது குப்பைக் கூழங்களை, ஒரு செங்குத்தான பாறைக்கு அந்தப்பக்கம் இருந்த கடற்கரையில் விட்டெறிந்து வந்தார்கள். டப்பாக்கள் பாட்டில்கள் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்கள் என மலைபோல குப்பை, அக்கடற்கரையில் சேர்க்கப்பட்டு அருவருப்பான காட்சியாகக் காணப்பட்டது. அங்கு வாழ்ந்த மக்கள் அவ்வாறு குப்பையை கடற்கரையில் தூக்கி எறிவதை நிறுத்தினபொழுதும் கூட, அந்தக் குப்பபைக் குவியல் பார்ப்பதற்கே அருவருப்பான உணர்ச்சியை கொடுக்கக் கூடியதும், எந்த வழியிலும் மறுபடியும் சரி செய்ய முடியாது போன்றும் காணப்பட்டது.…

ஒரு பெயரின் அர்த்தம்

நியுயோர்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரையின்படி ஆப்பிரிக்காவிலுள்ள அநேக ஊர்களில் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்களால் விஷேசமானது என்று கருதப்பட்ட, வருகைதந்த புகழ்பெற்றவரின் பெயர், சிறப்பான நிகழ்ச்சி அல்லது சூழ்நிலைகள், இவற்றை குறித்த பெயர்களே சூட்டப்பட்டன. உதாரணமாக ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்ட பொழுது மருத்துவர் அந்த குழந்தையின் பெற்றோரிடம் அக்குழந்தையின் சுகவீனத்தை அவர்களால் சுகப்படுத்த இயலாது என்றும் அக்குழந்தை பிழைக்குமா பிழைக்காதா என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று மருத்துவர் கூறின பொழுது, அந்த பெற்றோர் அந்த குழந்தைக்கு “கடவுளுக்குத்தான் தெரியும்” (God knows)…

பரலோகக் குறிப்பேடு

கென்யா விமான நிலையத்தில் வருகையைப் பதிவு செய்யும் இடத்தில், நான் எனது கடவுச் சீட்டை (பாஸ்போட்டை) சரிபார்ப்பதற்காகக் கொடுத்தேன். அதற்கான பணியாளர், அவர்களது செயல்குறிப்பேட்டில் விமானப் பயணிகளின் அட்டவணையில் எனது பெயர் உள்ளதா என்று தேடிப்பார்த்துபொழுது, அதில் என் பெயர் இல்லை, பிரச்சனை என்ன? அதிகமான அளவு டிக்கெட் பதிவும் இருக்கைகளுக்கான உறுதி செயல்பாட்டிலுள்ள குறைபாடுகள் தான் காரணம். அன்று நான் எனது வீட்டிற்குப் போய் சேர வேண்டும் என்ற நம்பிக்கை தகர்க்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சி வேறு ஒரு வகையான செயல் குறிப்பேட்டை எனக்கு…

மனச் சோர்வான நிலை

C.S.லூயிசும் அவரது முத்த சகோதரன் வாரன் என்ற வார்ணியும், வின்யாடு என்ற இடத்திலுள்ள ஆங்கிலேய போர்டிங் பள்ளியில் பல ஆண்டுகளாக மிகவும் கஷ்டத்துடன் படித்து வந்தனர். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அங்குள்ள அனைவருடைய வாழ்க்கையையும், தாங்க முடியாத துன்பத்திற்குள்ளாக்கக்கூடிய கொடுமையானவர். பல ஆண்டுகள் கழித்து மந்த அறிவுடையவன் என்று குறைவாக மதிக்கப்பட்ட வார்ணி கீழ்க்கண்ட குறிப்பை எழுதியுள்ளான். “இப்பொழுது எனது வயது 64க்கு மேலாகிறது. வாழ்க்கையின் எந்த நிலையிலும் வின்யாடில் இருந்ததை விட நல்ல நிலையில் உள்ளேன் என்று நினைவு கூராத நேரமே…