காபிரியேல் தூதன் மரியாளுக்கும், பின்பு மேய்ப்பர்களுக்கும், உலகிற்கான நற்செய்தியை அறிவித்த பொழுது (லூக்கா 1: 26-27;2:10), அந்த நற்செய்தி இந்த பதின்வயது பெண்ணிற்கு நற்செய்தியாக இருந்ததா? ஒருவேளை மரியாள், நான் கர்ப்பவதி ஆனதை என் குடும்பத்தாருக்கு எவ்விதம் அறிவிப்பேன்? எனக்கு நியமிக்கப்பட்ட யோசேப்பு திருமணத்தை நிறுத்தி விடுவாரா? எனது ஊர் மக்கள் என்ன பேசுவார்கள்? எனது ஜீவன் ஒருவேளை தப்பினாலும், ஒரு தயாயாக தனிமையாக என்னால் வாழ இயலுமா? என்று பலவாறு சிந்தித்திருப்பாள்.

மரியாள் கர்ப்பவதியானதை அறிந்த யோசேப்பு மனக்கலக்கமடைந்தான். மரியாளை திருமணம் செய்து கொள்வது, வெளிப்படையாக அவளைத் தள்ளி விட்டு வெட்கப்படுத்துவது அல்லது இரகசியமாக நிச்சயத்தை முறிப்பது என்ற மூன்று தேர்வுகள் அவனுக்கு முன்பு இருந்தன. யோசேப்பு மூன்றாவதை தேர்ந்தெடுத்தான். ஆனால் தேவன் சொப்பனத்தில் இடைபட்டார்.

“உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.” (மத்தேயு 1: 20) என்று கூறினார்.

மரியாளுக்கும், யோசேப்புக்கும் அவர்களுக்கு முன் இருந்த மிகவும் அழுத்தமான உணர்வு சம்பந்தமான சவால்கள் மத்தியில், அவர்கள் இருவரும் முழுவதுமாக அவர்களை தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதிலிருந்து கிறிஸ்மஸ் ஆரம்பமாகிறது. அவர்கள் இருவரும் முற்றிலுமாக தேவனுக்கு அவர்களை ஒப்புக்கொடுத்தார்கள். அப்படிச் செய்வதின் மூலம் “அவருடைய வசனத்தைக் கைக் கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்” என்று 1 யோவான் 2: 5ல் கூறப்பட்டுள்ள தேவனுடைய வாக்குத்தத்தத்தை செயல்படுத்திக் காண்பித்தார்கள்.

தேவனோடு கூட நாம் நடக்கும் பொழுது, இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் தேவனுடைய அன்பு நம் உள்ளங்களை நிரப்பட்டும்.