அவருடைய அனைத்து நன்மைகள்
நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் திரும்ப நாம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை என்னவெனில், நம்மிடம் என்ன உள்ளது என்பதை மறந்து, அந்த கணத்தில் நம்மிடம் என்ன இல்லை என்பதையே நாம் நோக்கி கொண்டிருக்கிறோம். எங்கள் சபையில், “என் ஆத்துமாவே…” என்று சங்கீதம் 103ல் இருந்து பாடகர் குழுவினர் பாடிய பொழுது இதை நினைவு கூர்ந்தேன். தேவன் நம்மை மன்னிக்கிறவர், சுகப்படுத்துகிறவர், மீட்கின்றவர், தேவைகளைச் சந்திப்பவர், திருப்தி அளிப்பவர், புதுப்பிப்பவர் (வசனங்கள் 4-5), இதை எப்படி நாம் மறக்கக் கூடும்? ஆயினும் நம் அன்றாட வாழ்வின் முக்கிய…
அவர் பதிலளிப்பார்
என்னுடைய அபிமான கொரிய சினிமா நட்சத்திரத்தின் ட்விட்டர் பக்கத்திற்கு வந்த பொழுது பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு குறிப்பு எழுத முடிவு செய்தேன் என்னால் இயன்ற அளவு ஒரு சிறப்பான செய்தியை பதிவு செய்து பதிலுக்காக காத்திருந்தேன். நான் ஒரு பதிலைப் பெறுவேன் என்பது சாத்தியமற்றது என்று எனக்குத் தெரியும். ஏனெனில், அவரைப் போன்ற பிரபலமான ஒரு நடிகைக்கு ஒரு நாளில் அநேக ரசிகர்களிடமிருந்து செய்தி வரும் என்று தெரியும். இருப்பினும், எனக்குப் பதில் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.
நல்லவேளை,…
இவ்வாண்டாய் இருக்கக் கூடும்
என்னுடைய தகப்பனார் ஒரு போதகர் ஒவ்வொரு புதிய ஆண்டின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையிலும் இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்து அநேகத் தரம் ஒன்று தெசலோனிக்கேயர் நான்காம் அதிகாரத்திலிருந்து பிரசங்கிப்பார். “இயேசு கிறிஸ்துவின் வருகை இந்த ஆண்டில் இருக்கக் கூடும், அவரைச் சந்திக்க ஆயத்தமா” என்பதே அவருடைய போதனையின் மையக் கருத்தாய் இருக்கும். நான் ஆறு வயது சிறுவனாய், இந்த பிரசங்கத்தைக் கேட்ட பொழுது, இது உண்மையானால் அவரைச் சந்திக்கும் கூட்டத்தில் நான் இருப்பேன் என்ற நிச்சயம் எனக்குள் இல்லை என்று நினைத்ததை என்னால் மறக்க…
தொடர்ச்சியாக பறந்து செல்வது
ஆலன் டெனன்ட் எழுதியுள்ள இறக்கையின் மேல் என்ற புத்தகத்தில், பிற பறவைகளைக் கொன்று தின்னும் இராஜாளி என்ற கழுகினம் இடம் பெயர்ந்து செல்லும் முறையைத் தொடர் பதிவு செய்வதற்காக, அவர் செய்த முயற்சிகளைப் பற்றி அவர் எழுதியுள்ளார். அழகு, வேகம், செயல்படும் திறனுடைய அப்பறவைகள், முற்காலத்தில் அரசர்கள், பிரபுக்கள் இவர்களுடைய வேட்டைத் தோழனாக பயன்படுத்தப்பட்டன. ஆனால் 1950களில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்ட D.D.T என்ற பூச்சிக் கொல்லி மருந்தினால், அவைகளின் இனப்பெருக்கத்திறன் பாதிக்கபட்டதால், அவை வெகுவேகமாக அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அழிந்து…
இளைப்பாற ஓர் அழைப்பு
ஒரு மருத்துவமனையில் அவசரகால மருத்துவ வார்டில் சேர்க்கப்பட்டிருந்த எனது சிநேகிதனின் படுக்கையண்டையில் நான் நின்று கொண்டிருந்த பொழுது, அங்கிருந்த மற்ற நோயாளிகளின் வேதனைக் குரல் என்னை அசைத்தது. என் நண்பனுக்காகவும் மற்ற நோயாளிகளுக்காகவும் நான் ஜெபித்த பொழுது, இந்த பூமியில் நமது வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதை உணர்ந்தேன். பின்பு ஜிம் ரீவ்ஸ் அவர்களால் பாடப்பட்டுள்ள இந்த உலகம் நமக்கு சொந்தமான வீடல்ல “நாம் அதன் வழியாக கடந்து செல்கிறவர்களாக இருக்கிறோம்” என்ற ஒரு நாட்டுப்புறப் பாடலை நினைவு கூர்ந்தேன்.
நமது உலகம் வேதனை,…
ஆர்வம் இல்லாமையை தவிர்த்தல்
நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட வேலைகளை முடிக்க அழகிய சேலைகளைக் கட்டிய பெண்கள், அங்கும் இங்கும் வேகமாக சென்று கொண்டிருந்ததால், அந்த அறை முழுவதும் மனதை ஈர்க்கக் கூடிய பலவர்ண நிறங்களால் நிறைந்திருந்தது. இந்தப் பெண்கள் முன்பு இந்தியாவில் வாழ்ந்தவர்கள். இப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்கிறார்கள். ஆயினும் அவர்களது சொந்த நாட்டைப் பற்றிய கரிசனையுடன் இருந்தார்கள். இந்தியாவில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கான ஒரு கிறிஸ்தவ பள்ளியின் பொருளாதாரத் தேவையைப்பற்றி கேள்விப்பட்டதோடு நின்று விடாமல், அப்பள்ளியின் தேவையைச் சந்திக்க முழு மனதோடு செயல் பட்டார்கள்.…
அடைக்கலமான இடம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில், வேன்கூவர் நகரத்தில் வாழ்ந்து வந்த வீடற்ற மக்களுக்கு ராத்தங்க ஒரு புது வித தூங்கும் இடம் கிடைத்தது. உள்ளுரிலிருந்த ரெயின் சிட்டி ஹவுசிங் என்ற சேவை நிறுவனம் தற்காலிக தங்கும் இடமாக மாற்றப்படுவதற்கான சிறப்புத் தன்மைகள் கொண்ட பெஞ்சுகளை உண்டாக்கினது. அந்த பெஞ்சுகளில் சாய்ந்து கொள்ள பயன்படும் பின் பகுதி காற்று, மழையிலிருந்து ஒரு மனிதனை பாதுகாக்கும் முறையில் ஒரு உறைபோல இழுக்கப்படக் கூடியதாக இருந்தது. இரவு நேரங்களில் தூங்கக் கூடிய இந்த இடங்களை எளிதாகக் கண்டு கொள்ளத்தக்கதாக “இது ஒரு…
வைரத்துகள்கள்
மிச்சிகனில் நாங்கள் வாழ்ந்து வந்த பகுதியில் மிகவும் கடுமையான பனிக்காலமாக இருந்தது. காலநிலையைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பனி பெய்த அந்தக் குளிர்காலம் மார்ச்சு மாதம் வரை நீடித்த பொழுது, பனியைக் குறித்த ஆசையை அநேகர் இழந்து விட்டுத் தொடர்ந்து குறைந்த வெப்ப நிலையே நீடிக்கும் என்ற வானிலை அறிக்கையைக் குறித்து வருத்தமடைந்தார்கள்.
ஆயினும் மிகவும் கவர்ச்சிகரமான பனித்துகளின் அழகு தொடர்ந்து எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்து வந்தது. என்னுடைய வாகனத்தின் ஓடு தளத்திலிருந்து பனி வாரியின் மூலம் அதிகமான பனியை அள்ளி எனக்குப்…
கிறிஸ்மஸ் தியாகம்
ஓ.ஹென்ரியின் புகழ்பெற்ற “மேகியின் பரிசு” என்ற கதை பொருளாதார நிலையில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜிம், டெல்லா என்ற இளம் தம்பதியரைப்பற்றி கூறுகிறது. கிறிஸ்மஸ் நாட்கள் நெருங்கின பொழுது, ஒருவருக்கொருவர் சிறப்பான பரிசு கொடுக்க வேண்டுமென்று விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் பண வசதி இல்லாததினால் எதிர்பாராத கடுமையான முடிவுக்கு வந்தார்கள். ஜிம்மிடம் இருந்தது அவனுக்கு மிகவும் பிடித்தமான தங்கக் கைக் கடிகாரம் மட்டும் தான். டெல்லாவிட மிருந்தது அவளுடைய நீண்ட, அழகான கூந்தல் மட்டும் தான். ஆகவே ஜிம் டெல்லாவின் கூந்தலை அழகுபடுத்துவதற்காக, அவனது…