என்னுடைய தகப்பனார் ஒரு போதகர் ஒவ்வொரு புதிய ஆண்டின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையிலும் இயேசு கிறிஸ்துவின் வருகையை குறித்து அநேகத் தரம் ஒன்று தெசலோனிக்கேயர் நான்காம் அதிகாரத்திலிருந்து பிரசங்கிப்பார். “இயேசு கிறிஸ்துவின் வருகை இந்த ஆண்டில் இருக்கக் கூடும், அவரைச் சந்திக்க ஆயத்தமா” என்பதே அவருடைய போதனையின் மையக் கருத்தாய் இருக்கும். நான் ஆறு வயது சிறுவனாய், இந்த பிரசங்கத்தைக் கேட்ட பொழுது, இது உண்மையானால் அவரைச் சந்திக்கும் கூட்டத்தில் நான் இருப்பேன் என்ற நிச்சயம் எனக்குள் இல்லை என்று நினைத்ததை என்னால் மறக்க முடியாது. நிச்சயமாக என்னுடைய பெற்றோர்கள் பரலோகம் செல்வார்கள் என்று உணர்ந்திரிந்தேன் அவர்களோடு நானும் செல்ல விரும்பினேன். வீட்டிற்கு திரும்பிய என் தகப்பனாரிடம் பரலோகத்திற்கு செல்லும் நிச்சயத்தை குறித்து கேட்டேன். அவர் வேதத்தைத் திறந்து, சில வசனங்களை வாசித்து, எனக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதைப் விளக்கினார். என் பாவத்தை குறித்து உணர்த்த அதிக பிரயாசம் தேவைப்படவில்லை. அன்று என்னுடைய தகப்பனார் கிறிஸ்துவண்டை என்னை வழிநடத்தினார். என்னுடைய இருதயத்தில் இந்த சத்தியங்களை விதைத்த அவருக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்து கொண்டிருக்கும் உலகத்தில், இயேசு கிறிஸ்துவின் வருகை இந்த ஆண்டு இருக்கக் கூடும் என்பது எத்தனை நம்பிக்கைக்குரிய எண்ணமாய் இருக்கிறது. மேலும் அவரை விசுவாசிக்கிறவர்கள் இவ்வுலக துயரங்கள், துன்பங்கள், பயங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு அழைத்துக் கொள்ளப்படுவார்கள் என்பது அதிகமாய் ஆறுதல் அளிக்க கூடியதாய் இருக்கின்றது. இதைக் காட்டிலும் சிறந்தது, நித்தியத்திற்கும் நாம் தேவனோடு கூட இருப்போம் என்பதே.