
நன்கு அளக்கப் பட்டது
ஸ்டெல்லா, ஒரு நாள், ஒரு பெட்ரோல் நிரப்பும் மையத்தில் ஒரு பெண்ணைச் சந்திக்கின்றாள், அவள் தன்னுடைய வீட்டில் வங்கி அட்டையை விட்டு விட்டு வந்திருந்தாள். தன்னுடைய குழந்தையோடு, தனித்து விடப்பட்டவளாய், அங்கு வருபவர்களிடம் உதவி கேட்டாள். அந்நேரத்தில் வேலையில் இல்லாதிருந்தும், ஸ்டெல்லா அவளுக்கு ரூபாய் 500 செலவளித்தாள், அறிமுகமில்லாத அப்பெண்ணுடைய வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப உதவினாள். அநேக நாட்களுக்குப் பின், அவள் வீட்டிற்குத் திரும்பிய போது, ஒரு பரிசுக் கூடையில் சிறுவருக்கான விளையாட்டுப் பொருட்களும், மற்றும் சில பொருட்களும் அவளுடைய வீட்டின் தாள்வாரத்தில் காத்திருந்தது. அந்த அறியாத நபரின் நண்பர்கள், ஸ்டெல்லாவின் இரக்கத்தை, மறக்கமுடியாத கிறிஸ்மஸ் பரிசுகளின் மூலம், அவளுடைய 500 ரூபாயை ஆசிர்வாதமாக மாற்றியுள்ளனர்.
இருதயத்தை மகிழ்விக்கும் இந்த கதை, இயேசு கூறிய, “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப் படும்” (லூக். 6:38) என்ற வார்த்தைகளை நினைவு படுத்துகின்றது.
இதைக் கேட்கும் போது, நமக்கும் கொடுக்கும் போது என்ன கிடைக்கும் என்பதில் கவனம் செலுத்த தோன்றும், ஆனால் அப்படிச் செய்யும் போது, நாம் கொடுத்தலின் உண்மையை இழந்து விடுவோம். இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்கு முன்பு, “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாய் இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே” (வ.35) என்று கூறியுள்ளார்.
நாம் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கொடுப்பதில்லை; நாம் கொடுக்கின்றோம், ஏனெனில், தேவன் நம்முடைய தாராள ஈகையில் பிரியமாயிருக்கின்றார். நாம் பிறர்மேல் செலுத்தும் அன்பு, தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைக் காட்டுகின்றது.

ஏன் என்னை?
வித்தியாசமானவைகளைப் பற்றிக் கூறும் புத்தகத்தில், பத்து லட்சம் மக்களுக்கு ஒருவர் மின்னலால் தாக்கப் படுகின்றனர் என்றும், 25,000 பேருக்கு ஒருவர், தாங்கமுடியாத அதிர்ச்சி அல்லது இழப்பின் காரணமாக ஏற்படும் “உடைக்கப் பட்ட இருதயம்” என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படும் நோயால் பாதிக்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வித்தியாசமான பிரச்சனைகளால் ஏற்படும் அ நுபவங்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதப் பட்டுள்ளன. ஆனால் இதில் சம்பந்தப்பட்டவர் நாமாக இருந்தால், அதற்கான தீர்வு என்ன என்பதை குறித்து எதுவும் எழுதப் படவில்லை.
யோபு வித்தியாசமான யாவற்றிற்கும் சவாலாக காணப்படுகின்றான். தேவன் அவனைக் குறித்து, “உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை” (யோபு 1:8) என்றார். ஆனாலும் தொடர்ச்சியான, சவாலான இழப்புகளைச் சந்திக்கும்படி, யோபு தெரிந்து கொள்ளப் பட்டான் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களிலும், யோபுவுக்கு பதிலைத் தெரிந்து கொள்ளும்படி கெஞ்சிக் கேட்பதற்கு காரணமிருக்கின்றது. “ஏன் என்னை” என்று புரிந்து கொள்ள முடியாமல், அவல நிலையில் போராடுவதை யோபு புத்தகத்தில் அதிகாரம், அதிகாரமாகக் காண்கின்றோம்.
சொல்ல முடியாத வேதனையும், தீமையும் நம்மைத்தாக்கும் போது, எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதற்கான வழியை, யோபின் கதை நமக்கு காட்டுகின்றது. தேவன், நற்குணத்திற்கும், இரக்கத்திற்கும் (அதி.25) மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகக் கூறும் ஒருவருடைய கஷ்டங்களையும் குழப்பங்களையும் விளக்கும் போது, விதைப்பையும் அறுப்பையும் (4:7-8) குறித்து நாம் கருதுகின்ற மாற்றமுடியாத சட்டத்திற்கும் ஒரு மாற்றுக் கருத்து இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம். சாத்தான் கொண்டு வருகின்ற குழப்பங்களுக்கெல்லாம் பின்கதையைத் தெரிந்து கொண்ட பின்பு (அதி.1), அதற்கு தேவன் தரும் பதிலையும் தெரிந்து கொண்ட பின்னர் (42:7-17), தேவன் ஒரு நாள் தன்னுடைய குமாரனை நம்முடைய பாவங்களை சுமக்கும்படி செய்வார் என்பதையும் தெரிந்து கொள்ளச் செய்கின்றார். யோபுவின் கதை, நமக்கு காண்பவைகளையல்ல, காணாதவற்றை விசுவாசித்து வாழும்படி கற்றுக் கொடுக்கின்றது.

தேனைக் காட்டிலும் இனிமையானது
அவருடைய பேச்சின் தலைப்பு இன அழுத்தம். ஆயினும் அவர் அமைதியாகவும், தன் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டும் இருந்தார். மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்பாக, மேடையில் நின்றவராய் தைரியமாகப் பேசினார், தாழ்மையோடும், கிருபையும் இரக்கமும் நிறை ந்த வார்த்தைகளை நகைச் சுவையோடும் பேசினார். இறுக்கத்தில் இருந்த கூட்டத்தினர் தளர்ச்சியடைந்ததைக் காணமுடிந்தது. விவாதத்திற்கு உரிய இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று குழப்பத்தில் இருந்த மக்கள், பேச்சாளரோடு சேர்ந்து சிரித்தனர், தங்களின் உணர்வுகளையும், வார்த்தைகளையும் அமைதிப் படுத்தினர். விரும்பத்தகாத ஒரு தலைப்பையும் எப்படி சமாளிப்பது என்பதைச் செயலில் காட்டினார்.
சாலமோன் ராஜாவும் இத்தகைய ஒரு அணுகு முறையையே ஆலோசனையாகத் தருகின்றார். “இனிய சொற்கள் தேன்கூடு போல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்” (நீதி. 16:24) என்கின்றார். மேலும், “ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவை ஊட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்” என்றும் கூறுகின்றார் (வ.23).
சாலமோனைப் போன்ற ஒரு வல்லமையுள்ள அரசன், ஏன், எவ்வாறு பேசவேண்டும் என்பதை கூறத் தன் நேரத்தைச் செலவளிக்க வேண்டும்? ஏனெனில் வார்த்தை கொல்லக் கூடியது. மேலும் சாலமோன் அரசனின் காலத்தில், தங்களின் தேசத்தைப் பற்றிய செய்தியைத் தெரிந்து கொள்ள, அரசன் செய்தியாளர்களையே சார்ந்திருக்க வேண்டியதாய் இருந்தது, ஆதலால், அமைதியும், நம்பகத்தன்மையும் உள்ள செய்தியாளர்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. அவர்கள் விவேகமும் ஞானமும் நிறைந்த வார்த்கைகளை உபயோகித்தனர், எத்தகைய காரியமாக இருந்தாலும் அதிக அலட்டலும், கடுமையான வார்த்தைகளும் அவர்களிடம் காணப்படவில்லை.
நம்முடைய கருத்துக்கள் கருணையோடும், நமது சிந்தனைகள் தேவனோடு இசைந்ததாகவும் விவேகமும், இனிமையும் நிறைந்ததாகவும் இருப்பின், அது நமக்கு நன்மையே பயக்கும். இதனையே சாலமோன் “மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்திரம் கர்த்தரால் வரும்” என்பதாகக் கூறுகின்றார் (வச. 1).

நினைவு கூர்ந்து
ஒரு நினைவு நாள் அன்று, இராணுவத்தில் பணிபுரிந்த அநேகரை நினைவுகூர் ந்தேன், அதில் என்னுடைய தந்தையும் மாமாவும் அடங்குவர். இவர்கள் இரண்டாம் உலகப் போரின் போது, இராணுவத்தில் சேவை புரிந்தார்கள். இவர்கள் வீட்டிற்குத் திரும்பியவர்கள். ஆனால் இந்த யுத்தத்தில், தங்களின் தேசத்திற்காக, ஆயிரக் கணக்கானோர் தங்கள் அன்பிற்குரியவர்களைப் பரிதாபமாக இழந்தனர். என்னுடைய தந்தையும், அந்த நாட்களில் இருந்த அநேக இராணுவ வீரர்களும், தாங்கள் நேசிப்பவர்களைப் பாதுகாக்கவும், தாங்கள் சரியென நினைக்கும் காரியத்தில் உறுதியாக நிற்பதற்காகவும் தங்கள் உயிரையும் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.
தங்களின் நாட்டைப் பாதுகாப்பதற்காக யாரேனும் மரித்தால், அவருடைய தியாகத்தைக் கனப்படுத்துபடி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை” (யோவான்15:13) என்ற வாசகம், அவருடைய அடக்க ஆராதனையின் போது வாசிக்கப் படும். ஆனால் இந்த வாசகத்தின் பின்னணி என்ன?
இயேசு மரிப்பதற்கு முன்பாக, கடைசி இராப் போஜனத்தின் போது, தன்னுடைய சீஷர்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறினார். இவர்கள் ஒரு சிறிய கூட்டமான சீஷர்கள், அதிலும் யூதாஸ், நம்பிக்கை துரோகம் செய்யும் படி, அவ்விடத்தை விட்டு வெளியேறிவிட்டான் (13:18-30). எல்லாவற்றையும் தேவன் அறிவார், ஆயினும், தன் நண்பர்களுக்காகவும், துரோகிகளுக்காகவும் கிறிஸ்து தன்னுடைய ஜீவனை தியாகம் பண்ணும்படி தெரிந்து கொண்டார்.
இன்னும் அவருக்கு எதிரிகளாக இருக்கின்றவர்களும் (ரோமர் 5:10), ஒரு நாள் அவர் பேரில் விசுவாசம் வைப்பார்கள், என்பதால் அவர்களுக்காகவும் மனப்பூர்வமாக தன் ஜீவனைக் கொடுக்க ஆயத்தமாக இருந்தார். அதற்குப் பதிலாக, அவர் எல்லாரையும் நேசித்தது போல “ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள்” என்று அவர் தன் சீஷர்களிடம் (அப்பொழுதும், இப்பொழுதும்) கேட்கின்றார் (யோவா.15:12). அவருடைய மிகப் பெரிய அன்பு, நம்மையும் நம்முடைய நண்பர்களையும், எதிரிகளையும், தியாகத்தோடு அன்பு கூர கட்டாயப் படுத்துகின்றது.
