அவருடைய பேச்சின் தலைப்பு இன அழுத்தம். ஆயினும் அவர் அமைதியாகவும், தன் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டும் இருந்தார். மிகப் பெரிய கூட்டத்திற்கு முன்பாக, மேடையில் நின்றவராய் தைரியமாகப் பேசினார், தாழ்மையோடும், கிருபையும் இரக்கமும் நிறை    ந்த வார்த்தைகளை நகைச் சுவையோடும் பேசினார். இறுக்கத்தில் இருந்த கூட்டத்தினர் தளர்ச்சியடைந்ததைக் காணமுடிந்தது. விவாதத்திற்கு உரிய இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று குழப்பத்தில் இருந்த மக்கள், பேச்சாளரோடு சேர்ந்து சிரித்தனர், தங்களின் உணர்வுகளையும், வார்த்தைகளையும் அமைதிப் படுத்தினர். விரும்பத்தகாத ஒரு தலைப்பையும் எப்படி சமாளிப்பது என்பதைச் செயலில் காட்டினார்.

சாலமோன் ராஜாவும் இத்தகைய ஒரு அணுகு முறையையே ஆலோசனையாகத் தருகின்றார். “இனிய சொற்கள் தேன்கூடு போல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்” (நீதி. 16:24) என்கின்றார். மேலும், “ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவை ஊட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்” என்றும் கூறுகின்றார் (வ.23).

சாலமோனைப் போன்ற ஒரு வல்லமையுள்ள அரசன், ஏன், எவ்வாறு பேசவேண்டும் என்பதை கூறத் தன் நேரத்தைச் செலவளிக்க வேண்டும்? ஏனெனில் வார்த்தை கொல்லக் கூடியது. மேலும் சாலமோன் அரசனின் காலத்தில், தங்களின் தேசத்தைப் பற்றிய செய்தியைத் தெரிந்து கொள்ள, அரசன் செய்தியாளர்களையே சார்ந்திருக்க வேண்டியதாய் இருந்தது, ஆதலால், அமைதியும், நம்பகத்தன்மையும் உள்ள செய்தியாளர்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. அவர்கள் விவேகமும் ஞானமும் நிறைந்த வார்த்கைகளை  உபயோகித்தனர், எத்தகைய காரியமாக இருந்தாலும் அதிக அலட்டலும், கடுமையான வார்த்தைகளும் அவர்களிடம் காணப்படவில்லை.

நம்முடைய கருத்துக்கள் கருணையோடும், நமது சிந்தனைகள் தேவனோடு இசைந்ததாகவும் விவேகமும், இனிமையும் நிறைந்ததாகவும் இருப்பின், அது நமக்கு நன்மையே பயக்கும். இதனையே சாலமோன் “மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்திரம் கர்த்தரால் வரும்” என்பதாகக் கூறுகின்றார் (வச. 1).