வித்தியாசமானவைகளைப் பற்றிக் கூறும் புத்தகத்தில், பத்து லட்சம் மக்களுக்கு ஒருவர் மின்னலால் தாக்கப் படுகின்றனர் என்றும், 25,000 பேருக்கு ஒருவர், தாங்கமுடியாத அதிர்ச்சி அல்லது இழப்பின் காரணமாக ஏற்படும் “உடைக்கப் பட்ட இருதயம்” என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படும் நோயால் பாதிக்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் வித்தியாசமான பிரச்சனைகளால் ஏற்படும் அ     நுபவங்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதப் பட்டுள்ளன. ஆனால் இதில் சம்பந்தப்பட்டவர் நாமாக இருந்தால், அதற்கான தீர்வு என்ன என்பதை குறித்து எதுவும் எழுதப் படவில்லை.

யோபு வித்தியாசமான யாவற்றிற்கும் சவாலாக காணப்படுகின்றான். தேவன் அவனைக் குறித்து, “உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லை” (யோபு 1:8) என்றார். ஆனாலும் தொடர்ச்சியான, சவாலான இழப்புகளைச் சந்திக்கும்படி, யோபு தெரிந்து கொள்ளப் பட்டான் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களிலும், யோபுவுக்கு பதிலைத் தெரிந்து கொள்ளும்படி கெஞ்சிக் கேட்பதற்கு காரணமிருக்கின்றது. “ஏன் என்னை” என்று புரிந்து கொள்ள முடியாமல், அவல நிலையில் போராடுவதை யோபு புத்தகத்தில் அதிகாரம், அதிகாரமாகக் காண்கின்றோம்.

சொல்ல முடியாத வேதனையும், தீமையும் நம்மைத்தாக்கும் போது, எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதற்கான வழியை, யோபின் கதை நமக்கு காட்டுகின்றது. தேவன், நற்குணத்திற்கும், இரக்கத்திற்கும் (அதி.25) மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகக் கூறும் ஒருவருடைய கஷ்டங்களையும் குழப்பங்களையும் விளக்கும் போது, விதைப்பையும் அறுப்பையும் (4:7-8) குறித்து நாம் கருதுகின்ற மாற்றமுடியாத சட்டத்திற்கும் ஒரு மாற்றுக் கருத்து இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம். சாத்தான் கொண்டு வருகின்ற குழப்பங்களுக்கெல்லாம் பின்கதையைத் தெரிந்து கொண்ட பின்பு (அதி.1), அதற்கு தேவன் தரும் பதிலையும் தெரிந்து கொண்ட பின்னர் (42:7-17), தேவன் ஒரு நாள் தன்னுடைய குமாரனை நம்முடைய பாவங்களை சுமக்கும்படி செய்வார் என்பதையும் தெரிந்து கொள்ளச் செய்கின்றார். யோபுவின் கதை, நமக்கு காண்பவைகளையல்ல, காணாதவற்றை விசுவாசித்து வாழும்படி கற்றுக் கொடுக்கின்றது.