தேவனிடம் முறையிடுவது
ஒரு நாள் காலையில், குடும்ப ஜெபம் ஒரு ஆச்சர்யமான அறிவிப்புடன் முடிவடைந்தது. “ஆமென்” என்று அப்பா சொன்னவுடனேயே ஐந்து வயது கவி, “நான் யோவானுக்கு ஜெபம் செய்தேன். ஏனென்றால் ஜெபத்தின் போது அவன் கண்களைத் திறந்திருந்த்தான் என்று அறிவித்தாள்.
வேதம் பரிந்துபேசும் ஜெபத்திற்கு நம்மை அழைப்பது, உங்கள் பத்து வயது சகோதரரின் பிரார்த்தனை நெறிமுறைக்காக ஜெபிப்பதை மனதில் வைத்து கொண்டு அல்ல என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஆனால் மற்றவர்களுக்காக நாம் ஜெபிக்க முடியும் என்பதையாவது கவி உணர்ந்தாள்.
வேறொருவருக்காக ஜெபிப்பதன் முக்கியத்துவத்தை வேதாகம ஆசிரியர் ஓஸ்வால்ட் சேம்பர்ஸ் வலியுறுத்துகிறார். “பரிந்துபேசுதல் என்பது உங்களை தேவனின் இடத்தில் வைக்கிறது; அது அவருடைய மனதையும், கண்ணோட்டத்தையும் கொண்டுள்ளது” என்று அவர் சொன்னார். தேவனைப் பற்றியும், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றியும் நமக்குத் தெரிந்தவற்றின் வெளிச்சத்தில் மற்றவர்களுக்காக ஜெபிப்பது இது.
பரிந்துபேசும் ஜெபத்திற்கு தானியேல் 9 ல், ஒரு சிறந்த உதாரணத்தைக் காண்கிறோம். யூதர்கள் பாபிலோனில் எழுபது ஆண்டுகள் சிறைபிடிக்கப்படுவார்கள் என்ற தேவனின் வேதனையான வாக்குத்தத்ததை தீர்க்கதரிசி புரிந்துகொண்டார் (எரேமியா 25:11-12). அந்த ஆண்டுகள் தங்களுடைய நிறைவை நெருங்குவதை உணர்ந்த தானியேல் ஜெப சிந்தைக்குள் சென்றான். அவன் தேவனுடைய கட்டளைகளை குறிப்பிட்டான் (தானியேல் 9:4-6). தன்னை தாழ்த்தினான் (வ 8). அவன் தேவனுடைய தன்மையை கனம்பண்ணினான் (வ 9). பாவத்தை அறிக்கையிட்டான் (வ 15). அவன் தன் ஜனங்களுக்காக ஜெபித்தபோது அவருடைய இரக்கத்தை சார்ந்துக்கொண்டான் (வ 18) தேவனிடமிருந்து உடனடியாக பதிலைப் பெற்று கொண்டான் (வ 21).
எல்லா ஜெபங்களும் அத்தகைய வியத்தகு பதிலுடன் முடிவடையாது. ஆனால் நம்பிக்கை மற்றும் பற்றோடு மற்றவர்களின் சார்பாக தேவனிடம் செல்லலாம் என்று நம்புங்கள்.

உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும்
பல வருடங்களுக்கு முன் நானும் என் மகன் ஜோஷும் ஒரு மலைப்பாதையில் மேலே ஏறினபோது, ஒரு புழுதிபுயல் காற்றில் மேலே வருவதை கண்டோம். நாங்கள் முன்னேறி சென்றுகொண்டிருந்தபோது ஒரு மிருகம் தூசியின் மத்தியில் ஒரு பதுங்கு குழியை தோண்டிகொண்டிருந்தது. அதனுடைய தலை மற்றும் தோள்பட்டை அந்த குழியினுள் இருந்தது. தன்னுடைய முன்னங்கால்களை கொண்டு தீவிரமாக குழிதோண்டி தன்னுடைய பின்னங்கால்களை கொண்டு குழியிலிருந்து மண்ணை வெளியே தள்ளியது. தன்னுடைய வேலையில் மும்முரமாக இருந்ததால் அது எங்களை கவனிக்கவில்லை.
நான் என்னை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த ஒரு நீண்ட குச்சியை கொண்டு அதன் பின்னிருந்து அதனை குத்தினேன். நான் அதை காயப்படுத்தவில்லை, ஆனால் அது எகிறி மேலே குதித்து எங்களுக்கு நேராக திரும்பியது. நூறு அடி ஓட்டத்தில் ஜோஷும் நானும் ஒரு புதிய உலக சாதனை படைத்தோம்.
நான் என்னுடைய துடுக்குத்தனத்திலிருந்து சிலவற்றை கற்றுக்கொண்டேன்: சிலநேரம் மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடாமல் இருப்பதே சிறந்தது, விசேஷமாக இயேசுவுக்குள் சகவிசுவாசிகளாக உள்ளவர்களிடம் உள்ள உறவில். அப்போஸ்தலர் பவுல் தெசலோனிக்கேயரை “நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும் உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்” (1 தெசலோனிக்கேயர் 4:12) உற்சாகப்படுத்துகிறார். நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் மற்றும் தேவனுடைய கிருபையை கொண்டு வேதவாக்கியங்களை பகிர முயற்சிக்க வேண்டும். மற்றும்சில நேரங்களில் சீர்படுத்தும் கனிவான வார்த்தைகளை வழங்கக்கூட அழைக்கப்பட்டிருப்போம். ஆனால் மற்றவருடைய வாழ்க்கையில் தலையிடாமல் அமைதியாக வாழக் கற்றுக்கொள்வது அவசியம். தேவனுடைய குடும்பத்திற்கு வெளியே உள்ள மற்றவர்களுக்கு அது ஒரு உதாரணமாக இருக்கும் (வ 12). “ஒருவரில் ஒருவர் அன்பு கூர்வதே” (வ 9) நம்முடைய அழைப்பு.

யாருக்கு தெரியும்?
சீன பாரம்பரிய கதைகளின்படி, ஒரு மனிதர் தன்னுடைய விலை உயர்ந்த குதிரைகளில் ஒன்றை தொலைத்துவிட்டார், அவருடைய அந்த இழப்பிற்கு அண்டைவீட்டார் வருத்தத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இந்த மனிதருக்கு பெரிதாக அக்கறை இல்லை. யாருக்கு தெரியும் இது எனக்கு நல்லதாக கூட இருக்கலாம்? என்றார் அவர். ஆச்சர்யமாக, தொலைந்த குதிரை வீடு திரும்பும்போது, தன்னுடன் வேறொரு குதிரையுடன் திரும்பியது. அதற்கு அண்டைவீட்டார் அவரை வாழ்த்தினார், அதற்கு அவர் யாருக்கு தெரியும் இது எனக்கு கெட்டதாககூட இருக்கலாம்? என்றார். அதற்கு ஏற்ற போலவே அவருடைய மகன் புதிய குதிரையின்மீது சவாரி செய்யும் போது கீழே விழுந்து காலை உடைத்து கொண்டான். ராணுவத்திலிருந்து ஆட்கள் அந்த கிராமத்திற்கு வந்து உடல் தகுதியான அனைத்து ஆண்களையும் போரில் சண்டையிட ஆள் சேர்க்க ஆரம்பிக்கும் வரை இது ஒரு துரதிருஷ்டம் போல தோன்றியது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருடைய மகன் சேர்க்கப்படவில்லை. அதுவே அவனுடைய உயிரை மரணத்திலிருந்து பாதுகாத்தது.
அதிர்ஷ்டத்தில் கஷ்டங்களும் ஆசீர்வாதமாக இருக்கும் மற்றும் நேர்எதிராகவும் இருக்கும் என்பதை போதிக்கும் சீன பழமொழிக்கு பின்னால் உள்ள கதை இதுதான். இந்த பண்டைய ஞானம் பிரசங்கி 6:12 உடன் நெருங்கிய இணைப்பு கொண்டது. அதில் அதன் ஆசிரியர்: ஒரு நபரின் வாழ்க்கைக்கு எது நல்லதென்று யாருக்கு தெரியும்? எதிர்காலம் என்ன வைத்திருக்கிறதென்று உண்மையில் நம் யாருக்கும் தெரியாது. துன்பத்தில் கண்டிப்பாக நல்ல பலன்களும் உண்டு, செழிப்பில் கண்டிப்பாக தீய விளைவுகளும் உண்டு, என்பதை கவனிக்கிறார்.
ஒவ்வொரு நாளும் புதிய சந்தர்ப்பங்களை, மகிழ்ச்சிகளை மற்றும் வேதனைகளை அளிக்கிறது. தேவனுடைய அன்புக்குரிய பிள்ளைகளாக நாம் அவருடைய இறையாண்மையில் இளைப்பாறலாம், நல்ல மற்றும் மோசமான நேரங்களிலும் நாம் அவரை நம்பலாம், “தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்” (7:14). நம் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் அவர் நம்முடன் இருக்கிறார் மற்றும் அவருடைய அன்புள்ள அக்கறையை நமக்கு வாக்குப்பண்ணி இருக்கிறார்.

பிதாவை அறிவது
கதைகளின் படி, பிரிட்டிஷ் நடத்துனர் சர் தாமஸ் பீச்சம் விடுதியின் நடைவெளியில் ஒரு வித்தியாசமான தோற்றமுடைய பெண்ணை கண்டார். அவரை தனக்கு தெரியும் என்று நம்பினார் ஆனால் அவரால் அந்தப் பெண்ணின் பெயரை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அவர் அந்த பெண்ணுடன் பேச நின்றார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த பெண்ணுக்கு ஒரு சகோதரர் இருப்பதாக குழப்பத்துடன் நினைவு கூர்ந்தார். ஒரு துப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த பெண்ணிடம் அவருடைய சகோதரர் இப்பொழுது எப்படி இருக்கிறார் என்றும் இன்னும் அவர் இதற்கு முன்பு செய்து வந்த அதே வேலையை தான் இன்னும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறாரா என்றும் கேட்டார். அந்த பெண் அதற்கு “அவர் மிகவும் நன்றாக இருக்கிறார், வழக்கம்போல் வீட்டில் சும்மா இருக்கிறார்” என்றார்.
சர் பீச்சம்க்கு நடந்தது போன்ற தவறாக அடையாளம் கண்டுகொள்ளும் நிகழ்வு என்பது சங்கடமாக இருக்கும். ஆனால் மற்ற நேரங்களில் இதுபோன்ற நிகழ்வு இயேசுவின் சீஷர் பிலிப்புவுக்கு நடந்தது போன்று இன்னும் தீவிரமானதாக இருக்கலாம். நிச்சயமயாக சீஷர்கள் இயேசுவை அறிவார்கள், ஆனாலும் அவர் உண்மையாக யார் என்பதை முழுவதுமாக அடையாளம் காணவில்லை. அவர்கள் இயேசு, “பிதாவைகாண்பிக்க” வேண்டினார்கள். ஆனால் இயேசு அவர்களுக்கு பிரதியுத்திரமாக, “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்றார்” (யோவான் 14:8-9). தேவனுடைய தனித்துவமான குமாரனாக ஒருவரை அறிவதென்பது மற்றவரை அறிவதாகும் என்பதை இயேசு பரிபூரணமாக வெளிப்படுத்தினார் (வ 10-11).
நாம் எப்போதாவது தேவனுடைய குணாதிசயம் என்ன, தனித்தன்மை என்ன, அல்லது அவர் மற்றவரை பற்றி எப்படி அக்கறை கொள்கிறார் என்பதை பற்றி வியப்படைவோமானால் அதை கண்டறிய நாம் இயேசுவை நோக்கிப்பார்த்தாலே போதும். இயேசுவின் குணாதிசயம், தயவு மற்றும் கிருபை, தேவனுடைய குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. என்னதான் நம்முடைய தேவன் நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கும், கிரகித்தலுக்கும் அப்பாற்பட்டவராக இருந்தாலும், அவர் இயேசுவில் தம்மை குறித்து வெளிப்படுத்திய அந்த மாபெரும் பரிசு நம்மிடம் உள்ளது.

பாதுகாப்பது
செடிகளை நட நான் தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, குளிர்கால களைகளின் பெரிய கொத்து ஒன்றை நான் பிடுங்கி… அதை காற்றில் எறிந்தேன். எனது கைகளின் கீழே இருந்த அடர்த்தியான புதரில் ஒரு விஷ பாம்பு படுத்து மறைந்திருந்தது- ஒரு அங்குலம்
கீழே வைத்திருந்தால் தவறுதலாக நான் அதை பிடித்திருப்பேன். அந்த கொத்தை மேலே எடுத்தவுடனே நான் அதின் வண்ணமயமான அடையாளங்களை கண்டேன், அதன் மற்ற பகுதி என் கால்களுக்கு இடையில் இருந்த களைகளில் சுருண்டிருந்தது.
சில அடிகள் தள்ளி என் கால்கள் தரையை அடைந்தபோது, நான் கடிபடாததைக் குறித்து தேவனுக்கு நன்றி செலுத்தினேன். நான் அறியாத மற்ற நேரங்களில் எத்தனை முறை அவர் என்னை பாதுகாத்திருப்பார் என்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டேன்.
தேவன் தன் ஜனத்தை காக்கிறவர். வாக்குத்தம்பண்ணப்பட்ட தேசத்தில் நுழைவதற்கு முன்பு மோசே இஸ்ரவேலர்களிடம் “கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்” . (உபாகமம் 31:8) அவர்கள் தேவனை காணவில்லை ஆயினும்கூட அவர் அவர்களுடன் இருந்தார்.
சில சமயங்களில் நம்மால் புரிந்துகொள்ளமுடியாத கஷ்டமான காரியங்கள் நடக்கின்றன, ஆனாலும் எண்ணிமுடியாதமுறை நாம் விழிப்புடன் இல்லாதபோதும் தேவன் நம்மை பாதுகாத்ததை நாம் பிரதிபலிக்கலாம்.
அவரது ஜனங்கள் மீது அவரது பரிபூரண, தெய்வீக பராமரிப்பு ஒவ்வொரு நாளும் உள்ளது என வேதம் நமக்கு நினைப்பூட்டுகிறது. அவர் எப்பொழுதும் நம்முடனே இருக்கிறார் (மத்தேயு 28:20).