என் கணவர் அடிவானத்தின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு பாறை மிகுந்த கடற்கரையில் உலாவும்போது, மற்றுமொரு மருத்துவ பின்னடைவால் கவலைக்கு உள்ளாகி நான் ஒரு பெரிய பாறையில் அமர்ந்தேன். நான் வீடு திரும்பும்போது என் பிரச்சினைகள் எனக்காகக் காத்திருக்கும் என்றாலும், அந்த தருணத்தில் எனக்கு அமைதி தேவைப்பட்டது. உள்வரும் அலைகள் கருப்பு, துண்டிக்கப்பட்ட பாறைகளுக்கு எதிராக மோதுவதை நான் உறுத்துப் பார்த்தேன். அலையின் வளைவுகளில், ஒரு இருண்ட நிழல் என் கண்களை கொள்ளை கொண்டது. எனது கேமராவில் உள்ள பெரிதாக்கி அருகில் காணும் (ஜூம்) முறையை பயன்படுத்தி, அந்த வடிவத்தை அலைகளின் மேல் அமைதியாக சவாரி செய்யும் கடல் ஆமை என அடையாளம் கண்டு கொண்டேன். அதன் தட்டையான கை போன்ற உறுப்புகள் அகலமாக விரிக்கப்பட்டும் இயக்கம் இல்லாமல் அசைவற்றும் இருந்தன. முகத்தை உப்பிடப்பட்ட மென்காற்றுக்குள் திருப்பி, நான் சிரித்தேன்.

“வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும்” (சங்கீதம் 89:5). எங்கள் ஒப்பிடமுடியாத தேவன் ஆட்சி செய்கிறார். “தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது (தேவன்) அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்” (வச. 9). “பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்” (வசனம் 11). அவர் அனைத்தையும் உருவாக்கினார், அனைத்தையும் சொந்தமாக வைத்திருக்கிறார், அனைத்தையும் நிர்வகிக்கிறார், அனைத்தையும் அவருடைய மகிமைக்காகவும், நம் இன்பத்திற்காகவும் உருவாக்கியிருக்கிறார்.

நம்முடைய விசுவாசத்தின் அஸ்திவாரத்தில் நின்று – மாறாத நம்முடைய தந்தையின் அன்பு – நம்மால் “அவரின் முகத்தின்  வெளிச்சத்தில் நடக்க” முடியும் (வச. 15). தேவன் பெரிதும் வல்லமையுள்ளவராகவும், நம்முடன் நடந்துகொள்வதில் இரக்கமுள்ளவராகவும் இருக்கிறார். நாம் “உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து” இருக்க முடியும் (வச. 16). நாம் என்ன தடைகளை எதிர்கொண்டாலும் அல்லது எத்தனை பின்னடைவுகளைச் தாங்கிக் கொண்டிருக்க நேர்ந்தாலும், அலைகள் உயர்ந்து விழும்போது தேவன் நம்மைப் பிடித்துக் கொள்கிறார்.