என் அப்பா பழைய பாமாலைகளைப் பாடுவதை விரும்பினார். அவருக்கு மிகவும் பிடித்தவற்றுள் ஒன்று “இன் த கார்டன் (தோட்டத்தில்)”. சில ஆண்டுகளுக்கு முன்பு, அவரது அடக்கத்தில் நாங்கள் அதைப் பாடினோம். அனுபல்லவி எளிதானது: “அவர் என்னுடன் நடக்கிறார், அவர் என்னுடன் பேசுகிறார், நான் அவருடையவன் என்று அவர் என்னிடம் கூறுகிறார், நாங்கள் அங்கே தங்கியிருக்கும்போது நாங்கள் பகிர்ந்து கொள்ளும் மகிழ்ச்சி வேறு யாரும் அறிந்திருக்கவில்லை.”அந்த பாடல் என் அப்பாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது – அது எனக்கு கொடுத்தது போலவே.

யோவானின் நற்செய்தியின் 20 ஆம் அதிகாரத்தைப் படித்த பிறகு 1912-ன் வசந்த காலத்தில் இந்த பாமாலையை எழுதியதாக ஸ்தோத்திரப் பாடல் எழுத்தாளர் சி. ஆஸ்டின் மைல்ஸ் கூறுகிறார்.“அன்று நான் அதைப் படிக்கும்போது, நானும் அந்த காட்சியின் ஒரு பகுதியாகத் தெரிந்தேன். மரியாளின் வாழ்க்கையில் அந்த வியத்தகு தருணத்திற்கு அவள் தனது இறைவனுக்கு முன்பாக மண்டியிட்டு, ‘ரபூனி  [போதகர்]’ என்று அழுத அந்த காட்சியின் மெளன சாட்சியாக மாறினேன்.

யோவான் 20-ல், மகதலேனா மரியாள் இயேசுவின் வெறுமையான கல்லறைக்கு அருகில் அழுதுகொண்டிருப்பதைக் காண்கிறோம். அவள் ஏன் அழுகிறாள் என்று கேட்ட ஒரு மனிதனை அங்கே சந்தித்தாள். அது தோட்டக்காரர் என்று நினைத்து, உயிர்த்தெழுந்த மீட்பருடன் பேசினார் – இயேசுவே! அவளுடைய துக்கம் மகிழ்ச்சியாக மாறியது, சீடர்களிடம், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று சொல்ல ஓடினாள். (வச. 18).

இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற உறுதி நமக்கும் இருக்கிறது! அவர் இப்போது பிதாவுடன் பரலோகத்தில் இருக்கிறார், ஆனால் அவர் நம்மை தனியாக விட்டுவிடவில்லை. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு அவருடைய ஆவியானவர் அவர்களுக்குள் இருக்கிறார், அவர் மூலமாக அவர் நம்முடன் இருப்பதையும் நாம் “அவருடையவர்கள்” என்பதை அறிந்து கொள்வதிலும் நமக்கு உறுதியும் மகிழ்ச்சியும் இருக்கிறது,