என் குடும்பம் கிட்டத்தட்ட நூற்றாண்டு பழமையான, அற்புதமாக கடினமான அரைசாந்து பூசப்பட்ட சுவர்கள் உட்பட நிறைய பண்புக்கூறுகளைக் கொண்ட வீட்டில் வசிக்கிறது. இந்த சுவர்களில், ஒரு படத்தைத் தொங்கவிட, நான் ஒரு மர ஆதரவுக்குள் ஆணியைத் துளைக்க வேண்டும் அல்லது ஆதரவுக்காக ஒரு அரைசாந்து நங்கூரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடு கட்டுபவர் எனக்கு எச்சரித்தார். இல்லையெனில், ஒரு அசிங்கமான துளையை ஏற்படுத்தி, படம் தரையில் விழக்கூடிய அபாயத்தை நான் கொண்டிருக்கிறேன்.

ஏசாயா தீர்க்கதரிசி எலியாக்கிம் என்ற சிறிய வேதாகம கதாபாத்திரத்தை விவரிக்க ஒரு சுவரில் உறுதியாக அறையப்பட்ட ஆணியின் உருவத்தை பயன்படுத்தினார். ஊழல் அதிகாரியான செப்னாவைப் (ஏசாயா 22: 15–19) போலவும், தங்களைத் தாங்களே பலப்படுத்திக்கொள்ளப் பார்த்த இஸ்ரவேல் மக்களை போலவுமல்லாமல் (வச. 8–11) – எலியாக்கிம் தேவன்மீது நம்பிக்கை வைத்திருந்தார். எசேக்கியா ராஜாவுக்கு அரண்மனை நிர்வாகியாக எலியாக்கிமின் பதவி உயர்வு குறித்து தீர்க்கதரிசனம் கூறி, எலியாக்கிம் ஒரு “உறுதியான இடத்தில் ஆணியாக கடாவப்படுவார்” என்று ஏசாயா தீர்க்கதரிசனமாக எழுதினார் (வச. 23). தேவனின் சத்தியத்திலும் கிருபையிலும் பாதுகாப்பாக நங்கூரமிட்டிருப்பது எலியாக்கிம் தனது குடும்பத்திற்கும் அவரது மக்களுக்கும் ஒரு ஆதரவாக இருக்க அனுமதிக்கும் (வச. 22-24).

ஆயினும், ஏசாயா இந்த தீர்க்கதரிசனத்தை நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு எந்தவொரு நபரும் உயர் நிலையான பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை ஒரு தெளிவான நினைவூட்டலுடன் முடித்தார் – நாம் அனைவரும் தோல்வியடைகிறோம் (வச. 25). நம்முடைய வாழ்க்கையில் முற்றிலும் நம்பகமான நங்கூரம் இயேசு மட்டுமே (சங்கீதம் 62: 5–6; மத்தேயு 7:24). நாம் மற்றவர்களைக் கவனித்து, அவர்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, ஒருபோதும் தோல்வியடையாத நங்கூரமான அவரிடமும் அவர்களை சுட்டிக்காட்டுவோம்.