வகை  |  odb

புதிய கண்களுடன் பார்த்தல்

வீடியோ கேம், இது ஒரு கலாச்சார நிகழ்வாக மாறியுள்ளது, ஒரு மெய்நிகர் (வெர்சுவல்) தீவில் நூறு வீரர்களை இடம்பெறச் செய்து இறுதியில் ஒரே ஒரு வீரர் மிஞ்சும் வரை போட்டியிட வைக்கிறது. ஒரு வீரர் உங்களை போட்டியில் இருந்து நீக்கும் போதெல்லாம், அந்த வீரரின் வான்டேஜ் புள்ளியை நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுவது போல், “நீங்கள் மற்றொரு வீரரின் மனநிலையில் நுழைந்து அவர்களின் நோக்கில் பார்க்கும்போது, ​​உணர்ச்சி பதிவு. . . சுய பாதுகாப்பிலிருந்து ......... இனவாத ஒற்றுமையாக மாறுகிறது.  . . .  நீங்கள் மிக நீண்ட காலத்திற்கு முன்பு அல்லாத, அந்நியரிடம் முதலீடு செய்ததை உணரத் தொடங்குகிறீர்கள்.”

மற்றொருவரின் அனுபவத்தைக் காண நாம் நமது உள்ளத்தை திறக்கும் போதெல்லாம், நம்முடைய சொந்த பார்வைக்கு அப்பால் பார்த்து, மற்றொருவரின் வலி, பயம் அல்லது நம்பிக்கையை எதிர்கொள்ளும் போது மாற்றம் நிகழ்கிறது. நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், அதற்கு பதிலாக “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.”, அப்படியானால் நாம் தவறவிட்ட விஷயங்களை கவனிக்கிறோம் (பிலிப்பியர் 2: 3). நம்டைய கவலைகள் விரிவடைகின்றன. நாம் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறோம். நம்முடைய சொந்த தேவைகள் அல்லது மனக்கவலைகளில் மட்டுமே ஈடுபடுவதை விட, மற்றவர்களின் நல்வாழ்வில் முதலீடு செய்பவர்களாகிறோம். “[நமது] சொந்த நலன்களை” பார்ப்பதற்குப் பதிலாக, “மற்றவர்கள் நலன்களுக்காக நாம் உறுதியாக இருக்கிறோம்”(வச.. 4). நாம் செழிக்க வேண்டும் என்று கருதுவதைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள் செழிக்க உதவும் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் பின்பற்றுகிறோம்.

இந்த மாற்றப்பட்ட பார்வையால், நாம் மற்றவர்களுக்காக இரக்கம் கொள்கிறோம். நமது குடும்பத்தை நேசிக்க புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறோம். நாம் எதிரியிடமிருந்து கூட ஒரு நண்பரை உருவாக்கலாம்!

அனைத்து ஆறுதலின் தேவன்

டிம்மி ஒரு குட்டி பூனை, அதின் உரிமையாளர் அது குணமடைய இயலாதவாறு நோயுற்றிருப்பதாக நினைத்து அதை விலங்குள் காப்பகத்தில் விட்டார், அந்த பூனைக்குட்டி மீண்டும் ஆரோக்கியம் பெறும்படியாக கவனிக்கப்பட்டு, கால்நடை மருத்துவரால் தத்தெடுக்கப்பட்டது. பின்னர் அது முழுநேர காப்பகவாசியாக ஆனது, இப்போது தனது நாட்களை அறுவை சிகிச்சையிலிருந்து அல்லது ஒரு நோயிலிருந்து மீண்டுவரும் பூனைகள் மற்றும் நாய்களுக்கு "ஆறுதலளிக்கும்" வகையில் – தனது நாட்களை செலவிடுகிறது.

இந்த கதை, நம்முடைய அன்பான தேவன் நமக்காக என்ன செய்கிறார் என்பதற்கும், அதற்கு பதிலாக மற்றவர்களுக்காக நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கும் ஒரு சிறிய உதாரணம். நம்முடைய நோய்களிலும் போராட்டங்களிலும் அவர் நம்மைக் கவனித்துக்கொள்கிறார், மேலும் அவர் தம்முடைய பிரசன்னத்தினால் நம்மைத் ஆறுதல்படுத்துகிறார். 2 கொரிந்தியரில் அப்போஸ்தலனாகிய பவுல் நம் தேவனை “இரக்கத்தின் பிதா, சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவர்” என்று அழைக்கிறார் (1:3). நாம் ஊக்கம் இழக்கும்போது, மனச்சோர்வில் உள்ளபோது அல்லது தவறாக நடத்தப்படும்போது, ​​அவர் நமக்காக இருக்கிறார். நாம் ஜெபத்தில் அவரிடம் திரும்பும்போது, ​​அவர் “சகல உபத்திரவங்களிலேயும் அவரே நமக்கு  ஆறுதல்செய்கிறவர்” (வச.. 4).

ஆனால் 4 வது வசனம் அங்கு முடியவில்லை. கடுமையான துன்பங்களை அனுபவித்த பவுல் தொடர்கிறார், "எந்தவொரு பிரச்சனையிலும் இருப்பவர்களை நாம் தேவனிடமிருந்து பெறும் ஆறுதலால் ஆறுதல்படுத்த முடியும்." நமது பிதா நம்மை ஆறுதல்படுத்துகிறார், அவருடைய ஆறுதலை நாம் அனுபவிக்கிறபோது, ​​மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்க நாம் திராணியுள்ளவர்களாக்கப்டுகிறோம்.

நமக்காக துன்பப்பட்ட இரக்கமுள்ள இரட்சகர், நாம் அவதிப்படுகிற துன்பத்தை விட அதிகமாக நம்மை ஆறுதல்படுத்துகிறார் (வச.. 5). அவர் நம்முடைய வலியில்  நமக்கு உதவுகிறார், மற்றவர்களுக்கும் அவ்வாறே செய்ய நம்மை தயார்படுத்துகிறார். 

கடினமான மக்கள்

லூசி வோர்ஸ்லி ஒரு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். பெரும்பாலான மக்களிடையே பிரசித்திபெற்ற மனிதர்களைப் போல, அவருக்கு சில நேரங்களில் மோசமான மின்னஞ்சல்கள் வரும் – அவருடைய விஷயத்தில், அவருடைய பேச்சின் தடையால் அவளுடைய r-உச்சரிப்பு w-உச்சரிப்பாக ஒலித்தது. ஒருவர் இவ்வாறு எழுதினார்: "லூசி, நான் மழுங்கி இருப்பேன்: உங்கள் சோம்பேறித்தனமான பேச்சை சரி செய்ய கடினமாக முயற்சியுங்கள் அல்லது உங்கள் பேச்சுக் குறிப்புகளிலிருந்து r-ஐ நீக்குங்கள். ஏனெனில் உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அமர்ந்து என்னால் பார்க்க முடியவில்லை அது என்னை கோபமூட்டுகிறது. அன்புடன், டேரன். ”

சிலருக்கு, இது போன்ற ஒரு உணர்ச்சியற்ற கருத்து அதற்கு சமமான முரட்டுத்தனமான பதிலைத் தருவதற்கு தூண்டக்கூடும். ஆனால் லூசி இவ்விதமாக பதிலளித்தார்: “ஓ டேரன், நீங்கள் என் முகத்திற்கு நேராக சொல்ல துணியாத ஒன்றைச் சொல்ல இணையத்தின் அநாமதேயத்தைப் பயன்படுத்தினீர்கள் என்று நினைக்கிறேன். தயவுசெய்து உங்கள் தயவற்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்! லூசி. ”

லூசியின் அந்த மெதுவான பிரதியுத்திரம் வேலை செய்தது. டேரன் மன்னிப்பு கேட்டு, அத்தகைய மின்னஞ்சலை மீண்டும் யாருக்கும் அனுப்ப மாட்டேன் என்று உறுதியளித்தார்..

“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும், ஆனால் கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (15:1). கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். (வச.. 18). சக ஊழியரிடமிருந்து ஒரு விமர்சனக் கருத்து, குடும்ப உறுப்பினரிடமிருந்து ஒரு மோசமான கருத்து அல்லது தெரியாத நபரிடமிருந்து ஒரு மோசமான பதில் ஆகியவற்றைப் பெறும்போது, நம்முடைய தேர்வு இவ்வாறு இருக்கிறது: தீப்பிழம்புகளைத் தூண்டும் கோபமான வார்த்தைகளைப் பேச அல்லது அதை அணைக்கும் மென்மையான சொற்களைப் பேச. 

கோபத்தை  மாற்றும் வார்த்தைகளைப் பேச தேவன் நமக்கு உதவுவாராக - மற்றும் கடினமான நபர்களை மாற்றவும் உதவுவாராக. 

உங்களுக்கு இயேசுவின் வாக்குறுதி

ரோஹித்தின் பெற்றோர்கள் அவனை ஷீலாவிடம் ஒப்படைத்தபோது அழுதான். இது அவனது அம்மாவும் அப்பாவும் அவனை அங்கே விட்டுவிட்டு ஆராதனைக்கு சென்றதால் குழந்தை பருவத்திலிருக்கும் அவனுக்கு முதல் ஞாயிறு பள்ளி – அவன் அங்கு மகிழ்ச்சியாக இல்லை. அவன் நன்றாக இருப்பான் என்று ஷீலா அவர்களுக்கு உறுதியளித்தார். அவள் அவனை பொம்மைகளாலும் புத்தகங்களாலும் ஆறுதல்படுத்த முயன்றாள், ஒரு நாற்காலியில் ஆடிக்கொண்டிருந்தாள், சுற்றி நடந்தாள், அசையாமல் நின்றாள், அவனுக்கு என்ன வேடிக்கையாக இருக்குமோ அதை பேசினாள். ஆனால் எல்லா முயற்சியும் அதிக கண்ணீரையும் மற்றும் சத்தமான அழுகையையும் ஏற்படுதியது. பின்னர் அவள் அவன் காதில் ஐந்து எளிய சொற்களைக் கிசுகிசுத்தாள்: “நான் உன்னுடன் இருப்பேன்.” அமைதியும் ஆறுதலும் விரைவாக வந்தது.

சிலுவையில் அறையப்பட்ட அந்த வாரத்தில் இயேசு தம் நண்பர்களுக்கு இதேபோன்ற ஆறுதலான வார்த்தைகளை வழங்கினார்: “பிதா. . . உங்களுக்கு உதவவும், என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்”(யோவான் 14: 16-17). அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு அவர் இந்த வாக்குத்தத்தை  அவர்களுக்குக் கொடுத்தார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.” (மத்தேயு 28:20). இயேசு விரைவில் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தார், ஆனால் அவர் ஆவியானவரை தம் மக்களுக்குள் "தங்கி” மற்றும் வாழ அனுப்புவார்.

நமக்கு கண்ணீர் வழியும் போது ஆவியியானவரின் ஆறுதலையும் சமாதானத்தையும் அனுபவிக்கிறோம். நாம் என்ன செய்வது என்று யோசிக்கும்போது அவருடைய வழிகாட்டுதலைப் பெறுகிறோம் (யோவான் 14:26). தேவனைப் பற்றி மேலும் புரிந்துகொள்ளும்படிக்கு அவர் நமக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைத் திறக்கிறார் (எபேசியர் 1: 17-20), நம்முடைய பலவீனத்தில் அவர் நமக்கு உதவுகிறார், நமக்காக வேண்டுதல்செய்கிறார் (ரோமர் 8: 26-27).

அவர் என்றென்றும் நம்முடன் இருக்கிறார்.