வீடியோ கேம், இது ஒரு கலாச்சார நிகழ்வாக மாறியுள்ளது, ஒரு மெய்நிகர் (வெர்சுவல்) தீவில் நூறு வீரர்களை இடம்பெறச் செய்து இறுதியில் ஒரே ஒரு வீரர் மிஞ்சும் வரை போட்டியிட வைக்கிறது. ஒரு வீரர் உங்களை போட்டியில் இருந்து நீக்கும் போதெல்லாம், அந்த வீரரின் வான்டேஜ் புள்ளியை நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம். ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுவது போல், “நீங்கள் மற்றொரு வீரரின் மனநிலையில் நுழைந்து அவர்களின் நோக்கில் பார்க்கும்போது, ​​உணர்ச்சி பதிவு. . . சுய பாதுகாப்பிலிருந்து ……… இனவாத ஒற்றுமையாக மாறுகிறது.  . . .  நீங்கள் மிக நீண்ட காலத்திற்கு முன்பு அல்லாத, அந்நியரிடம் முதலீடு செய்ததை உணரத் தொடங்குகிறீர்கள்.”

மற்றொருவரின் அனுபவத்தைக் காண நாம் நமது உள்ளத்தை திறக்கும் போதெல்லாம், நம்முடைய சொந்த பார்வைக்கு அப்பால் பார்த்து, மற்றொருவரின் வலி, பயம் அல்லது நம்பிக்கையை எதிர்கொள்ளும் போது மாற்றம் நிகழ்கிறது. நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, “ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், அதற்கு பதிலாக “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.”, அப்படியானால் நாம் தவறவிட்ட விஷயங்களை கவனிக்கிறோம் (பிலிப்பியர் 2: 3). நம்டைய கவலைகள் விரிவடைகின்றன. நாம் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறோம். நம்முடைய சொந்த தேவைகள் அல்லது மனக்கவலைகளில் மட்டுமே ஈடுபடுவதை விட, மற்றவர்களின் நல்வாழ்வில் முதலீடு செய்பவர்களாகிறோம். “[நமது] சொந்த நலன்களை” பார்ப்பதற்குப் பதிலாக, “மற்றவர்கள் நலன்களுக்காக நாம் உறுதியாக இருக்கிறோம்”(வச.. 4). நாம் செழிக்க வேண்டும் என்று கருதுவதைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள் செழிக்க உதவும் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் பின்பற்றுகிறோம்.

இந்த மாற்றப்பட்ட பார்வையால், நாம் மற்றவர்களுக்காக இரக்கம் கொள்கிறோம். நமது குடும்பத்தை நேசிக்க புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறோம். நாம் எதிரியிடமிருந்து கூட ஒரு நண்பரை உருவாக்கலாம்!